Monday, January 6, 2014

தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்

முழுவதும் இந்தியாவின் வெளியிலிருந்து நேரடியாக அந்த மொழியிலிருந்தோ அல்லது ஆங்கிலம் வழியாகவோ தமிழுக்கு மொழியெயர்க்கப்பட்டுள்ள நாவல்களை சேமிக்க வேண்டும் என்பதற்காக ஒரு வேட் பையிலில் எழுதிவைக்க ஆரம்பித்தேன். இதில் நாவல்கள் மட்டுமே உள்ளன. சிறுகதைகள், இந்திய மொழிபெயர்ப்பு நாவலகள் இணைக்கப்படவில்லை. (அவைகளை தனியாக எழுதவேண்டும்). பல‌ தமிழில் மொழிபெயர்க்க பட்டுள்ளது என்று தெரிந்தாலும் என்ன பதிப்பகம், மொழிபெயர்பாளர்கள் யார் என்ற விவரங்கள் பொதுவாக கிடைப்பதில்லை. ஒன்றுக்கு மேற்ப்பட்ட மொழிபெயர்ப்புகள் இருப்பதனால் எது சிறந்தது என்ற குழப்பமும் நீடிக்கிறது. சில பதிப்பகங்கள் அப்ரிஜ்டு வர்சன் எனப்படும் சுருக்க பதிப்புகளையும் வெளியிடுகின்றன. இவைகளும் ஒரு நல்ல மொழிபெயர்ப்புகளை படிக்க நினைக்கும் ஒருவருக்கு இடைஞ்சலானவைதான்.

கீழே உள்ள பட்டியல் முழுமையானவை அல்ல. பல நீக்கவும்/இணைக்கவும் செய்யவேண்டியவை பல இருக்கும் என நினைக்கிறேன். நண்பர்கள் உதவ முடியுமெனில் நல்லது.







1.        போரும் அமைதியும் - தல்ஸ்தோய்  சீதை
2.        அன்னா கரீனினா - தல்ஸ்தோய் பாரதி
3.        புத்துயிர்ப்பு - தல்ஸ்தோய் – NCBH
4.        கசாக்குகள் - தல்ஸ்தோய் – NCBH
5.        குற்றமும் தண்டனையும் - தாஸ்தேயேவிஸ்கி - பாரதி
6.        அசடன் (இடியட்)‍ - தாஸ்தேயேவிஸ்கிபாரதி
7.        கரமசோவ் சகோதரர்கள் - தாஸ்தேயேவிஸ்கி – NCBH
8.        மரணவீட்டின் குறிப்புகள் - பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி - சந்தியா
9.        சூதாடி - தாஸ்தேயேவிஸ்கி – NCBH
10.     கநாசுவின் மொழிபெயர்ப்பு நாவல்க‌ள் I &II - காவ்யா
11.     யாமா -குப்ரின் ரஷ்யா - NCBH
12.     அர்தமனேவ் - கார்க்கி - NCBH
13.     தாராஸ் புல்பா - கோகல் - NCBH
14.     தந்தையும் தனையர்களும் துர்கனேவ் - சந்தியா
15.     நம் காலத்து நாயகன் லெர்மன்தேவ் - சந்தியா
16.     மண்கட்டியை காற்று அடித்து போகாது - பாஸி அசியோவா - NCBH
17.     டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது - மிகைல் ஷொலக்கோ, (சி.ரகுநாதன்) - NCBH
18.     ஜமீலா - சிங்கிஸ் ஐத்மேதவ் - NCBH
19.     அன்னைவயல் - சிங்கிஸ் ஐத்மேதவ் - NCBH
20.     சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரகன்று - சிங்கிஸ் ஐத்மாத்தவ் - NCBH
21.     குல்சாரி - சிங்கிஸ் ஐத்மேதவ் – NCBH
22.     சக்ரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்.- NCBH
23.     கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ
24.     அந்நியன் - ஆல்பர்ட் காம்யூ(வெ.ஸ்ரீராம்) - க்ரியா
25.     முதல் மனிதன் - ஆல்பர்ட் காம்யூ(வெ.ஸ்ரீராம்) - க்ரியா
26.     நியாயவாதிகள் (நாடகம்) - ஆல்பெர் காம்யூ - சந்தியா
  1. கொள்ளை நோய் - ஆல்பெர் காம்யூ(ச.மதனகல்யாணி) - ஆனந்தா
  2. மரண தண்டனை என்றொரு குற்றம் - ஆல்பெர் காம்யு(வி.நடராஜ்) - பரிசல்

