மலையாள படங்களை தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும்.
தமிழ் சினிமாவையும், தமிழர்களின் வாழ்வையும் ஒவ்வொரு படத்திலும் கேலியாக எங்கேயாவது ஒரு இடத்தில்
சித்தரித்து இருப்பார்கள். டிவி மாற்றும்போது தமிழ் சேனல் வருவது, ஊரிலிருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்கு வருவது, எதாவது ஒரு தமிழர் வேலையாளாக இருப்பது அவர் கடன் கேட்டு பல்லிளிப்பது என்று மிகச் சாதாரணமாகத்தான் சொல்லப்பட்டிருக்கும்.
எப்போதாவது பார்பவர்களுக்கு இது ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கும்.
தொடர்ச்சியாக மலையாளப் படங்களை பார்ப்பவர்களுக்கு இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக்
தெரியும். ஓரிடண்டு காட்சியில் வருபவர்கள் ஒரு முழுபாத்திரமுமாக வருபவர்கள் என்று எல்லோரும்
கெட்டவர்களாக, மலையாளிகளை அடிப்பவர்களாக, கேரள இடங்களில் வேலைக்கு வந்து அத்துமீறுபவர்களாக
இருப்பார்கள். தமிழர்கள்
தோன்றும் ஓரிடண்டு படங்களைத்தவிர எல்லாமும் இப்படி இருப்பதை எப்படி புரிந்து கொள்வது
என நமக்கு தெரியாமல் இருக்கும். மிக மெண்மையாக ஒரு சாதாரண காமெடியில் கூட இதை புகுத்தியிருப்பார்கள்.
கன்னட மொழி படங்கள் முழுவதும் தமிழிலிருந்து ரீமேக் செய்யப்படுவதால்
தான் வாழ்கிறது. தெலுகு, இந்தி என்று
இருந்தாலும் தமிழிலிருந்து அதிகம் ரீமேக் செய்யப்படுகிறது. இதை கன்னட சினிமா பார்ப்பவர்கள் புரிந்திருப்பார்கள்
அல்லது கன்னட சேனல்களை கொஞ்சம் கவனித்தாலே புரிந்துவிடும். ஆனால் ஒரு காட்சியில் கூட, ஒரு சொல் கூட தமிழ், தமிழகம் பற்றி இருக்காது. ஒரு கதாபாத்திரம்
கூட தமிழகம் வருவதோ அல்லது ஒருவர் அங்கு வருவதோ என்பது போல காட்சி இருக்காது. கொஞ்ச நாள் முன்பு தமிழ் வசனம்
வந்ததற்கு கன்னட திரைஉலகமும் கன்னட ஊடகமும் கன்னட அமைப்புகளும் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து
படத்தை நிறுத்திவிட்டார்கள். சிசிஎல் என்று சினிமா நடிகர்கள் சேர்ந்து விளையாடும் கிரிக்கெட்டில்
கர்நாடகா புல்டோசரின் முக்கிய எதிரியாக அவர்கள் நினைப்பது சென்னை ரைனோர்ஸ் அணியைத்
தான். சென்னை அணியுடன் விளையாடும்போது எத்தனை வன்மத்தோடு இருக்கிறார்கல எனபதை விளையாடும்
போது பார்க்கலாம்.
இந்த இரண்டு மாநில மக்களும் தமிழ் மக்கள் இல்லாமல் ஒரு நாள்
கூட ஓட்ட முடியாது. கேரளாவிற்கு வேண்டிய தினசரி காய்கறிகள், கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, பால் எல்லாமே தமிழகத்திலிருந்துதான் செல்லவேண்டும்.
அதேபோல தென் கர்நாடகாவிற்கு தேவையான பால், காய்கறிகள் தமிழக்த்திலிருந்துதான் செல்லவேண்டும். இதுதவிர பட்டாசு, ஜமுக்காளம், உடைகள் போன்ற பொருட்கள் கனிசமானவை தமிழகத்திலிருந்துதான்
செல்லவேண்டும்.
ஆனால் இப்படி இருந்தும் ஏன் அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள்.
அவர்களுக்கு தேவையானவை நம்மிடமிருந்து கிடைத்துகூட நம்மை வெறுப்பது ஏன்?
பெங்களூருவில் என் நண்பர்கள் உறவினர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வேலை செய்யும் இடத்திலும் அவர்
சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனத்திலும் அதிகம் வேலை செய்வது தமிழர்கள்தான். அதுவும்
உயர்பதவியில் இருப்பது தமிழர்கள்தாம். சொல்லபோனால் கன்னடர்களை வேலைவாங்குவதும் தமிழர்கள்தான்.
வேண்டுமென்றோ, மற்ற தமிழர்களின் உதவியுடனோ இது
நடக்கவில்லை. முழுமையாக திறமையின் அடிப்படையிலேயே நடந்திருக்கிறது. மற்றவர்களைவிட திறமையும், தொழிற்நுட்பத் திறனும் கூடவே பொறுமையும்
கொண்டவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களால் மிக எளிதாக உயர்ப் பதவிக்கு
செல்லமுடிகிறது.
அங்கு தொலைக்காட்சி சினிமாவில் தமிழர்களின் ஆதிக்கம் தான்.
அங்குள்ள மக்கள் நல்ல தொடர்களை, சினிமாககளை பார்க்க தமிழ் சேனல்களையும், தமிழ் சினிமாக்களையுமே தேர்ந்தெடுக்கிறார்கள். பெங்களூருவிலிருந்து
வந்திருந்த என் நண்பர்களின் நண்பர்கள் நம் தமிழ் இயக்குனர்களின் பெயர்கள் அவர்கள் இயக்கிய
படங்கள் வரை தெரிகிறது. புனேயில் தமிழ் சினிமாவை காண செல்லும்போது கூடவே கன்னட, மலையாள மக்கள் வந்து பார்ப்பதை கவனித்திருக்கிறேன்.
இதே தான் கேரளாவிலும் நடக்கிறது. எலக்ட்ரீசியன், தச்சர், பிளம்பர், தையல்காரர், அயர்ன்காரர் போன்ற தினசரி அடிப்படை
வேலைகள் செய்ய தமிழர்கள்தான் அங்கிருக்கிறார்கள். எந்த பெரிய, சின்ன நகரத்திலும் தமிழர்கள்தாம் அங்கு இந்த வேலைகளை செய்கிறார்கள்.
இந்த வேலைகள் செய்யும் மலையாளிகள் எல்லோருமே மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்கிறார்கள். அந்த வெற்றிடத்தைதான் தமிழர்கள்
அங்கு நிரப்புகிறார்கள். தொலைக்காட்சி, சினிமாவில் தமிழ ஊடகங்கள்தான் அதிகம் பார்க்கப்படுகின்றன அங்கும்.
அங்கு அதிகம் இடங்களில் வெளியாகும், அதிக வசூலை பெறுவதும் தமிழ் சினிமாக்கள்தாம்.
இந்த நிலை இரண்டும் மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெறுவதால்
ஏற்படும் காழ்புணர்ச்சிதான் வெறுப்பாக மாறுகிறது. ஒரு நாள்கூட தமிழர்கள் இல்லாமல் இருக்க
முடியாத இம்மக்கள் சிலரும் அரசியல்வாதிகளும் தண்ணீர் தர மறுத்தும், தமிழர்களுக்கு எதிராக எந்த விஷயத்திலும்
நிலைப்பாட்டை எடுப்பதுமாக இருக்கிறார்கள். ஆனால் பெருவாரியான சிறுநகர, கிராம மக்கள் தமிழர்களின் ஆற்றலை புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment