Friday, January 16, 2015

சென்னை மீட்டர் ஆட்டோ



சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் காலை எழுந்ததும் முதல் சவாரியில் அன்றைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து சென்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ஆட்டோவையே எடுக்கிறார்கள். ஆகவே நாம் கூலி, பணம், அதிகம், குறைப்பு என்று எதைப்பேசினாலும் அவர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணுகிறது. சாவுகிராக்கி என்று வசையோடுதான் அப்புறம் பேச்சை ஆரம்பிக்கிறார்கள்.
பொதுவாக ஆட்டோகாரர்கள் மிகுந்த கஷ்டத்துடன் வேலைசெய்வதாகவும், பயணிகளான நமக்காக சேவை மனப்பாண்மையுடன் செயல்படுவதாகவும் ஒரு எண்ணம் சிலரிடையே உண்டு. இவ்வளவு கடினமான வேலையை அவர்கள் செய்ய‌ பயணிகளை துரத்திவந்து பிடிப்பது ஏன் என்றுதான் புரிவதில்லை. அவர்களின் அன்றைய நாளின் மிகப்பெரிய காரியமே யாரை எப்படி ஏமாற்றலாம் என்பதுதான். ஆட்டோ ஓட்டுவதை நேர்மையான ஒரு செயலாக ஆட்டோ ஓட்டுநரே நினைப்பதில்லை. எப்படி அரசாங்க வேலையில் லஞ்சம் கூத்தாடுகிறதோ அதுபோல. ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறேன் எனபதை நேர்மையில்லா வேலை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். சென்னையில் மிக குறைவான நபர்கள் மட்டுமே ஆட்டோவை நேர்மையாக பணம் வாங்குபவர்கள்.