29.     தாசியும் தபசியும் -அனதோலியா பிரான்ஸ் - NCBH
  1. சொற்கள் (சுயசரிதை) சார்தர் (பரசுராம்) - தோழமை
  2. இரு நகரங்களின் கதை சார்லஸ் டிக்கன்ஸ்
  3. போரே நீ போ ஹெமிங்வே
  4. கடலும் கிழவனும் ஹெமிங்வே
  5.  யாருக்காக மணி ஒலிக்கிறது ஹெமிங்வே

35.     விசாரணை காஃப்கா - க்ரியா
  1. உருமாற்றம் - காஃப்கா(ஆர்.சிவக்குமார்) - ஸ்னேகா

37.     நிலவளம் - நட் ஹாம்சன்
38.     மாறியதலைகள் - நட் ஹாம்சன் நார்வே - சந்தியா
39.     பசி நட்ஹாம்சன்- மருதம்
  1. மரண தடம், தாமஸ் மன், உபாலி, (க.செண்பகநாதன்) - கன்னி
  2. மந்திரமலை தாமஸ்மான்
  3. கடல்முத்து ஸ்டீன்பெக்
  4. துன்பக்கேணி எரிக் மரியா ரிமார்க்
  5. பிரேத மனிதன் -மேரி ஷெல்லி
  6. பிளாடெரோவும் நானும் ஜுவான் ரமோன் ஜிமெனெஸ்
  7. குறுகிய வழி ஆந்த்ரே ழீடு
  8. பீட்டர்ஸ்பெர்க் நாயகன் கூட்ஸி
  9. குட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி க்ரியா
  10. நாநா எமிலி ஜோலா
  11. அவமான சின்னம் -நதானியேல் ஹதார்ன்
  12. கானகத்தின் குரல் ஜாக் லண்டன் சந்தியா
  13. சிலுவையில் தொங்கும் சாத்தான் நுகூகி
53.     காதலின் துயரம்- கதே (எம்.கோபாலகிருஷ்னன்) - தமிழினி
54.     தேவமலர்- செல்மா லாகர்லெவ்(க.நா.சு)
55.      மதகுரு- செல்மா லாகர்லெவ் (க.நா.சு), மருதம் (250), kavitha (170)ஸ்வீடீஷ்
56.     திமிங்கில வேட்டை (மொபிடிக்) - ஹெமென் மெல்வில் (மோகன ரூபன்) - பாவை
57.     குள்ளன் - பேர்லாகர் குவிஸ்ட் (திஜா) - ஐந்தினை
58.     பாரபாஸ் (அன்பின் வழி) - பேர்லாகர் குவிஸ்டு (க.நா.சு) - மருதம்
  1. லே மிசரபில் - விகடர் ஹுயூகோ(சுத்தானந்த பாரதி) - அல்லையன்ஸ்
  2. டிராகுலா பிராம் ஸ்டாக்டர்

61.     சித்தார்த்தா - ஹெர்மன் ஹெஸ்ஸே
62.     மங்கையர்கூடம் - பியர்ள் எஸ் பக்
63.     கடற்புறா - ரிச்சர்ட் பாஷ் (அமலன் ஸ்டேன்லி) - தமிழினி
64.     வீழ்த்தப்பட்டவர்கள் - மையானோ அசுவெலா (அசதா),
65.     யூஜினி - பால்சாக் (சி சு செல்லப்பா) - தமிழினி
66.     ஏழாவது முத்திரை - பர்க் மான் (வெங்கட் சாமிநாதன்) - தமிழினி
67.     டாம் ஷாயர் மார்க் ட்வெயின்
68.     தாத்தாவும் பேரனும் - ராபர்ட் டி ரூவாக் - சந்தியா
69.     நள்ளிரவின் குழந்தைகள் -  சாலமன் ருஷ்டி(க.பூரனசந்திரன்) - எதிர்.
70.     எரியும் பனிக்காடு - டேனியல் - Adaiyalam
71.     அசன்பே சரித்திரம் - எம்.ஸி. சித்திலவ்வை - அம்ருதா
72.     புலப்படாத நகரங்கள் - இதாலோ கால்வினோ, இத்தாலி - VOC
73.     ஒன்றுகலந்திடும் விதிகளின் கோட்டை - இதாலோ கால்வினோ - VOC
74.     குளிர்கால இரவில் ஒரு பயணி - இதாலோ கால்வினோ - உன்னதம்
75.     செவ்விந்தியரின் நீண்ட பயணம் - பெர்னாட் மலமூட் (சா.தேவதாஸ்) - ஆழி
  1. தூங்கும் அழகிகளின் இல்லம் - யசுநாரி காவாப‌ட்டா - உன்னதம்.-
  2. அவமானச் சின்னம் - நதேனியேல் ஹாதர்ண்(ஆறுமுகம்) - தமிழ்சுடர்

