உடை இருப்பிடத்திற்கு முன்னே உணவு என்னும் அடிப்படையான விஷயம் வந்துவிடுகிறது. ஒருவேளை உணவு என்பதே உலகத்தில் பலருக்கு மிகப்பெரிய செலவினமாக இருக்கிறது. ஆனால் வேறோரு பக்கத்தில் உணவை வீணாக கீழே கொட்டுவது நடக்கிறது. பலஇல்லங்களில் உணவு ஒரு ஆடம்பரம் தான். உணவகங்களின் வழியே நாம் அளிக்கும் பணம் அந்த உணவிற்கு பலமடங்கு அதிகம் செலுத்துகிறோம். திருமணங்களில் பல உணவு வகைகள் ஆடம்பரத்திற்கே சேர்க்கப்படுகின்றன. பல உணவுவகைகள் சாப்பிடப்படாமல் வீணாவதுதான் அதிகம். அந்த கெளரவம் நமக்கு தேவையாக இருக்கிறது. உணவை எவ்வளவு வீணாக்குகிறாரோ அவ்வளவு வசதி படைத்தவராகிறார்கள். உணவை மற்றவர்களுக்கு அளிப்பதில் இருக்கும் இன்பம்கூட கெளரவத்தில் இணைந்துவிடுகிறது. உணவை பெறுபவர் அதை கீழ்மையாக நினைக்கவேண்டியவராகிறார்.
Showing posts with label நாஞ்சில் நாடன். Show all posts
Showing posts with label நாஞ்சில் நாடன். Show all posts
Thursday, December 19, 2019
Thursday, June 18, 2015
சதுரங்ககுதிரை
சதுரங்கத்தில் இருக்கும் குதிரை பாய்ந்து மூன்று கட்டங்களை
இடம் அல்லது வலமாக தாவிச் செல்லும். அதனால் அது எப்படி முன்னேறுகிறது என்பதை நம்மால்
சில சமயம் கணிக்க முடியாமல் போய்விடும். இரண்டு குதிரைகள் இருந்துவிட்டால் போதும், மற்ற எந்த காய்களை இழந்திருந்தாலும், நாம் வென்றுவிட முடியும். சதுரங்கத்தில் அந்த காய்களை இழக்கும்போது
மிக முக்கியமான ஒரு போர் தந்திர முறையை நாம் இழந்துவிடுகிறோம். ஆனால் இதெல்லாம் சதுரங்கத்தில்
மட்டுமே தான். நிஜவாழ்வில் அந்த காய்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. திருமணமாகாத பேச்சலர்கள்
இந்த சதுரங்க குதிரைகளை போன்றவர்கள்தான். ஆம் அவர்கள் வெளியிடங்களில் தங்கள் வேலைகளில், தங்கள் பழக்க வழக்கங்களில்,
நண்பர்களிடத்தில்
மிக முக்கிய ஆளுமையாக இருந்தாலும் உறவுகளிலும்,
பெண்கள் உடனாக நட்பிலும்
ஒரு பொது விழாவிலும் அவர்கள் செல்லாகாசாகதான் இந்திய, தமிழக சூழலில் மதிப்பிடப்படுகிறார்கள்.
என் உறவுக்காரப் பெண் சிறுவயது முதல் என்னுடன் நட்பாக இருந்தவர், அவளுக்கு திருமணம் ஆனதும் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்.
அதுவரை எங்களிடையே இருந்த வாழ்க்கை குறித்த,
புத்தகங்கள் குறித்த, புதிய தொழில்நுட்பங்களை குறித்த பேச்சுக்கள் அப்படியே நின்றுவிட்டன.
பல நாட்கள் அவள் என்னுடன் பேசவில்லை. எங்களிடையே மிக நீண்ட தூரத்தை மெதுவாக உருவாகிவந்ததை
மிக ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன். பேசுவதற்கு பலசந்தர்பங்கள் வந்தும் அவள் தவிர்த்திருக்கிறாள் என்பது
மேலும் புதிராக இருந்தது.
Subscribe to:
Posts (Atom)
