Friday, January 30, 2015

தமிழர்களை வெறுக்கும் மலையாளிகளும் கன்னடர்களும்

மலையாள படங்களை தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். தமிழ் சினிமாவையும், தமிழர்களின் வாழ்வையும் ஒவ்வொரு படத்திலும் கேலியாக எங்கேயாவது ஒரு இடத்தில் சித்தரித்து இருப்பார்கள். டிவி மாற்றும்போது தமிழ் சேனல் வருவது, ஊரிலிருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்கு வருவது, எதாவது ஒரு தமிழர் வேலையாளாக இருப்பது அவர் கடன் கேட்டு பல்லிளிப்பது என்று மிகச் சாதாரணமாகத்தான் சொல்லப்பட்டிருக்கும்.
எப்போதாவது பார்பவர்களுக்கு இது ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கும். தொடர்ச்சியாக மலையாளப் படங்களை பார்ப்பவர்களுக்கு இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக் தெரியும். ஓரிடண்டு காட்சியில் வருபவர்கள் ஒரு முழுபாத்திரமுமாக வருபவர்கள் என்று எல்லோரும் கெட்டவர்களாக, மலையாளிகளை அடிப்பவர்களாக, கேரள இடங்களில் வேலைக்கு வந்து அத்துமீறுபவர்களாக இருப்பார்கள். தமிழர்கள் தோன்றும் ஓரிடண்டு படங்களைத்தவிர எல்லாமும் இப்படி இருப்பதை எப்படி புரிந்து கொள்வது என நமக்கு தெரியாமல் இருக்கும். மிக மெண்மையாக ஒரு சாதாரண காமெடியில் கூட இதை புகுத்தியிருப்பார்கள்.

Thursday, January 29, 2015

அமெரிக்க ஆங்கிலமும் பிரிட்டிஷ் ஆங்கிலமும்

ஆங்கிலேயர்கள் என்கிற பதம் எல்லா வெள்ளை இனத்தவர்களையும் குறிக்கும் என நாம் நினைத்திருக்கிறோம். ஸ்பானிஷ், சுவீடிஸ், பிரன்ச், ஜெர்மென், அத்தோடு வட அமெரிக்க, தென் அமெரிக்க மக்களும் வெள்ளையாகத்தான் இருப்பார்கள். அத்தோடு ஆங்கிலம் பேசும் எல்லோரையும் ஆங்கிலேயர்கள் என்றும் நினைத்திருக்கிறோம். ஆனால் அமெரிக்கரை ஆங்கிலேயர் (இங்கிலீஷ் மேன்) என்று சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டார். கர்நாடகா ஆந்திராவை தாண்டிவிட்டால் எல்லாமே வடஇந்தியா என்று நாம் சொல்வதுபோல இது. ஒரு மராட்டி, ஒடியா, ஏன் பெங்காலி, ராஜஸ்தானிகூட தான் வடஇந்தியர் என்று அழைக்கப்படுவதை ஒத்துக்கொள்ள மாட்டார். மத்திய பிரதேசம்கூட இல்லை, உபி, பீகார், உத்திரகாண்ட், தில்லி போன்ற இடங்களில் வசிப்பவர்களை மட்டுமே வடஇந்தியர்கள் என்று சொல்லமுடியும். பிரிட்டனில் வாழ்பவர் மட்டும் ஆங்கிலேயர் என்பதை ஓரளவு ஒத்துக்கொள்வார். பிரிட்டன் வகிக்கும் யுகேவில் இருக்கும் வட அயர்லாந்தை சேர்ந்தவர் தன்னை ஆங்கிலேயர் அல்ல ஐரிஷ் என்பார்.

Wednesday, January 28, 2015

அரசு வேலையும் தனியார் வேலையும்

அரசு வேலை மீது வெறுப்புவர என் அப்பாதான் காரணம். அரசூழியரான அவர் சலிப்புடன் வேலை செல்வதாக தோன்றும். நல்ல உடைகள், கம்பீரமான தோற்றத்துடன் அவர் அலுவலகம் சென்றதாக நினைவில்லை. சில நேரங்களில் சென்றிருக்கலாம். ஆனால் ஒரு அலுப்பு அல்லது உற்சாகமின்மை எப்போதும் இருப்பதை அவர்களிடம் கவனித்திருக்கிறேன். இந்த ஒன்றே அரசு வேலைமீது வெறுப்பை ஊட்ட காரணமாக இருந்திருக்கலாம்.
அரசு வேலைகள் ஒரு காலத்தில் மிக முக்கியமானவையாக இருந்தன. ஆனால் இன்று அப்படி இல்லை. அப்போது அரசு வேலைகள் தாம் அதிகம் இருந்தன. அதை நம்பியே வாழவேண்டிய தேவை படித்தவர்களுக்கு 70-80ல அப்படி ஒரு நிலை இருந்தது. தனியார் வேலைகள் கவுரவ குறைவாக, படிபறிவில்லாதவனின் வேலை செய்யும் இடமாக பார்க்கப்பட்டது. 90லில் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. தனியார் வேலைகள் நிறைய அதுவும் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வர தொடங்கியதும் நிலமை முற்றிலுமாக‌ மாறத் தொடங்கியது.