78.     ஓநாய் குலச் சின்னம் - ஜியாங் ரோங், சி.மோகன் - நற்றினை

  1. தேம்பி அழாதே பாப்பா - கூகி வா நியாங்கோ, எஸ்பொ - நிழல்

80.     சூனியப்புள்ளியில் பெண் நூவல்எல்ஸடாவி (லதாராமகிஷ்ணன்) - உன்னதம்
81.     அறியப்படாத தீவின் கதை - ஜோஸோ ஸரமாகோ (ஆனந்த்) - காலச்சுவடு
82.     சிதைவுகள் (Things Fall Apart) - சினுவா அச்செபே (மகாலிங்கம்) - காலச்சுவடு.
83.     அஸீஸ் பே சம்பவம் (2011) - (சுகுமாரன் ) - காலச்சுவடு
84.     பட்டு (2013) - (சுகுமாரன்) - காலச்சுவடு
85.     அப்பாவின் துப்பாக்கி - ஹினெர் சலீம் - காலச்சுவடு
86.     தனிமையின் நூறு ஆண்டுகள் (2013) - மார்குவேஸ் (சுகுமாரன்) - காலச்சுவடு
87.     விலங்குபண்ணை (2013) - ஜார்ஜ் ஆர்வெல் (பி.வி.ராமசாமி) - கிழக்கு
88.     ரசவாதி பாவ்லோ கோலோ காலச்சுவடு
89.     பதினோரு நிமிடங்கள் பாவ்லோ கோலோ எதிர்
90.     பாடும்பறவையின் மெளனம் (to kill a mocking bird) (2014) - ஹார்பர் லீ (சித்தார்தன் சுந்தரம்) - எதிர்



_o0o_

6 comments:

pvr said...

Animal Farm by George Orwel: Latest translation into Tamil was done by me. Published by Kizakku pathippagam. Received excellent reviews. Pl see the links given below.

2012 சென்னை புத்தக கண்காட்சியின் போது, நான் மொழிபெயர்த்த "விலங்குப் பண்ணை" வெளியிடப்பட்டது. தேர்ந்த எழுத்தாளர்களும், புத்தகத்தை வரவேற்று, விமர்சனம் எழுதினார்கள்.

கே.ஜே.அசோக்குமார் said...

நீங்கள் கூறிய நாவல் இணைக்கப்பட்டு விட்டது. நன்றி.

RATHINAVEL said...

ஐயா ,மரணவீட்டின் குறிப்புகள் புத்தகம் எங்கு கிடைக்கும் ?

கே.ஜே.அசோக்குமார் said...

புதுமைபித்தன் பதிப்பகத்திலிருந்து கிடைத்தது.
அது சந்தியா பதிப்பகத்தின் கிளை. புத்த‌ககாட்சியில் சந்தியா பதிப்பகத்தில் தேடுங்கள் கிடைக்கும். அல்லது இணையத்தில் விபிபி முயற்சித்தால் கிடைக்கும்.

சரோ லாமா said...

உருமாற்றம் - காஃப்காவின் நாவல் தமிழினி வெளியீடு.

Raja Na said...

ஹாருகி முரகாமியின் "காஃப்கா கடற்கரையில்" இவான் துர்கனேவின் "மூன்று காதல் கதைகள்" மற்றும் உய்பெர் அசாத்தின் "விரும்பத்தக்க உடல்" இவற்றையும் சேர்த்திருக்கலாம்.