உடை இருப்பிடத்திற்கு முன்னே உணவு என்னும் அடிப்படையான விஷயம் வந்துவிடுகிறது. ஒருவேளை உணவு என்பதே உலகத்தில் பலருக்கு மிகப்பெரிய செலவினமாக இருக்கிறது. ஆனால் வேறோரு பக்கத்தில் உணவை வீணாக கீழே கொட்டுவது நடக்கிறது. பலஇல்லங்களில் உணவு ஒரு ஆடம்பரம் தான். உணவகங்களின் வழியே நாம் அளிக்கும் பணம் அந்த உணவிற்கு பலமடங்கு அதிகம் செலுத்துகிறோம். திருமணங்களில் பல உணவு வகைகள் ஆடம்பரத்திற்கே சேர்க்கப்படுகின்றன. பல உணவுவகைகள் சாப்பிடப்படாமல் வீணாவதுதான் அதிகம். அந்த கெளரவம் நமக்கு தேவையாக இருக்கிறது. உணவை எவ்வளவு வீணாக்குகிறாரோ அவ்வளவு வசதி படைத்தவராகிறார்கள். உணவை மற்றவர்களுக்கு அளிப்பதில் இருக்கும் இன்பம்கூட கெளரவத்தில் இணைந்துவிடுகிறது. உணவை பெறுபவர் அதை கீழ்மையாக நினைக்கவேண்டியவராகிறார்.
Showing posts with label short story. Show all posts
Showing posts with label short story. Show all posts
Thursday, December 19, 2019
Friday, December 6, 2019
நாற்காலி - கி.ராஜநாராயணன் சிறுகதை வாசிப்பனுபவம்
நாற்காலிகள் அதிகாரத்திற்கானவை என்கிற எண்ணம் நமக்கு எப்போதும் உண்டு. சிம்மாசனம், செங்கோல், அரியணை, போன்றவைகள் இதைத்தான் குறிக்கின்றன. நிலப்பிரப்புத்துவ மனநிலையில் இதைச் சொல்லும்போதே குடையையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். பண்டைய மரபில் வெண்கொற்றக்குடையாக இருந்தது பின்னாலும் ஒருவருக்கு பிடிக்கப்படும் குடையாகவும், பிறகு தனக்கே பிடித்துக் கொள்ளும் குடையாகவும் ஆனது அதிகாரத்தின் படிநிலைகள். நிலப்பிரபுத்துவ வாழ்வில் செருப்பு அணிந்ததும் அதிகாரத்தின் குறியீடுதான்.
Thursday, November 28, 2019
நாயனம் - ஆ.மாதவன் சிறுகதை வாசிப்பனுபவம்
சலிப்பில்லாத வாழ்க்கையில்லை. எவ்வளவுதான் உயர் எண்ணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பு வந்தேவிடுகிறது. வேண்டாத பொருள் கைவிட்டு போகும்போது அதுகுறித்து கவலை கொள்வதில்லை, அது நம்மைவிட்டு செல்கிறதே என்கிற மகிழ்ச்சி உண்மையில் அடைவதில்லை. மாறாக சலிப்பை அடிநாக்கின் கசப்பைபோல உணர்கிறோம். இதுநாள்வரை பொறுத்திருந்ததின் பொருளின்மைதான் உண்மையில் அப்படியான சலிப்பு தோன்றுவதற்கு காரணம் என்றால் நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.
