இந்திய சமூகத்தில் பெண்கள் பலகாலம் வீட்டிலே அடைப்பட்டிருந்து
சமீபகாலமாகத்தான் வெளியே வரஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் மிகச் சமீபமாகத்தான் வாகனங்களை ஓட்டவும்
ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த மனநிலையை இன்று நாம் புரிந்துகொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும்
போதிலேயே, என் சகவயது பெண்கள் சைக்கிள் ஓட்டவரும்போது
பெண்கள் சைக்கிள் ஓட்டுவது சரியல்ல என்று கூறப்பட்டது. மீறி ஓட்டுபவர்களை சிறுவர்களும் பெரியவர்களுமாக கேலி
செய்திருக்கிறார்கள்.
இன்று எல்லாவகை இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை பெண்கள் ஓட்டுகிறார்கள். முன்பு ஒரு பெண் வேலைக்கு அல்லது
கல்லூரி செல்ல அண்ணனோ அப்பாவோ கூடவந்து சைக்கிளில் அல்லது மொபெட்டில் அழைத்து செல்ல
வேண்டும். இன்று அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எங்கு செல்லவேண்டும் என்றாலும்
பெண்களில் தனியாக தன் ஸ்கூட்டியில் செல்கிறார்கள்.
பயந்துகொண்டே மெதுவாக சைக்கிளை ஓட்டும் பெண்களின் காலம்
முடிந்து
ஸ்கூட்டியையும், காரையும் மிக வேகமாக மிக லாவகமாக எல்லா போக்குவரத்து
நெரிசலையும் குறுகிய பாதியையும் கடந்து எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள்.
வெளிநாடுகளில் பெண்கள் கார்களில் ஆண்களின் துணையில்லாமல் தனியாக செல்லமுடிவதுபோலத்தான்
இதுவும்
இருக்கிறது. பெண்கள்
வரவேண்டிய வரநினைத்திருந்த இடம்தான் இது.
ஆனால் ஒரு பெண் வாகனம் ஓட்டுவதற்கும் ஆண் வாகனம் ஓட்டுவதற்கும் வித்யாசம்
இருக்கவே செய்கிறது. பெண் ஓட்டுவது
வேடிக்கையாக, ஓட்டும் சூழலை புரிந்து கொள்ளாததாகப்
பார்க்கபடுகிறது. ஒருவகையில் அது உண்மையும் கூட. ரோட்டில் செல்லும்போது பெண்கள் கீழே விழுவதும்
அடிப்பட்டுக் கொள்வதையும் தினமும் ஒருமுறையேனும் காண்கிறேன். ரோட்டு சைனை பெண்கள் பொதுவாக கவனிப்பதில்லை, நோ என்ரி பகுதியில் பெண்கள் நுழைவதையும், தவறான இடத்தில் திரும்புவதும், பின்வரும் வண்டிகளை கவனிக்காமல் திடீர்
ப்ரேக் அடிப்பதும் தொடர்ந்து அவர்கள் செய்யும் தவறுகள் என்று ஒரு பட்டியலை சொல்லமுடியும்.
பெண்களை நான் இழிவுபடுத்துவதாகவும், குறைத்து மதிப்பிடுவதாகவும் நினைத்தால்
அவர்கள்
இணையத்தில் சென்று
பார்க்கலாம். ஃபன்னி உமன்
கார் ரைடிங் என்று யூடியூபில் அடித்து பார்த்தாலே அன்றைய தினம் முழுவதும் காண, விழுந்து சிரிக்க வென்று அத்தனை கண்ணொளிகள்
கிடைக்கும்.
தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பெண்கள் ஓட்டும் வாகனங்களை தனியாக பிரித்து பார்க்கமுடியும். மிகத்திறமையாக
ஓட்டும் பெண் வாகனஓட்டிகள் மிக குறைவுதான்.