Tuesday, January 27, 2015

பெயரா பட்டமா: ஈவேராவா பெரியாரா

சில ஆண்டுகளுக்கு முன்னால், என்னை பேர் சொல்லி அழைக்கும் அளவிற்கு தமிழகத்தில் தரம் தாழ்ந்திவிட்டது என்றார் திமுகவின் தலைவர். அப்போது அவர் ஆட்சியில் இருந்து இறங்கியிருந்தார், எதிர்க்கட்சியாககூட இல்லை. அதேபோல் ஒரு சமயம் ஆட்சியில் இருந்தபோது அதிமுக தலைவியை புரட்சி தலைவி என்று மேடையில் சொல்லாமல் பெயரைச் சொன்னதால் இயக்குனர் மனிரத்தினம் வீட்டில் குண்டுவிசப்பட்டது. இதேபோல் பல்வேறு சமயங்களில் ஆட்சியில் இருப்பவர்களை அவர்களின் பெயர்களை மட்டும் சொன்னதால் பல இன்னல்களை சொன்னவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
ஆட்சியில் இருப்பவர்களை எதாவது ஒரு பட்டபெயர் சொல்லியே அழைக்க வேண்டும் என்கிற கட்டாயம் தமிழகத்தில் உண்டு. விதிவிலக்காக ஈவேரா, அவரை பெரியார் என்றோ, வைக்கம்வீரர் என்றோதான் அழைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இப்போதும் இருக்கிறது. கர்மவீரர் காமராஜர், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜியார், புரட்சிதலைவிஅம்மா ஜெயலலிதா, தளபதி ஸ்டாலின், கேப்டன் விஜயகாந்த், வைகோ (பெயரை முழுமையாக சொல்லக்கூடாது). அவர்களின் பெயர்களை இந்த பட்ட பெயர்களோடு சேர்த்து மட்டுமே அழைக்க வேண்டும். ஆனால் சிலரை பட்டபெயரை மட்டுமே சொல்ல வேண்டும் என்றும் விதியிருக்கிறது.
எம்ஜியார் தமிழ்ப் பல்கலைகழகம் ஆரம்பித்தபோது மேடையில் இருந்த துணைவேந்தர், மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்று அழைத்தார். எம்ஜியார் எதுவும் சொல்லாமல் இருந்தார், அதற்கு பின்னால் துணைவேந்தருக்கு எந்த நெருக்கடியோ, நீர்பந்தமோ ஏற்படவும்வில்லை.
ஆனால் சாதாரணம் தமிழக அரசியல் மேடையில் எப்போதும் சின்ன மாவட்ட தலைவர், செயலர்களை ஒரு பட்டத்தோடுதான் அழைக்கப்படுகிறது. புரட்சி சுகுமாரன், தளபதி வெங்கட், சின்னதளபதி சுரேஷ், என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டம் இருக்கிறது. பட்டம் இல்லாதவர் அவ்வளவாக பிரபலமாகாதவர். பட்டத்தால் என்ன பயன்? ஒன்று அவரின் பெயர் பட்டத்தோடு சேர்ந்து வருவதால் தன் பெயருக்கு ஒரு மதிப்பு கூடுவதாக நினைக்கிறார். மற்றொன்று தனக்கான ஒரு அடையாளமாக அதை நினைப்பது.
தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் அண்ணன் என்றோ, அவரின் சர்நேம் (இரண்டாம் பெயர்) கொண்டோ அழைத்தால் அவர் மரியாதைச் செய்யப்பட்டதாக் நினைக்கிறார். நமக்கு இரண்டாம் பெயர் இல்லாததால், அல்லது பயன்பாட்டில் இல்லாததால், இந்த மாதிரியான பட்டங்கள் தேவைப்படுகின்றன என நினைக்கிறேன். பொதுவாக அவர்கள் தங்களை அரசியலில் வரவழிவகுத்த தலைவர்களின் அல்லது தங்கள் கட்சியின் தலைவர்களின் பட்டங்களை சுருக்கி அல்லது நீட்டி தனக்கு வைத்துக்கொள்பவர்களாக் இருப்பார்கள். இதனால் அவர் இன்னாரின் அடிபொடி என்று தெரிந்துவிடும் நன்மை இருக்கிறது. இது எதிர்களுக்கு ஒரு சவாலாகவும், தன‌க்கு கீழுள்ளவர்களுக்கு ஒரு தன் தலைமையின் நெருக்கத்தை உணர்த்துவதுமாக இருக்கிறது.

Friday, January 23, 2015

பழையப் பாடல்

பல்வேறு தொழிற்நுட்பத்தில் உருவாகிவரும் இசைகள், வேறுமொழி இசைப்பாடல்கள், மேற்குலகிலிருந்து வெளிவரும் இசைக்கோர்வைகள் என்று  ஒவ்வொரு நாளும் வந்துக்கொண்டிருந்தாலும் நாம் முன்பே கேட்டுபழகிய பழைய பாடல்கள் மீண்டும் கேட்பதில் அலாதியான இன்பம் இருக்கவே செய்கிறது. புதிய வந்திருக்கும் அனிருதின் இசை புதிய வகை இசையாக இருந்தாலும் நம் அமைதியான சூழல்களில், நம் பிரத்தியேக மகிழ்ச்சி தருணத்தில் நாம் விரும்புவது நமக்கே என்று இருக்கு சில பழைய பாடல்கள்தான். உங்களுக்குப் பிடித்த பாடல்கள் என்னென்ன என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு லிஸ்ட் காட்டக்கூடிய அளவிற்கு அவர்களிடம் ஒரு தனிப்பாடல் தொகுப்பு இருக்கும். இதைப் பல சமயங்களில் நான் கண்டிருக்கிறேன். ஒரு வீட்டிற்கு சென்றபோது  அங்கிருந்த 90 வயது முதியவர் அவருக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி சொன்னார் அத்தனையும் நான் கேட்டேயிராத 40-50களில் வந்த பாடல்கள், மிக அருமையான குரலில் தன் வெட்கத்தையும், சுற்றியிருந்த மக்களையும் மறந்து பாடிக்காட்டினார்.

Thursday, January 22, 2015

சினிமாவும் குடியும்

தமிழகத்தில் மிக முக்கிய நிகழ்வு ஒன்று உண்டு என்றால் அது சினிமாதான். ஒவ்வொரு வெள்ளியும் சினிமா வெளியானாலும் வருடத்திற்கு 200க்கு மேற்ப்பட்ட சினிமாக்கள் வந்தாலும் தமிழ‌கத்தில் சினிமா மீதான மோகம் குறைய செய்யாது. சினிமா தவிர வேறு எந்த பொழுதுபோக்குகளும் தமிழ் மக்களுக்கு கிடையாது. கலைகளுக்கு தொடர்புடைய வாசிப்பு, இலக்கியம், புராணம், நாடகம், போன்ற எதுவும் நமக்கு கிடையாது. அப்படி இருந்தவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக கவனிப்பாரற்று காணமல் போய்விட்டது. பட்டிமன்றம் என்ற வகை மட்டும் கொஞ்சம் உயிரோடு இருக்கிறது. அதுகூட ஆழ்ந்த கலைவெளிப்பாடாக இல்லாமல் தினசரி பிரச்சனைகளை பேசுகின்ற அல்லது சினிமாவையே அடியொற்றி (சினிமா பாடல்கள், காட்சிகள் பற்றி) பேசுவதாகவே இருக்கிறது.

Wednesday, January 21, 2015

வீட்டுவிலங்குகளும் குழந்தைமனமும்

விடுமுறையில் மாட்டுப்பொங்கல் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் கவனித்துக்கொண்டிருந்த என் ஐந்துவயது மகன் அன்றிரவு நான் வீட்டிற்கு வந்ததும் ஸ்டிக்கர் பொட்டு, மை என்று அலங்கரித்திருந்த நாயை பெருமையுடன் எடுத்துவந்து காட்டினான், என்னப்பா இது என்றேன். மாட்டுப்பொங்கல் பா என்றான். அது ஒரு பொம்மை நாய். மாட்டுப்பொங்கல் அன்று விலங்குகளை அலங்கரிக்க வேண்டும் என தெரிந்து வைத்திருக்கும் அவன் அறிவை நினைத்து வியந்தேன். அதேவேளையில் நான் பெற்ற மாட்டுப்பொங்கல் அனுபவங்களை அவன் பெறவில்லை என்ற வருத்தமும் ஏற்பட்டது. ஒருவேளை என் அப்பாவும் அப்படி நினைத்திருக்கலாம். நான் சிறுநகரத்தில் என் இளமைபருவத்தில் வாழ்ந்தவன், கிராமத்தில் வாழ்ந்தவர்கள் இதைவிட விலங்குகளுடன் நன்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

Tuesday, January 20, 2015

காலந்தோறும் உணவு



ஒரு காலை உணவகத்தில் சாப்பிடும்போது பக்கத்தில் இருந்த‌ 70 வயது மதிக்கதக்க‌ ஒரு முதியவர் ஒருவ‌ர் ஒரு பிளேட் ரவா கேசரியை முழுமையாக‌ உண்டு கொண்டிருந்தார். சற்று ஆச்சரியம் தான். அவரின் இந்த வயதில் பொதுவாக சர்க்கரை நோயாளியாக இருப்பார்கள் அல்லது இனிப்பை விட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் நிதானமாக‌, உற்சாக‌ உடல்மொழியுடன் அதை சாப்பிடுவதைப் பார்க்கும்போது அதை நீண்ட நாட்களுக்குப் பின் அவர் மிகவிருப்பி உண்ணும் உணவாக‌ இருக்கும் என‌ தோன்றியது. ஒருவேளை அவருக்கு சக்கரை கடுமையாக இருந்திருக்கலாம், அதன் அளவு குறைந்தபின், டாக்டர்களின் பரிந்துரையின்படி, அந்த மகிழ்ச்சியை கொண்டாட கேசரியுடன் தொடங்கியிருக்கலாம் என நினைக்கிறேன். இது ஒரு நினைப்புதான். இருந்தாலும் இந்த வயது உள்ளவர்களின் மிகப்பெரிய ஆசையே அவர்களுக்கு தடை செய்யப்பட உணவுகளை உண்ணவேண்டும் என ஆசைப்படுவதுதான்.

Monday, January 19, 2015

புத்தக அலமாரியும் ஷூஅலமாரியும்



புத்தகக் கண்காட்சியை காண செல்வதும் அதைப் பற்றி கட்டுரை எழுதுவதும் ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது. புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதும் எந்தஒரு கட்டுரையும் தினம் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாகதான் பார்க்கப்படுகிறது செய்தி நிகழ்சிகளைப் போல, அறிக்கைகள் அறிவித்தல்போல, புத்தகக் கண்காட்சியின் கட்டுரைகள் வெளியாகின்றன‌. இதைப் படிக்கிறவர்கள் அதிகமாகிவிட்ட ஈசல்களை பிடிக்க எண்ணெய் தடவிய காகிதத்தை பயன்படுத்துவதுபோல கட்டுரைகளை வடிகட்டி கடந்து செல்கிறார்கள். கட்டுரைகளில் பேசப்படுகின்ற செய்திகளும் ஒன்றுபோல தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஒரே மாதிரி விளக்கி செல்வதுதான் எல்லா கட்டுரைகளிலும் காணக் முடிகிறது. அடுத்த ஆண்டும் வந்துவிடுகிறது, சென்னை புத்தகக் கண்காட்சி போர்டில் முன்னால் இருக்கும் எண்ணில் ஒரு எண் கூடிவிடுகிறது. அந்த ஆண்டு முந்தைய ஆண்டைவிட எத்தனை அதிக பரப்பளவில் எத்தனை அதிக கடைகள், எத்தனை பாப்க்கார்ன் கடைகள், எத்தனை தண்ணீர் தொட்டிகள் போன்ற விவரங்கள் தாங்கிய அந்த படங்களுடன் கூடிய‌ கட்டுரைகள் வெளியாகி மீண்டும் பரபரப்பாகி விடுகின்றன. ஊடகங்களும் புத்தக கடைகாரரின் பேட்டியும், சாப்பாட்டு கடைகளின் முதலாளியின் பேட்டி தொலைக்காட்சிலும் வார‌இதழ்களிலும் வெளியிட்டு மேலும் பரபரப்பூட்டுகிறார்கள்.



Friday, January 16, 2015

சென்னை மீட்டர் ஆட்டோ



சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் காலை எழுந்ததும் முதல் சவாரியில் அன்றைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து சென்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ஆட்டோவையே எடுக்கிறார்கள். ஆகவே நாம் கூலி, பணம், அதிகம், குறைப்பு என்று எதைப்பேசினாலும் அவர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணுகிறது. சாவுகிராக்கி என்று வசையோடுதான் அப்புறம் பேச்சை ஆரம்பிக்கிறார்கள்.
பொதுவாக ஆட்டோகாரர்கள் மிகுந்த கஷ்டத்துடன் வேலைசெய்வதாகவும், பயணிகளான நமக்காக சேவை மனப்பாண்மையுடன் செயல்படுவதாகவும் ஒரு எண்ணம் சிலரிடையே உண்டு. இவ்வளவு கடினமான வேலையை அவர்கள் செய்ய‌ பயணிகளை துரத்திவந்து பிடிப்பது ஏன் என்றுதான் புரிவதில்லை. அவர்களின் அன்றைய நாளின் மிகப்பெரிய காரியமே யாரை எப்படி ஏமாற்றலாம் என்பதுதான். ஆட்டோ ஓட்டுவதை நேர்மையான ஒரு செயலாக ஆட்டோ ஓட்டுநரே நினைப்பதில்லை. எப்படி அரசாங்க வேலையில் லஞ்சம் கூத்தாடுகிறதோ அதுபோல. ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறேன் எனபதை நேர்மையில்லா வேலை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். சென்னையில் மிக குறைவான நபர்கள் மட்டுமே ஆட்டோவை நேர்மையாக பணம் வாங்குபவர்கள்.

Thursday, January 15, 2015

கிராமம்-நகரம்-கிராமம்



முன்பு பழைய சினிமாக்களில் நாயகன் கிராமத்திலிருந்து கிளம்பி நகரத்திற்கு செல்லும் முதல் காட்சியுடன் படம் ஆரம்பிக்கும். அதற்குபின் டைட்டில்கள் வரும் அந்த அளவிற்கு அடுத்து என்ன என்கிற சஸ்பென்ஸை உருவாக்குகிறார்கள். இது எல்லா இந்திய மொழி திரைப்படங்களிலும் காணலாம். அந்த சம‌யங்களில் நகரம் மிக செலவு ஏறியதாக இருந்தது. இன்றும் நகரம் செலவேறிய விஷயம்தான் ஆனால் அதற்கு தகுந்தாற்போல் வரவு வரகூடிய இடமும் இன்று நகரம்தான். முன்பு பஞ்சத்திற்காக நகரத்திற்கு வந்துகொண்டிருந்தார்கள் இன்று வேலைக்காக வந்து கொண்டிருந்தவர்கள் மீண்டும் பஞ்சத்திற்காக வர தொடங்கியிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் செய்தி.

