Thursday, January 29, 2015

அமெரிக்க ஆங்கிலமும் பிரிட்டிஷ் ஆங்கிலமும்

ஆங்கிலேயர்கள் என்கிற பதம் எல்லா வெள்ளை இனத்தவர்களையும் குறிக்கும் என நாம் நினைத்திருக்கிறோம். ஸ்பானிஷ், சுவீடிஸ், பிரன்ச், ஜெர்மென், அத்தோடு வட அமெரிக்க, தென் அமெரிக்க மக்களும் வெள்ளையாகத்தான் இருப்பார்கள். அத்தோடு ஆங்கிலம் பேசும் எல்லோரையும் ஆங்கிலேயர்கள் என்றும் நினைத்திருக்கிறோம். ஆனால் அமெரிக்கரை ஆங்கிலேயர் (இங்கிலீஷ் மேன்) என்று சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டார். கர்நாடகா ஆந்திராவை தாண்டிவிட்டால் எல்லாமே வடஇந்தியா என்று நாம் சொல்வதுபோல இது. ஒரு மராட்டி, ஒடியா, ஏன் பெங்காலி, ராஜஸ்தானிகூட தான் வடஇந்தியர் என்று அழைக்கப்படுவதை ஒத்துக்கொள்ள மாட்டார். மத்திய பிரதேசம்கூட இல்லை, உபி, பீகார், உத்திரகாண்ட், தில்லி போன்ற இடங்களில் வசிப்பவர்களை மட்டுமே வடஇந்தியர்கள் என்று சொல்லமுடியும். பிரிட்டனில் வாழ்பவர் மட்டும் ஆங்கிலேயர் என்பதை ஓரளவு ஒத்துக்கொள்வார். பிரிட்டன் வகிக்கும் யுகேவில் இருக்கும் வட அயர்லாந்தை சேர்ந்தவர் தன்னை ஆங்கிலேயர் அல்ல ஐரிஷ் என்பார்.