பல்வேறு நகரங்களின் நெரிசலைவிட அதைவிட சிறிய ந‌கரம் சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல்கள் இருப்பதற்கு ஆட்டோக்களே காரணம். சென்னையில் ஆட்டோக்களை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை. ரொம்ப அவசரம் என்றால் மட்டுமே ஆட்டோ மற்ற நேரங்களில் பஸ்களிலும், ரெயிலிலும்தான் செல்கிறார்கள். நான் இருக்கும் புனேயில் நகர பேருந்துகள் மிக குறைவு, ஏனெனில் ஷேர் ஆட்டோ, ஆட்டோ பொன்றவைகள் பேருந்துகளை விட கொஞ்சமே அதிகம். ஆகவே மக்களால் கைகடிக்காத, அதிகசெலவில்லாத எதுவோ அதை தங்கள் பயணங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பேருந்தில் 10 என்றால், ஷேர் ஆட்டோவில் 15 இருக்கும், ஆட்டோவில் அது 40ரூ இருக்கும். இதுவே சென்னையில் பேருந்தில் 8, ஷேர் ஆட்டோவில் 15 ஆக இருக்கும், ஆனால் ஆட்டோவில் 120ரூ ஆக இருக்கும். ஆகவே மக்கள் ஆட்டோவை தவிர்த்து ஷேர் ஆட்டொவிலும் அது இல்லாதபோது பேருந்திலும் செல்கிறார்கள். இதனால் அதிக பேருந்துகள் விடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் தேவைக்கு அதிகமாக ஏற்படுகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில், ராஜீவ்காந்தி சாலையில் (OMR) காலையில் ஏற்படும் நெரிசலை பாருங்கள். இதில் பலர் பேருந்தில் செல்ல வேண்டியவர்களே அல்ல அவர்கள் ஆட்டோவில் செல்லகூடிய அளவிற்கு பணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள், அதாவது ஆட்டோவின் நியாயமான கூலிக்கு அவர்கள் நிச்சயம் பயணிக்க தயாராகவே இருப்பார்கள். அப்படி செய்யவிடாமல் தடுப்பது இந்த மீட்டர் பொருத்தாமல்தான் வருவேன் என அவர்கள் அடாவடி செய்வதுதான். மக்களை ஆட்டோவில் பயணம் செய்விக்க/நெரிசலை குறைக்க மீட்டர் ஆட்டோ அவசியம்.
ஒருநாள் இரவு திரும்பி வந்து கொண்டிருந்தபோது புனேயில் ஆட்டோகாரர் மீட்டர் மேல் 20ரூ வேண்டும் என்றார். அது இரவுநேரம் என்பதால் அப்படி நடப்பதுதான். ஆனால் அவர் இறங்கி பணம் பெறும்போது மிகுந்த சங்கடத்தோடு இரவு சவாரி கிடைக்காது ஆகவேதான் கேட்கிறேன் என்று இரண்டுமுறை என்னிடம் மன்னிப்பு கேட்பதுபோல் கேட்டுக்கொண்டார். பரவாயில்லை என்று கூறிவந்தாலும் எனக்குதான் சங்கடமாக இருந்தது 130ரூக்கு 150 பெற்றுக் கொண்ட அவர் சென்னையாக இருந்தால் 300ரூ வாங்கியிருப்பார்.
புனே ரெயில்நிலையத்திலிருந்து வெளிவந்து ஆட்டோவில் ஏறி வீடு வந்திருக்கிறேன். பங்களூரிவில் விமானநிலையத்திலிருந்து வெளிவந்து வெளியே இருக்கும் டாக்ஸியில் ஏறி பஸ்நிலையம் சென்றிருக்கிறேன். ஆனால் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறி அங்கிருக்கும் ஆட்டோவில்/டாக்ஸியி ஏறாமல் எதிரில் நடந்து சென்று திரிசூலம் ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம் சென்றிருக்கிறேன்.
ஏன் இதை சொல்கிறேன் என்றால் செலவு செய்ய மனமிருந்தாலும் அநியாயத்திற்கு செலவு செய்ய மனம் வரவில்லை. இந்தியாவில் சில பெருநகரங்களில் ஆட்டோவில் ஏற எந்த தயக்கமும் பொதுவாக வருவதில்லை. ஆனால் சென்னையில் மட்டும் பெரும் எரிச்சலாக இருக்கும். அறுபது தரவேண்டிய இடத்தில் 180 என்று கூசாமல் கேட்கும் ஆட்டோகளில் எப்படி ஏறமுடியும். நிறையபேருக்கு நிஜமான கூலி என்ன என்று தெரிந்திருக்க ஞாயமில்லை.
ரொம்ப நாளாக அவர்கள் சொல்லும் பணத்தில்தான் ஏறி வருகிறோம். இப்போது மீட்டர் வைத்து வண்டிஓட்ட‌ சொல்லும்போது அவர்களுக்கு கட்டாயப்படுத்தி கசப்பு மருந்தை கொடுப்பது போல இருக்கிறது. திநகரிலிருந்து கொட்டிவாக்கம் வர மீட்டர் போட்டுவந்த போது 120 ரூ வந்ததும் ஆனால் இதற்கு முன்னால் 250/300 தான் கொடுத்துவருவோம்.
ஆனால் குறைந்தபட்ட பணம் மற்ற நகரங்களில் 20ரூ தான். புனேயில் 17ரூ மட்டும்தான். ஆனால் சென்னையில் 25ரூ, அத்தோடு ஒவ்வொரு கி.மீ அதிகரிக்கும் ரூபாயும் அதிகம்தான்.
ஆட்டோஓட்டுநர்கள் மீட்டர்வைத்து ஓட்டிப்பழக எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை, அதுவரை பேருந்தும், எலக்ரிக் ர‌யிலும்தான் கதி, அல்லது புதிதாக வரப்போகும் மெட்ரோ ரயில்.

1 comment:

பாலகிருஷ்ணன் said...

ரேட் கட்டுபடியாகவில்லை என்பதற்காக ஆட்டோவில் ஏறிய என்னை இறக்கிவிட்ட புண்ணியவானும் சென்னையில் இருக்கிறார்.