Wednesday, January 14, 2015

பெருமாள் முருகனின் சரணாகதி



 
பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலை அதில் சொல்லப்பட்ட ஒரு பகுதிக்காக‌ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, மிரட்டி, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து மன்னிப்பு கேட்கவைத்து, என்று பல்வேறு விஷயங்கள் செய்யப்பட்டு புத்தகம் திரும்ப பெற்றுக்கொள்வதாக அதில் உள்ள திருச்செங்கோடு என்று ஊரின் பெயரை நீக்குவதாக, இனிமேல் எழுதப்போவதில்லை என்றும் கூறவைத்திருக்கிறார்கள்.
ஒரு எழுத்தாளருக்கு மட்டும் பெரிய இழப்பு அல்ல இந்த சமூகத்திற்கும்தான். இந்த ஒரு விஷயம் கேரளாவிலோ கர்நாடகாவிலோ நடந்திருக்காது என நினைக்கிறேன். பஷீர் இறந்தபோது முதல் பக்கம் முழுவதும் செய்தி வந்ததாக கூறுவார்கள். அனந்தமூர்த்தி இறந்தபோது அப்படி கர்நாடகாவில் நடந்து நாமே பார்த்தோம். தமிழகத்தில் பழமையான மொழி, தொன்மையான மொழி, தனிபெரும் மொழி என்று கூறிக்கொள்ளும் நாம் இன்னும் மொழி, இலக்கியம் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இருப்பதும், நம்மைவிட சகிப்பு தம்மையுடன் அவர்கள் செயல்படுவது நாம் இன்னும் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது தெரிவித்துவிடுகிறது.



Tuesday, January 13, 2015

இன்றைய காமம்



நான் பள்ளியில் படித்தபோது சக‌பெண் பிள்ளையை கிண்டல் அடித்தார்கள் என்பதற்காக அந்த பெண்ணின் மாமா எங்கள் வகுப்பறைக்கு வந்து அந்த இரண்டு சிறுவர்களையும் ரத்தம்வர‌ அடித்து நொறுக்கி மிரட்டிவிட்டு சென்றார். அந்த நேரம் மதிய உணவு இடைவெளி நேரம். ஆகவே அவர் வந்தது யாருக்கும் தெரியவில்லை. தெரிந்தபின் பள்ளியில் ஆசிரியர்களிடையே பெரிய விவாதமாக ஆகிவிட்டது. எப்படி ஒருவர் உள்ளே வந்து அடிக்கலாம் என்று. அந்த சிறுவர்கள் வறிய ஏழ்மை குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் பெரிய பிரச்சனையாக ஆகாமல் தடுக்கப்பட்டுவிட்டது. அப்போது நாங்கள் படித்துக்கொண்டிருந்தது நான்காம் வகுப்பு.

Monday, January 12, 2015

மதக்குறியும் குலக்குறியும்




நான் தில்லியில் இருந்தபோது சார்ச்டர்ட் பஸ் எனப்படும் தனியார் பேருந்துகள் வரும். எங்கு எறி இறங்கினாலும் ஒரே கட்டணம்தான். எல்லாம் ஒரு இடத்தை நோக்கி செல்பவைதாம். ஆறு ரூபாய் இருந்தது. சரியான சில்லறையுடன் ஏறவேண்டியிருக்கும். சில கேரள உரிமையாளர்களின் பேருந்துகளும் தினம் வரும். அதன் பெயர்களைக் கொண்டு அதை புரிந்து கொள்ளலாம். கைரளி, ஐயப்பன் போன்ற பெயர்களாக இருக்கும். சில கேரள பெண்களும், ஆண்களும் நான் ஏறும் இடத்தில் ஏறுவார்கள். அவர்கள் இந்த பெயர்களைக் கொண்ட வண்டியில் மட்டுமே ஏறுவார்கள். இதில் ஆச்சரியம் இல்லைதான். மலையாளிகள் மலையாளிகளைதான் ஆதரிப்பார்கள். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அந்த வண்டியில் அவர்களுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே அதன் நடத்துனர் வாங்கிக் கொள்வார். பத்து ரூபாய் அவர்கள் கொடுத்தாலும் 5 ரூபாய் திருப்பி அளித்துவிடுவார். அவர்களின் இந்த செயல் கொஞ்சம் சீண்டுவதாகவே இருந்தது. நிறைய கேரள உரிமையாளர்கள் வண்டிகள் வருவதால் எந்த வண்டி எப்போது வருகிறது என்று தெரிந்து கொள்ளமுடியாது. எல்லா வண்டியிலும் இதைத்தான் செய்தார்கள் வேறு உரிமையாளர் வேறு நடத்துனர். அந்த மக்களை நடத்துனர் எப்படி கண்டுகொள்கிறார் என்பதும் புரியவில்லை. ஏனெனில் பொதுஇடங்களில் அவர்கள் இந்தியில் மட்டுமே பேசுவார்கள்.
கொஞ்சநாளில் சின்ன அடையாளங்கள் அவர்களிடையே இருப்பதை புரிந்து கொண்டேன். நெற்றியில் சந்தனப் பொட்டு, மலையாளம் கலந்த இந்தி உச்சரிப்பு, ஆண்களில் மெல்லிய தாடி, பெண்களில் விரிந்த தலைமுடி. மெல்லிய தாடி என்னால் வைத்துக் கொள்ளமுடியவில்லை அத்தோடு மலையாளம் கலந்துஅல்ல, இந்தியே தடுமாறிக் கொண்டுதான் இருந்தேன். சந்தனபொட்டு எளிதானதாக தோன்றியது.

Friday, January 9, 2015

பாவண்ணனுடன் ஓர் உரையாடல் : இரண்டாம் பகுதி



கேள்வி: கிரிஷ் கார்னாட்டின் நாடகங்களை பல தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். குறிப்பாக பலிபீடம்அதில் முன்னுரையிலேயே இது தமிழில் அறங்கேறுமா என பார்த்து மொழிபெயருங்கள் என்று கூறியிருக்கிறார் கிரிஷ் கர்னாட்அவர் சொன்னது போல் இதுவரை ஒருமுறைகூட மேடை ஏறவில்லை. வருங்காலத்தில் நாடகம் என்றவகை தமிழ் இலக்கியத்தில் இல்லாமல் போய்விடுமா?

பாவண்ணன்:  நாடகமே இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. கண்டிப்பாக நாடகச் செயல்பாடுகள் தொடர்ந்தபடியேதான் இருக்கும். தமிழ்ச்சூழலின் பிரச்சினை, நாடகங்களுக்கான பார்வையாளர்கள் இல்லை என்பதுதான். ரசனையுணர்வும் மேலான தேடலுணர்வும் கொண்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருகப்பெருக நாடகங்களுக்கான வரவேற்பும் பெருகும். அதுவரை, ஒரு சிறிய கூட்டத்தினருக்கான செயல்பாடாக மட்டுமே நாடகம் சுருங்கியிருக்கும். கிரிஷ் கார்னாடின் நாடகங்கள் புராணம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகிய பின்னணிகளைக் கொண்டவை. அந்தக் களங்களிலிருந்து நாடகத்துக்கான கருக்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். சமகாலத்துக்குரிய பார்வையை விவாதிக்கும் ஒரு களமாக அக்கருக்களை அவர் புனைந்துகொள்கிறார். நாடகத்தில் துக்ளக் பேசினாலும், அதை ஒரு நவீன அரசியல்வாதியின் பேச்சாகவே பார்வையாளர்கள் உணரும் வகையில் அவருடைய புனைவு கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இந்தியத்தாயை மனத்தில் வைத்துக்கொண்டு  பாரதியார் பாஞ்சாலி சபதம் எழுதியதுபோல கார்னாட் தன் நாடகங்களை அமைக்கிறார். 

Thursday, January 8, 2015

பாவண்ணனுடன் ஓர் உரையாடல்

எழுத்தாளர் பாவண்ணனுக்கு அதிகம் அறிமுகம் தேவையில்லை. 3 நாவல்கள், 16 சிறுகதை தொகுப்புகள், 17 கட்டுரை தொகுப்புகள், 19 மொழிபெயர்ப்புகளை செய்தவர். அவரது கதைகளும் கட்டுரைகளும் நுண்ணிய வெளிப்பாடுகளாக எப்போதுமே உள்ளன. சமீபத்திய சிறுகதை தொகுப்பான பாக்குத்தோப்பும் அப்படிதான். நாவல்களில் சிதறல்களும், பாய்மரகப்பலும் முக்கிய நாவல்களின் வரிசையில் சேர்ந்தவைகள். பழகுவதற்கு எளிய இனிய மனிதர். அவருடன் அவ்வப்போது நடந்த உரையாடல்களில் சிறிய கேள்விகளுக்கும் விரிவான விளக்கமாக பதிலளித்து நிறைவாக இருந்தது. அவற்றின் தொகுப்புதான் இது.