ஆங்கில மொழிகள் அதிகம் இருக்கும் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா இம்மூன்றில் ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் மொழியில், கலாச்சாரத்தில் பெருமளவில் ஒத்துப்போகிறது. ஆனால் அமெரிக்கா பிரிட்டன் இரண்டும் எல்லாவகையிலும் வேறுபாடுடனேயே இருக்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அதன் வேறுபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை.
மொழியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பிரிட்டன் தன் மரபுமீது அதிக நாட்டம் இருப்பது போல இருக்கும். பிரிட்டனும் அமெரிக்காவும் தங்கள் மொழியுடன் புதிய வார்த்தைகளை இணைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதுபோல தெரிந்தாலும் சில அமெரிக்கா பின்பற்றாத அல்லது விட்டுவிட்ட பழைமையான முறைகளை இன்னும் பிரிட்டன் பின்பற்றுகிறது.
எழுத்துக்களில் behaviour, favour, colour போன்ற வார்த்தைகளில் உள்ள தேவையற்ற ‘o’ என்ற எழுத்தும் ‘Center’ ‘centre’ போன்ற வார்த்தை மாற்றங்களையும், பிஸ்கட்-குக்கீ, ஃப்லிம்-மூவி, கிளாஸ்-க்ரேட், பார்சல்-பாக்கேஜ், லாரி-ட்ரக், ட்ரவுசர்ஸ்-பேன்ட்ஸ், மொபைல்-செல்போன் என்று சிலதையும் சொல்லலாம்
ஒரு அமெரிக்கர் தன் புத்தகத்தை பிரிட்டனில் வெளியிட்டார் என்றால் அவர் விட்டிருக்கும் இது மாதிரியான் எழுத்துகளையும், வேறு சில இடியம் போன்ற பிரிடிஷ் மக்களுக்கு வேறு அர்த்தங்களை கொடுக்கும் வார்த்தைகளையும் மாற்றியே அந்த பதிப்பகம் வெளியிடும். இதே போன்றுதான் ஒரு பிரிட்டிஷ் ஆசிரியர் அமெரிக்க பதிப்பகத்தில் வெளியிட்டால் அப்படியே மாறி நடக்கும். அதைவிட இலக்கணங்களில் பல வேறுபாடுகள் உண்டு. அவசியம் எனில் கூகிளில் தேடினால் இத்தனையா என என்ன தோன்றும்.
வயதான இரு உறவினர்கள் வந்திருந்தபோது இங்கிருந்த போர்டுகளில் ஒன்றில் 'center' என்று இருந்ததை ஒருவர் என்னங்க ஆர் மாத்திப் போட்டிருக்காங்க என்றார் மற்றொருவரிடம். அவரும் ஆமாம் என்று பேசிக்கொண்டிருந்தனர். நான் இது அமெரிக்க ஆங்கிலம் என்றேன் ஊடே புகுந்து. அரசு அலுவலகத்தில் வேலைசெய்து வெளியேறிய அவர்கள் நாம் கூறியதை நம்மாமல் தங்களுக்கு தெரியாததா என்பது மாதிரி என்னை மேலும் கீழும் பார்த்தார்கள். பல வருடங்களாக அரசு பைல்களில் குறிப்பு எழுதியவர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில நாட்களுக்குபின் ஒரு அகராதியில் எடுத்து அம், பிரி என்று வார்த்தைகளை எடுத்து விளக்கியது நம்பினார்கள். தவறுகளற்ற, குறைபாடுகளற்ற கனவான்களின் மொழி ஆங்கில மொழி என நினைத்திருந்தவர்களுக்கு, ஆங்கிலம் அவசரகதியில் உருவாகிவிட்டதோ என்பது மாதிரி அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நிறுத்தற்குறியில் இதைவிட அதிக வேறுபாடுகள் இருக்கும். நான் காபி எடிட்டராக இருந்ததால் இவைகள் புரிகின்றன. ஒன்றில் இருக்க வேண்டும் மற்றொன்றில் கூடாது என்பது மாதிரி எகப்பட்ட நிறுத்தற்குறி வேறுபாடு உண்டு. உதாரணத்திற்கு ஒன்றை கூறுகிறேன். a, b, c and d மற்றொன்று a, b, c, and d ஒன்று கமா, மற்றொன்றில் வேண்டாம்.
இருவரும் தங்கள் புத்தகங்களில், பத்திரிக்கைகளில், ஆய்வு அறிக்கைகளில், தொலைகாட்சி, இணையங்களில்கூட விடாமல் முரண்பாடுயற்று (consistent) பயன்படுத்துகிறார்கள்.
உச்சரிப்பில் அதேபோல் பல வேறுபாடுகள் உண்டு. அதில் ஆஸ்திரேலிய ஊடகங்களின் உச்சரிப்பு முதல் இரண்டைவிட வேறாக இருக்கும். பிரிட்டன் ரேடியோ தொலைகாட்சிகளில் நாம் கேட்கும்போது அது இந்திய ஆங்கில உச்சரிப்பை கொஞ்சம் கொண்டு இருப்பதை கவனிக்கலாம். சினிமாக்களில் அதிகம் ஹாலிவுட் படங்கள், அவைகள் அமெரிக்காவிலிருந்து வருகின்றன. பொதுவாக சினிமாவில் பேசும் ஆங்கிலமே பிரிட்டன் ஆங்கில என நினைத்துக்கொள்கிறோம். வேறுசில படங்களுடன் ஜேம்ஸ்பாண்ட் படங்களும் பிரிட்டனிலிருந்து வெளிவருகின்றன. ஜேம்ஸ்பாண்ட் படங்களும் ஹாலிவுட் படங்களும் பார்க்கும் அடுத்தது பார்க்கும்போது அந்த உச்சரிப்பை நாம் கவனிக்க முடியும்.
என் அமெரிக்க சக ஊழியனின் ஸ்கைபில் பேசும்போது தசாவதாரத்தில் கமல் அமெரிக்க அதிபர் வேஷத்தில் உள்ள கண்ணொலியை அனுப்பியிருந்தேன்.
(https://www.youtube.com/watch?v=GX5rTNHUB24). அதைப்பார்த்துவிட்டு மேக்கப் மேனையும், கமல் நடிப்பையும் சிலாகித்துப் பேசினார். ஆனால் அதில் அவர் பயன்படுத்தும் உச்சரிப்பு புஷ் சேர்ந்த் மாநிலத்தின் உச்சரிப்பு அல்ல என்றார்.
இடியம் பிரேஷ் எனப்படும் மரபு தொடர் மொழிகள் இந்த இரு நாடுகளுக்கு இடையே நிறைய உண்டு. பிரிட்டனில் உபயோகத்தில் உள்ள மரபு மொழிகள் அமெரிக்காவில் இல்லை. அதற்கு ஒரு உதாரணம் சொல்லப்படுவது உண்டு. இரு நாட்டு சமாதான பேச்சுவார்தையில் டேபில் அவர் ப்ராப்ளம் என்று வந்தது, ஒரு பக்கம் மேஜையில் நம் பிரச்சனைகளை வைப்போம் என்றும் மறுபக்கம் பிரச்சனைகளை தூர வைப்போம் என்றும் புரிந்துகொள்ளப்பட்டது. புரிதல் காணமல் போக போர் மீண்டும் மூண்டது.

No comments: