பல்வேறு தொழிற்நுட்பத்தில் உருவாகிவரும் இசைகள், வேறுமொழி இசைப்பாடல்கள்,
மேற்குலகிலிருந்து
வெளிவரும் இசைக்கோர்வைகள் என்று ஒவ்வொரு நாளும்
வந்துக்கொண்டிருந்தாலும் நாம் முன்பே கேட்டுபழகிய பழைய பாடல்கள் மீண்டும் கேட்பதில்
அலாதியான இன்பம் இருக்கவே செய்கிறது. புதிய வந்திருக்கும் அனிருதின் இசை புதிய வகை
இசையாக இருந்தாலும் நம் அமைதியான சூழல்களில்,
நம் பிரத்தியேக மகிழ்ச்சி
தருணத்தில் நாம் விரும்புவது நமக்கே என்று இருக்கு சில பழைய பாடல்கள்தான். உங்களுக்குப்
பிடித்த பாடல்கள் என்னென்ன என்று கேட்டால்,
ஒவ்வொருவரும் ஒரு
லிஸ்ட் காட்டக்கூடிய அளவிற்கு அவர்களிடம் ஒரு தனிப்பாடல் தொகுப்பு இருக்கும். இதைப்
பல சமயங்களில் நான் கண்டிருக்கிறேன். ஒரு வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த 90 வயது
முதியவர்
அவருக்குப் பிடித்த
பாடல்களைப் பற்றி சொன்னார் அத்தனையும் நான் கேட்டேயிராத 40-50களில் வந்த பாடல்கள், மிக அருமையான குரலில் தன் வெட்கத்தையும், சுற்றியிருந்த மக்களையும் மறந்து பாடிக்காட்டினார்.
பழைய பாடல்களை ஏன் நாம் கேட்கிறோம். சலிப்படைய வைக்காது
இருக்கும்படியாக புதிய பாடல்கள் வந்துகொண்டிருக்கும்போது பழையப் பாடல்கள்
நாம் விரும்புவதில் அர்த்தமற்று இருப்பதாக தோன்றும். பழைய
பாடல் ரசிகர்கள் அவர்களின் பல்வேறு மூலம் எதிர்க்கொள்ளும் கேள்வியும் இதுவாகத்தான்
இருக்கும். புதிய பாடல்கள் பிடிபட கொஞ்சம் நாள் ஆவது ஒருகாரணம் என்றாலும் பழைய பாடல்கள்
கேட்பதினால் அவற்றில் இருக்கும் கிளாசிக் தனமையை புரிந்து கொள்ள முடியும். எல்லா பாடல்களையும்
அதன் குரல்வளம், மொழிவளம், இசைவளம் இம்மூன்றையும் ஒரே நேரத்தில் கிரகிப்பதில்லை. ஒவ்வொன்றாகவே
அதில் முழ்கிப்போகிறோம். முதலில் இசை, பிறகு மொழி கடைசியாக குரல் என்றுதான்
நாம் மனதில் இருத்திக்கொள்கிறோம்.
ஒரு சமயத்தில் எம்ஜியார் பாடல்களைதான் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அதன் வேகம், துள்ளல், மொழியின் அழகு என்று அனைத்தையும் எம்ஜியார்
மிக கவனமாக தேர்ந்தெடுத்திருப்பார். ஆனால் கொஞ்ச நாளிலேயே சில பாடல்களைத்தவிர மற்றவை
அலுக்க அல்லது பிடிக்காமல் போய்விட்டன. இப்போது நான் அதிகம் கேட்பது சிவாஜியின் பாடல்கள்.
எம்ஜியார் பாடல்களை மிக விரும்பி கேட்ட சமயங்களில் சிவாஜியின் பாடல்களை வெறுத்தது நினைவிருக்கிறது.
பழைய தமிழ்ப் பாடல்களில் டிஎம்எஸின் பாடல்களைத் தவிர்த்து
பாடல்களை நாம் கேட்டுவிடமுடியாது. டிஎம்எஸ் அளவிற்கு தாக்கம் ஏற்படுத்திய வேறு ஒரு
பாடகர் தமிழில் இல்லை. காதல், சோகம், மகிழ்ச்சி, தத்துவம், என்றவகைப் பாடல்கள் என்றில்லை முருகன்
பாடல்களுக்கு அவர்தாம் ஆரம்பம். இரண்டு முக்கிய நாயகர்களுக்கு அவர்தான் குரல். சிவாஜி, எம்ஜியார். அதை தவிர எல்லா கதாநாயகர்களுக்கும் அவர்தான்
குரல் கொடுத்திருக்கிறார். ஜெய்சங்கர், ரவிசந்திரன், நாகேஷ்.
