Tuesday, January 24, 2017

சென்னை புத்தகக் கண்காட்சி 2017



ஒரு சம்பிரதாய நிகழ்வாக சென்னை புத்தகக் கண்காட்சி மாறிவிட்டது. புத்தக வெளியீடு, புத்தக கலந்துரையாடல், புகைப்படம் எடுத்தல் என்று நிகழ்வுகள், மனிதர்கள் மாறினாலும், மாறுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புத்தக வெளியீடுகளில் பெரிய சுணக்கம் இருந்தது. புனைவுகள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வெளியிட மறுத்த பதிப்பகங்கள் அதிகம். சில ஆண்டுகளாக பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்று புத்தகங்களை வெளியிட பதிப்பகங்கள் போட்டிபோடும் நிலை வந்திருக்கிறது. புனைவுகளில் கவிதையை போலவே சிறுகதைகள், நாவல்கள் வெளியாகும் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மற்ற ஆண்டுகளைவிட 2016-17ல் வெளியான சிறுகதை, நாவல்கள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன

Thursday, January 19, 2017

படிப்பு விஷயம்



புதிய பள்ளிக்கூடம் எங்கள் ஊரில் திறக்க இருக்கிறார்கள். அது சாதாரண பள்ளி இல்லை. சென்னையில் இருக்கும் மிகப் பிரபல்யமான பண்ணாட்டு பள்ளி. அதற்கான பிரம்மாண்ட விளம்பரங்கள், பதாகைகள் அங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. தினசரிகளின் நடுவில் பளபளக்கும் விளம்பர காகிதம் சொருகப்பட்டு வந்தன. உடனே மக்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது கண்கூடாக தெரிந்தது. என் மகன் படிக்கும் பள்ளியில் படிக்கும் மகனின் தந்தை என்னிடம் 'கொஞ்சம் செலவு ஆனாலும் அந்த பள்ளிகூடத்துல சேர்த்துலாம்னு இருக்கேங்க' என்றார். நூலகத்தில் இருந்த நூலகர் 'எவ்வளவு செலவாகும்' என்றார். பணம் கொடுத்து மிலிடரி பள்ளியில் சேர்க்க நினைத்திருப்பதும், அது நடக்காவிட்டால் 6வது படிக்கும் மகளை இந்த பள்ளியில் சேர்க்க இருப்பதாக சொன்னார். தாமதித்தால் சீட் கிடைக்காது என்று கவலை கொண்டார். ‘படிப்பு விஷயத்துல அஜாக்கிரதையாக இருக்க கூடாது பாருங்க’ என்று உறுதியாக சொன்னார்.

Saturday, January 14, 2017

வாசிப்புசூழலும் தேவையும்



வாசிப்பு தனிநபர்களின் அடையாளம் என்று உணர கொஞ்சகாலம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மிககுறைவான சதவிகிதத்தினர் என்றாலும் இன்று வாசிப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். புத்தகத்தை பரிசளிப்பது இன்று ஒவ்வொருவரிடையே தொடங்கியிருக்கிறது. புத்தகம் குறித்து பேசும் பேச்சரங்கங்கள், கூடல்கள் எல்லா ஊர்களிலும் ஆரம்பமாகியிருக்கின்றன. வயதானவர்கள் பழந்தமிழ், பக்தி இலக்கியங்களை கூடி பேசுவது எல்லா ஊர்களிலும் இருப்பதைபோல நவீன தமிழ் இலக்கியத்திற்கும் கவிதை, சிறுகதை, நாவல்கள் குறித்து பேசுபவர்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது முகநூல், வாட்ஸப் மூலமாக அறியமுடிகிறது. அதேபோல இந்திய/தமிழக வரலாறு குறித்த பார்வைகள் விரிவடைந்திருக்கின்றன. கோயில் கல்வெட்டுகள், குகைப்பயணங்கள் போன்றவைகளை எல்லா தரப்பினருமே முன்னெடுத்து செல்கிறார்கள்.

Sunday, January 8, 2017

சின்னம்மா பெரியம்மா



சின்னம்மா அம்மா ஆவதும், அம்மா பெரியம்மா ஆவதும் மிக இயல்பாக நடக்கப்போகிறது. இந்த இயல்பான மாற்றமாக ஆவதைதான் பொறுக்கமுடியாமல் சங்கடப்படுபவர்கள். கோபப்படுகிறார்கள். விமர்சிக்கிறார்கள். ஏன் கீழ்தரமாக இறங்கிவந்து எதிர்வினையாற்ற வேண்டும். முதலில் அவர்கள் எதிர்ப்பார்த்தது இதுவல்ல. 89ல் நடந்ததுபோல் இரண்டாக, மூன்றாக உடைந்திருக்க வேண்டும். ஒரு தலைமை வேறொருவருக்கு கைமாறும்போது மிகபலமான மோதல்களுடன் அது நிகழவேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் இங்கே நினைத்ததற்கு மாறாக எப்படி முதல் தலைமை இருந்ததோ அதேபோலவே இந்த தலைமையும் இருக்கிறது. அதே போன்ற வழிபடுதல்கள், அடிபணிதல்கள் என எல்லாமும் தொடகிறது.

Friday, January 6, 2017

கனவுகளின் மீள் திரட்சி


கே.ஜே.அசோக்குமாரின் “சாமத்தில் முனகும் கதவு” சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்

முனைவர். அகிலா கிருஷ்ணமூர்த்தி


சிக்மண்ட் ஃப்ராய்டை புறக்கணித்து, “சாமத்தில் முனகும் கதவு” சிறுகதைத் தொகுப்பிற்குள் பயணிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மிகுந்த தனிமையில், மனதோடு பேசுகிற பேரமைதியின் சலசலப்புதான் கே.ஜே.அசோக்குமாரின் சிறுகதைகள். உளவியல் பகுப்பில் மிக நுட்பமாக உள்ளே சென்றால், அகம் சார்ந்த தன்மைகளை கதைக் கருவாக வைத்திருப்பதை உணரமுடியும்.
(முனைவர். அகிலா கிருஷ்ணமூர்த்தி)

Thursday, January 5, 2017

காந்தியைப் பிடித்தல்



அரிசிக்கடை, மளிகைகடை, பேங்க் போன்ற அன்றாட அல்லது மாத பயன்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் இருந்து வருட ஆரம்பத்தில் எங்கள் வீட்டிற்கு காலண்டர்கள் வந்துவிடும். தினகாலண்டர், மாதக் காலண்டர் என்று இருவகையிலும் அளிப்பார்கள். இந்த ஆண்டு ஒரு தினக்காலண்டர் எனக்காக என் குடும்பத்தார் தனியே எடுத்து வைத்திருந்தார்கள். காந்திப்படம் போட்ட பெரிய காலண்டர் அது. உங்கள் அறையில் மேஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொள்ள எனக்காகவே எடுத்து வைத்தார்கள். வேண்டாம் என்றபோது, உங்களுக்குதான் காந்தி பிடிக்குமே என்று சிரித்தபடி என்னிடமே கொடுத்துவிட்டார்கள். எனக்கு காந்தியை பிடிக்கும் என்பதுசரிதான். மற்றவர்களுக்கு பிடிக்காது என்று எடுத்துக்கொள்வதா? அவர்களுக்கு ஏன் சிரிப்பு வருகிறது? 


Tuesday, January 3, 2017

நினைவுப்பறவை



எழுத்துவகைகளில் நாஸ்டல்ஜியா முதன்மையானது. எப்போதும் கால மாற்றத்தை குறித்து கவலைப்படுவதும், அந்த நாட்கள் திரும்பி வாராது என்கிற ஏக்கமும் கொண்ட எழுத்துவகைக்கு ரசிகர்கூட்டம் நிரம்பவே உண்டு. ஏன் நமக்கு அந்தகைய ஏக்கம் தேவையாக இருக்கிறது என்பதை தனியே ஆராய்ச்சி செய்யவேண்டும். நாவல்களின் பிரதான எழுத்தே காலமாற்றத்தை எழுதுவதும் வாழ்ந்த வாழ்வை பின்னோக்கி பார்த்து அதை கொண்டாடுவதும் தான். அதுதவிர கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எல்லாம் ஏக்க எழுத்துக்கள்தான்.

Monday, January 2, 2017

விஷ்ணுபுரம் 2016 விருது விழா



விருது தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதன் கொண்டாட்டங்களை கவனித்து வருகிறேன். எந்த அதிகார குறுக்கீடுகளும், வரம்புமீறல்களும் இல்லாமல் ஒரு விருது சின்ன கட்டுப்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுவதும், சந்திப்புகள் ஒரு இனிய அனுபவமாக மாறும்வகையில் நண்பர்களுக்கிடையே இணக்கமான சூழலும் அமைவதை ஒவ்வொரு ஆண்டும் பார்க்க ஆர்வமாக இருக்கிறது. ஒவ்வொரு சமயமும் தூரமும், வேலையும் தடுத்தபடி இருந்தன. இந்தமுறை எனக்கு அளிக்கப்பட்ட வாசகசாலை விருது தடுத்துவிட்டது. இரண்டு நாட்கள் நடக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவிற்கு இந்த ஆண்டு ஒரு நாள் நிகழ்வில், அதுவும் விருது அளிக்கும் நிகழ்வில், எப்படியோ கலந்துக்கொண்டுவிட்டேன்.

Sunday, January 1, 2017

வாசகசாலை 2016 இலக்கிய விருது



என் கதைகளை தொகுப்பாக வெளியீட்டபோது சில கதைகளை எடுத்துவிட்டு மேலும் நல்லக் கதைகளை எழுதியபின் அவைகளையும் இணைத்து வெளியிட்டிருக்கலாம் என்று நண்பர்களால் சொல்லப்பட்டது. நானும் சற்று குழப்பமாக இருந்தேன். வாசகசாலையின் கார்த்திக் போன் செய்தபோது தவறுதலாக சொல்லப்பட்டிருக்கலாம் என்றுகூட நினைத்தேன். ஆம் வாசகசாலை அமைப்பின் சிறந்த சிறுகதை தொகுப்பாக என் சாமத்தில் முனகும் கதவு தேர்வு செய்யப்பட்டிருந்தது. என் தொகுப்பின் மீது நம்பிக்கை கொள்ள முடிந்தது. ஒரேபாணி கதைகளாக இல்லாமல் சில சோதனை முயற்சிகளும் புதிய பாணி கதைகளும் கொண்ட இந்த தொகுப்பு நான் விரும்பும்படியே அமைந்திருக்கிறது.