Wednesday, October 30, 2019
ஒருநாள் கழிந்தது - புதுமைபித்தன் சிறுகதை வாசிப்பனுபவம்
அரைநாள் கழிந்தது என்றுதான் சொல்லவேண்டும். கதையில் அரைநாள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் மாலையிலிருந்து இரவுவரை தான் கதை. காலை, மதியம், நடுஇரவெல்லாம் முருகதாசர் என்ன செய்தார் என்கிற குறிப்பு எதுவும் இல்லை இதில். இப்படி புறவயமாக கதையை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்றாலும் புதுமைபித்தனின் நிஜகதையை ஒட்டியிருப்பதால் அவர் வாழ்க்கையை படிக்கின்ற சுவாரஸ்யம். பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் பகுதியில் இக்கதை இருக்கிறது. அன்றிலிருந்து பல சமயங்களில் இக்கதையை வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் அதில் இருக்கும் இரு கதைகள் மட்டுமே நினைவில் இருக்கின்றன். ஒன்று இது மற்றொன்று ஜெயகாந்தன் எழுதிய நந்தவனதில் ஒரு ஆண்டி.
Wednesday, October 23, 2019
விடியுமா - கு.ப.ரா. சிறுகதை வாசிப்பனுபவம்
பிரிவை மனித மனம் எப்படி எடுத்துக் கொள்கிறது என பல்வேறு வரையறைகளின் வழியாக பொருள் கொள்ள முடியும். அது தத்துவங்களின் வழி. ஆனால் உண்மை அகத்தின் மொழியை உணர்ந்தவர்கள் மிகக் குறைவு. மனம் ஒரு நேரடி துயர நிகழ்வுக்கு
முன்னும் பின்னும் பல்வேறு வகைகளில் கூட்டி தொகுத்து சொற்களாக வைத்துக் கொள்கிறது.
சொற்களை முன்னும் பின்னுமாக மாற்றி வேறு பொருள் அதற்கு உண்டா என சோதிக்கிறது. மற்றவர்களுடன்
அது குறித்து பேசி தனக்கு தேவையானவைகளை ஒரு கூட்டுக்குள் அடக்கி வைத்துக் கொள்ள விரும்புகிறது.
Friday, October 18, 2019
அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன் சிறுகதை வாசிப்பனுபவம்
எளிய மனிதவாழ்வில் நடக்கும் கனமான சம்பவங்கள் பேய்க்காற்றில் அறுந்து நொடியில் வானத்து பரப்பிலிருந்து காணாமல் போய்விடும் பட்டம் போன்றது. ஆனால் அதன் நினைவுகள் முகத்து வடுக்கள் போல நம் மனதிலிருந்து நீங்குவதேயில்லை. அசோகமித்திரன் எழுதிய கதைகளில் இம்மாதிரியான பொதுத்தன்மை ஒன்றுண்டு. மிக எளிய மக்களின் அன்றாட பிரச்சனைகளை கொண்ட கதைகள் என்கிற பிம்பத்திற்கு பின்னால்,
தினசரி வறுமையும், தோல்வி பற்றிய சித்திரமும், கைவிடப்பட்ட நிலையையும் எவ்வித உணர்ச்சிகரமான
எதிர்வினைகளற்று சொல்லப்பட்டிருக்கும். உணர்ச்சிகரமற்ற என்பதை இங்கு அழுத்திச் சொல்லவேண்டும். ஏனெனில் உத்வேகத்துடன் சொல்லப்படுதலை, உச்சஸ்தாதியில் குரலெடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து, அப்படியானவைகளைகூட சாதாரண சம்பவங்களோடு பிணைத்து மனிதர்கள் இவ்வளவுதான் என்று சொல்லிவிடுபவர் அசோகமித்திரன். கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் இது நிகழ்கிறது. ஆனால் அதே அன்றாடப் பிரச்சனைகளை மெல்லிய நகைச்சுவை பின்ன சொல்லிவிடுவதில் இருக்கும் அழகு அசோகமித்திரனின் முத்திரை என்று சொல்லலாம்.
Thursday, January 11, 2018
தெய்வமரம் (சிறுகதை)
பெரிய சாலையில் மாலைஒளி படும்படி அமர்த்தலாக அமைந்திருந்தது “மங்களவிலாஸ்” வீடு.
மழைக்கும் வெய்யிலுக்கும் சோர்ந்து காரைகள் பெயர்ந்த பழையபாணி வீடு.