ஜெமினி, முத்துராமன், போன்ற சில நாயகர்களுக்கும் மட்டும் பிபிஎஸ்.
மொதுவாக ஹிட்டான கிளாசிக் வரிசை பாடலகள் எம்ஜியார், சிவாஜி பாடல்களே அதிகம் இருக்கும்.
முதலில் எம்ஜியார் பாடல்களும் பிறகு சிவாஜி பாடல்களும் பிடிக்க
என்ன காரணமாக இருக்கும் என பல சமயங்களில் யோசித்திருக்கிறேன்.
எனக்கு தெரிந்தவரை எம்ஜியார் மற்றவர்களை நோக்கி பாடியிருக்கிறார்.
சிவாஜி தன்னை நோக்கி தன் அகவயமாக பேசும் பாவனையில் பாடியிருக்கிறார். எம்ஜியாரின் பல்லாக்கு
வாங்கப்போனேன்.. மாதிரி சில தன்வயப் பாடல்கள் உண்டு, மற்ற எல்லாமே
பிறர் கஷ்டங்களையும், பிறர் செய்கைகளையும், நோக்கி கேள்விகேட்பதாக,
பேசுவதாக இருக்கும்.
உதாரணம், புத்தன் ஏசுகாந்தி பிறந்தது பூமியில் எதற்காக?, அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். அவர் பாடும் காதல் பாடல்களில்
பெண்ணை வர்ணித்து, அவள் அழகை வியந்து பாடுவதாக மட்டுமே இருக்கும்.
மாறாக சிவாஜி தன் சோகங்களை, தன் துன்பங்களை, தன் மனதுடன், பிறரை வெறுப்பவராக, பிறர்மீது பழி சுமத்துபவராக,அதற்கு தன்னை வருத்திக்கொள்பவராக பாடுவார். உதாரணம்: யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க,
எங்கே நிம்மதி, நல்லவருக்கெல்லாம் சாட்சிகள் ஒன்று. காதல் பாடல்களில் அவள் அழகைவிட
அவள் திறமையையும், மேன்மையையும்
மட்டுமே பேசுவார்.
ஒருமுறை எம்எஸ்வி அவர் இசையமைத்த பாடல்களில் பிடித்தவற்றை
பட்டியல் இட சொல்லியிருந்தார்கள். அவர் கொடுத்த பட்டியலில் எம்ஜியார் பாடல்களே இல்லை, அதிகமும் சிவாஜி பாடல்கள்தாம். அது எனக்கு
ஆச்சரியமளித்தது. ஏனெனில் எம்ஜியார் அதிகமும் மெனக்கெட்டு மெட்டுகளை கேட்டுபெற்றவர்.
ஆனால் சிவாஜியின் மெட்டுகள் ஒரே நேரத்தில் அமையப் பெற்றவையாக இருந்திருக்கும். நான்
கொஞ்ச நாளில் எனக்கு பிடித்த கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்கள் பட்டியல் இட்ட போது அதிகமும்
சிவாஜி பாடல்கள்தாம் வந்தன.
எப்படியாயினும் பழைய பாடல்கள் இனிமையானவைதாம். என் பட்டியல்
இதோ:
ஆகாயப்பந்தலிலே பொன்னூச்சல் ஆடுதம்மா
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
என்னடி ராக்கமா
ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
அலங்காரம் கலையாத
அம்மம்மா தம்பி என்று
அன்பு நடமாடும்
அண்ணன் என்னடா
அவளா சொன்னாள்
அவளுக்கென்ன தூங்கிவிட்டாள்
தேவனே என்னை பாருங்கள்
கடவுள் மனிதனாக
கண்ணை நம்பாதே
கண்ணன் வந்தான்
காதல் ராஜியம் உனது
கேட்டதை கொடுப்பவனே
மதன மாளிகையில்
மனிதன் நினைப்பதுண்டு
மாதவி பொண் மயிலாள்
மேலதாளம் கேட்கும்
நல்லதொரு குடும்பம்
நீங்கள் அத்தனைபேரும்
படைத்தானே
பல்லாக்கு வாங்க்போனேன்
பவளக்கொடியிலே
பொண்ணுக்கென்ன அழகு
போனால் போகட்டும்
பொன்மகள் வந்தாள்
பூமாலையில்
2 comments:
படத்தின் பெயரையும் சேர்த்திருக்கலாம்.நல்ல பாடல்கள்.
Post a Comment