Wednesday, January 7, 2015

பெண்வாகனஓட்டிகளும் தொழிற்நுட்பமும்



இந்திய சமூகத்தில் பெண்கள் பலகாலம் வீட்டிலே அடைப்பட்டிருந்து சமீபகாலமாகத்தான் வெளியே வரஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் மிகச் சமீபமாகத்தான் வாகனங்களை ஓட்டவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த மனநிலையை இன்று நாம் புரிந்துகொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் போதிலேயே, என் சகவயது பெண்கள் சைக்கிள் ஓட்டவரும்போது பெண்கள் சைக்கிள் ஓட்டுவது சரியல்ல என்று கூறப்பட்டது. மீறி ஓட்டுபவர்களை சிறுவர்களும் பெரியவர்களுமாக கேலி செய்திருக்கிறார்கள்.
இன்று எல்லாவகை இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை பெண்கள் ஓட்டுகிறார்கள். முன்பு ஒரு பெண் வேலைக்கு அல்லது கல்லூரி செல்ல அண்ணனோ அப்பாவோ கூடவந்து சைக்கிளில் அல்லது மொபெட்டில் அழைத்து செல்ல‌ வேண்டும். இன்று அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எங்கு செல்லவேண்டும் என்றாலும் பெண்களில் தனியாக தன் ஸ்கூட்டியில் செல்கிறார்கள். 

Tuesday, January 6, 2015

சார் யாரு?



மற்றொருவரை சார் என்று ஒருவர் அழைக்கவில்லை என்றால் அவருக்கு மரியாதை தெரியவில்லை அல்லது திமிர் பிடித்தவன் என்பதுதான் அர்த்தம். இது தமிழகத்தில் நிலவும் பொதுவாக விஷயம். அரசாங்க வேலையில் இருப்பவர், கொஞ்சம் வயதானவர், பேண்ட் சட்டை அணிபவர், கார் வைத்திருப்பவர், இப்படி யாரோ ஒருவராக அவர் இருந்தால் அவரை சார் என்றுதான் விளிக்கவேண்டும். மாறாக அவர் பெயர் சொல்லியோ, அண்ணன் என்றோ, ஏங்க என்றோ சொன்னால் அதற்குபின்னால் அவர்களுக்கு அதனால ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆங்கிலேயர்கள்தான் சார் என்று சொல்வதை நமக்கு கற்றுக்கொடுத்தார்கள். வேலைக்காரன் முதலாளியை சார் எனலாம், அல்லது பெரிய சாதனைகளை படைத்தவரை சார் எனலாம் என்பதே அவர்கள் வழக்கம். ஆங்கிலேயர்களும் அமெரிக்கரும் யாராக இருந்தாலும் இதுதான் நடைமுறையில் உள்ளது.

Monday, January 5, 2015

நெடுந்தொடர்களின் உள‌வியல்



மெகா சீரியல் எனப்படும் நெடுந்தொடர்களில் வரும் கதாபாத்திரங்களும் காட்சிகளும் நிஜவாழ்க்கையின் பிரதிபலிப்புகள்தான் அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஒரு தினத்தின் முக்கால்வாசி நேரங்களில் ஒளிப்பரப்பாகும் தொடர்களில் உள்ள காட்சிகளையும், கருத்துக்களையும், அவர்களின் பார்வைகளையும் ஒரு சேர புரிந்து கொண்டு எந்த குழப்பங்களும், குமட்டலும், வயிற்று பொருமலும், வயிற்று போக்கும் ஏற்படாமல் சஞ்சீவி லேகியம் தின்ற கணக்காக அமர்ந்து அடுத்த நாள் தொடர்களை பார்க்கும் மக்களை வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை. வெவ்வேறு நேரங்களில் ஒளிப்பரப்பாகும் தொடர்கள் ஒரே டெம்ளேட்டைக்கொண்டு ஒரேவகையான பாத்திரங்கள், ஒரேமாதிரியான நடிகர்கள் என்று இருப்பதை ஏன் என்ற கேள்வி கேட்காமல் பார்த்துவிடுகிறார்கள்.
எல்லா டிவி சேனலைகளை சேர்த்து கிட்டத்தட்ட 20 மெகா சீரியல்கள் வரை ஓளிபரப்படலாம் என தெரிகிறது. நிஜமாக மக்கள் இந்த சீரியல்களை முழுமையாக உள்வாங்கி கொள்கிறார்களா தெரியவில்லை. ஏனெனில் சாப்பிட மறந்து, தூங்க மறந்து, உறவுகளுடன் பேச மறந்து, வெளியே செல்லும் நடை பழக்கம் மறந்து இவர்கள் காணும் இந்த மெகா சீரியல்கள் எந்தவித அடிப்படை அலகுகள் இல்லாமல் வெறும் அன்றன்றைய விசயங்களை தீவிரமாக பேசி வருபவை. மக்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த சீரியல்கள் எந்த ஒரு தரமான, நேர்மையான‌ பார்வையையோ, கருத்தையோ வலியுறுத்தி எடுக்கப்பட்டவைகள் இல்லை என்பதை அவனைவரும் புரிந்தே இருக்கிறார்கள்.