அந்த
இடம்
வந்ததும் தன்னையறியாமல் தலைதூக்கிப் பார்த்துவிடுவது சிவமணியனின் வழக்கம். ஏதோ
ஒரு
பய
உணர்ச்சியோடுதான் அந்த
வீட்டிற்குள் நுழைவான் சிவமணியன். அந்த
வீடு
தரும்
அமைதியின்மையை அவனால்
புரிந்து கொள்ள
முடிந்ததில்லை. முத்தையாவிற்குப் பரம்பரையாக வந்திருக்கும் சொந்த
வீடு
அது.
முத்தையா சாந்தியைத் திருமணம் செய்து
கொண்டு
வந்தபின்னே வீட்டிற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டது. அதற்குமுன் இதைவிட
மோசமாக
இருந்தது. காம்பவுண்ட் சுவரைத் தாண்டி
நீண்ட
வாசற்படியில் சரியாகக் கண்
தெரியாத முத்தையாவின் அம்மா
எப்போதும் அமர்ந்திருப்பாள். உள்ளே
வருபவர்களை நோக்கி
அவள்
எதையோ
சொல்கிறாள் எனத்
தோன்றும். மாறாத
கண்களுடன் வெற்றிலை பாக்கு
மெல்வதை உள்ளே
வருபவர்கள் தாமதமாகப் புரிந்துக் கொள்வார்கள். இன்று
அந்த
இடத்தில் முத்தையா அமர்ந்திருந்தார். ஏதோ
சிந்தனையில் அமர்ந்திருப்பவன்போல உடலிலிருந்து நகர்த்தி வேறு
திசையில் முகத்தை வைத்துக்கொண்டிருந்தான்.
Friday, December 8, 2017
கனவு (சிறுகதை)
எனக்கு கனவுகள் ஏன் தொடர்ந்து வருகின்றன என தெரியவில்லை. அதனாலேயே கனவுகளைப் பற்றி நாளெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன். அவைகள் நம் ஆழ்மனதின் வெளிப்பாடுகள் என்று எல்லாவற்றிலும் அழுத்தமாக சொல்லப்படுகின்றன. உண்மையில் கனவுகள் எனக்கு ஆழ்ந்த அமைதியையும், நிம்மதியின்மையையும் ஒருங்கே அளித்திருக்கின்றன. சில கனவுகள் அதீத கற்பனைகள் கொண்ட ஃபென்டசி கதை போன்றும், நீண்டு நெடிய பயணத்தை மேற்கொண்டது போலவும் அப்படியே நிறைவிருக்கும். சில பதறவைத்து காலமெல்லாம் இந்த பயத்துடன் வாழப்போகிறேனா என்கிற அலைகழிப்பை கொடுப்பதாக இருக்கும். ஒரு கனவின் தொடர்ச்சியை அடுத்தடுத்த நாட்களிலும் கண்டிருக்கிறேன். ஒரு மாதம் தொடர்ந்து கண்டதுகூட நினைவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் கனவுகள் ஓவ்வொரு விதமாக இருக்கும். கனவை நிறுத்த முடிந்ததில்லை. ஏன் கனவுகளை நிறுத்த முயற்சிக்க வேண்டும், அதன் போக்கில் இருந்துவிட்டு போகட்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் மற்றவர்களுக்கு இந்த கனவுகளை பயஉணர்ச்சியோடே பார்க்கிறார்கள். தலையில் தூக்கிவைக்கப்பட்ட நீர்குடம் போல பாரத்தை நம்மீது இறக்குபவை இந்த கனவுகள், இறக்கி வைத்தபின் கிடைக்கும் பாரமின்னையின் சுகவும் கூடவே அளிப்பவை. ஆகவே எந்தவித தொந்தரவுகள் செய்யாமல் அவைகளை அப்படியே விட்டுவிட நினைக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)