பதின்பருவத்து சிறுவன் தாறுமாறாக வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாக்கி
கொள்வான். ஆனால் ஒரு வயதிற்குபின்னால் அப்படி எளிய சின்ன விபத்துகளை ஏற்படுத்திக் கொள்வதே
இல்லை. ஒரு லாவகமும் புரிதலும் வந்து சிலம்பாட்டம் மாதிரி ஒரு கவனமின்மையுடன் சரியாக
செய்வார்கள். ஆனால் பெண்கள் எந்த வயதாக இருந்தாலும் விபத்துகளை ஏற்படுத்திக் கொண்டே
இருப்பார்கள். டவுன்பஸ், மண் லாரி, குப்பை லாரி, நேசனல் பர்மிட் கொண்ட லாரிகளை எந்த சாதாரண
வாகனம்போல பெண்கள் கடந்தோ, முந்தியோ
செல்வதிலிருந்து அவர்களின் புரிதலின்மையை தெரிந்து கொள்ளமுடியும்.
ஏன் பெண்களால் வண்டிகளை சரியாக ஓட்டமுடிவதில்லை. அவர்கள்
சூழலை ஏன் புரிந்து கொள்வதில்லை? என்று வண்டிஓட்டிச்
செல்லும் எல்லா ஆண்களுக்கும் தோன்றிக்கொண்டே இருக்கும்
ஆண்கள் ஆதிகாலத்திலிருந்து வேட்டையாடிப் பழகியவர்கள். வேட்டையாடுவதற்கு
தேவையான ஒருமித்த கவனமும், நீண்ட நேர
காத்திருப்பு, அதற்கு தேவையான தொழில்கருவிகளை
கையாலுதலும் அவர்களுக்கு சாத்தியப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே ஆண்களுக்கு இரு, நான்கு சக்கரங்களில் நீண்ட தூர பயணங்களில்
எந்த அலுப்பும் இல்லாமல் செல்லமுடிகிறது. பெண்கள் ஆதியிலிருந்து சிறுவயல்கள், தோட்டங்கள், குழந்தைகள், வேறுபெண்களுடன் பேச்சு என்று பழகியவர்களாக
இருக்கிறார்கள். தொடர்ந்து பேசிகொண்டும் பலவகை செயல்களை ஒரு சேர செய்யமுடிவது சாத்தியமாகியது.
ஆகவே பெண்களால் டிவியை பார்த்துக்கொண்டே குழுந்தை அழுவதை கவனிக்கவும், வீட்டிற்கு வெளியே களேபரத்தையும், அடுப்பில் வைக்கப்பட்டுள்ள பதார்த்ததையும் கவனத்தில் கொள்ள
முடிகிறது. ஆண்களால் இதில் ஒரு வேளையைத்தான் செய்யமுடியும்.
ஒருமுகப்பட்டு செய்யவேண்டிய வேலையான வண்டி ஓட்டுதலை பெண்கள்
ஒரு காய்கறிகளை கூடையில் அடுக்கி வைப்பது மாதிரி சாதாரண கவனத்துடன் செய்வதுதான் பிரச்சனையாக
முடிகிறது. ஆனால் பெண்கள் தான் சரியாகத்தான் செய்தேன் என்று நினைப்பதுதான் வேடிக்கை.
எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி வலப்பக்கம் திரும்ப கூடாது என்கிற
பலகை உள்ள ரோட்டில் தினமும் திரும்பி வருவார். அந்த இடத்தில் அப்படி ஒரு அறிவிப்பு
பலகை இருப்பதையே அவர் இதுவரை பார்த்ததில்லை. நான் கூறியபோது அதனால் தான் தன்னை அப்போது
போலீஸ்காரர் கவனிக்கிறா என்று அப்பாவியாக கேட்டார். பொதுவாக பெண்கள் செய்யும் விதிமீறல்களுக்கு
போலீஸ் எதுவும் செய்வதில்லை. ஹெல்மெட் அணியாததை, சிகப்பு விளக்கை தாண்டுவதை எதையும் கேள்வி கேட்பதில்லை.
கேட்டால் ஒன்று அழச்செய்வார்கள் அல்லது சரியாக வந்தேன் என்பார்கள். எதற்கு வம்பு என்று அவர்களும்
விட்டுவிடுகிறார்கள்.
1 comment:
உண்மை . ஆனால் இது ஆணாதிக்க
சிந்தனாவாதம் என்று பொருள் கொள்ளப்படும்.
Post a Comment