Friday, January 2, 2015

நடிகனின் நாடகம்: கமல் 60



நடிகனின் காதலின் நாடகம் ஏனடி என்கிற பாடல் என் சிறுவயதில் பார்த்தது, பின் நானும் இடையாட்டி நடித்து என் சக தோழிகளிடம் பாராட்டை பெற்றது நினைவிருக்கிறது. எங்கள் ஊரில் மிக தாமதமாகவே எல்லா படங்களும்வரும், இதையும் சராரரியாக என் ஐந்தாவது வயதில் இப்படத்தை பார்த்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் இன்று பார்த்தது மாதிரி அந்த பாடல் மட்டும் என் மனதில் இருக்கிறது.
எழுபதுகளின் கடைசியில் கமல் என்னும் நடிகர் வந்தபோது அப்போதைய நடிகர்கள் தலையில் டோப்பாவுடனும் குச்சி மீசையுடனும் நடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரிரு படங்களைத் தவிர நடிகர்கள் நடனமாடியது கிடையாது அல்லது அவர்களுக்கு தெரிந்திருக்காது. அப்படியே ஆடினாலும், நாயகி ஆட அவர்கள் ஸ்டைலாக நடந்து வருவதோ அல்லது கைகளை தூக்கி உச்சஸ்தானியில் முதல்வரியை பாடுவதோடு நின்றுவிடுவார்கள். ஆனால் கமல் அதற்குமாறாக தடித்த மீசையுடனும் உண்மையான முடியுடனும் இடைகளை அசைத்து பெண் போன்ற‌ நளின உடலசைவுகளுடன் பாடல்களில் தோன்றுவார். அதுவே அவரது அடையாளமாகவும் மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டிய ஒரு முக்கிய புள்ளியாக இருந்தது.
ஆனால் அவர் அதிலேயே எப்போதும் இருந்ததில்லை. அதாவது வெறும் நடனம் மட்டுமே கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்து பல்வேறு கதாப்பாத்திரங்களின் மூலம் தன்னை புதுபித்துக் கொண்டே இருந்திருக்கிறார். இன்றும்கூட புதிய படங்களில் பிற மொழிகளில் வரும்போது அதை தமிழில் கொண்டுவர முயற்சி செய்கிறார். அத்தோடு ஒவ்வொரு காலகட்டத்திலும் புதியதாக‌ வரும் தொழில்நுட்பங்கள், காட்சியமைப்புகள், புதிய உத்திகள், என்று எல்லாவற்றையும் அவர்தான் தொடங்கிவைக்கிறார். குணா, மகாநதி படங்கள் இன்றைய காலகட்டங்களிலும் எப்போதைக்குமான‌ ஒரு புதிய உத்தியாக பார்க்கப்படுகிறது.

Thursday, January 1, 2015

தமிழும் இந்தியும்


இந்தி உட்பட மற்ற இந்திய மொழிகளை வெறுப்பவர்கள் அல்லது காழ்ப்புணர்வோடு பேசுபவர்கள் பொதுவாக‌ தமிழகத்தை விட்டு வெளியே சென்றவர்கள் இல்லை என்பதை கவனிக்கலாம். வேலைக்காகவோ அல்லது சுற்றுல்லாவிற்காக‌வோகூட‌ இந்தியாவின் பிற பாகங்களுக்கு செல்லாதவர்கள்தான் இந்த நிலைப்பாட்டை உடையவராக இருப்பார்கள். வேறு சிலர் அரசியல் மேடைப் பேச்சிலிருந்து இக்கருத்தை பெற்றிருப்பார்கள். சில காரணங்களுக்காக வெளியே சென்றவர்கள இந்திய மொழிகளை குறிப்பாக இந்தியை வெறுப்பதில்லை. இந்தி எதிர்ப்பு நிலையை கொண்டவர்கள் கூட‌ அப்படி தமிழகத்தை விட்டு வெளியே வந்ததும் அந்த நிலை மாறுவதையும் கவனிக்க முடியும். நானும் அப்படி மாறியவனே.
ஏன் இந்திமொழியை வெறுக்க வேண்டும்? அது திணிக்கப்படுகிறது அல்லது தமிழை குறைத்து மதிப்பிடப்படுகிறது என்பதாலா? ஆம் என்றால் ஒருவகையில் அது நியாயம் என்றுதான் படுகிறது. அதனால் தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகள், வாக்கியங்கள் மறைந்து இந்தியாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. தூய மொழியாகிய தமிழ்மொழியில், இடையில் சில மொழிகளை சேர்த்து கண்டுபிடிக்கப்பட்ட மொழியாகிய இந்தி கலப்பதால் தூய்மை கெடும் என்பதும் ஏற்றுக்கொள்ள கூடியதாகவே எனக்குப்படுகிறது. ஆனால் இது நாள் வரை தமிழ் மொழியில் இருக்கும் வார்த்தைகள் அதன் அர்த்தங்களும் தமிழ்மொழியிலிருந்து நேரடியாக‌ வந்தவைகள் தானா என்றால் இல்லை என்றுதான் மொழியறிஞ‌ர்களின் பதிலாக இருக்கிறது. தினப்படி நாம் பேசும் சாதாரணப் பேச்சுக்களில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், தெலுகு, மாராட்டி அத்தோடு நமக்கு நேரடியாக சம்பந்தமே படாத உருது மொழியின் வார்த்தைகள்கூட இருக்கின்றன.