ஒரு இலக்கிய நிகழ்வில் மீண்டும் மீண்டும் பேசத்துாண்டுவது இலக்கியம் ஏன்? எதற்காக? என்பது குறித்துதான். அரங்குக்கு வெளியே தஞ்சை சுறுசுறுப்பாக மந்தமாக இளகுவாக எரிச்சலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இடைவிடாத பயணத்திலிருக்கிறார்கள். போக்குவரத்து நெரிகிறது. அலுவலகம் எதன்பொருட்டோ விடுமுறையிலும் இயங்குகிறது. இதிலெ்லாம் தற்சமயத்துக்கு அக்கறையின்றி எதன்பொருட்டோ நாம் இருபது பேராவது புறவுலகை விட்டு தனித்து இயங்க இங்கு கூடியிருக்கிறோம். இலக்கியக்கூட்டங்கள் குறித்து கேள்விப்படுபவர்கள் கூட இது உப்புக்காகுமா..? புளிக்காகுமா..? என்று நம்மை நகர்த்தி விட்டு ஓடி மறைகிறார்கள். பிறகேன் இலக்கியம்? ஒரே வார்த்தையில் கூற வேண்டுமெனில் நிகழ் வாழ்வுக்கும் மேலதிகமான விரிந்த வாழ்வை இங்கே வாழ முடிகிறது. அதனை மொழியின் வழியே புனைந்தளிக்கும் மயக்கம்தான் இலக்கியம். அதுதான் நம்மை கடத்திக் கொண்டு வந்து இங்கு சேர்த்திருக்கிறது. இலக்கியம் புனைவு மட்டுமல்ல. அது கற்பனையை கொண்டு போடப்பட்ட அறிவுக்கான பாதை. இங்கு பலரின் அனுபவங்களை இலக்கியத்தின் வழி ஒருவரே அடைந்து விடலாம். நிகழ்ந்த வாழ்க்கையிலிருந்து நிகழவிருக்கும் வாழ்க்கைக்கு இலக்கியத்தில் ஏறி சென்று விடலாம். அதுதான் போதை. அதுதான் அதன் பாதை.அந்த பாதையில்தான் சி.எம்.முத்துவும் பயணிக்கிறார்.
Showing posts with label தஞ்சை கூடல். Show all posts
Showing posts with label தஞ்சை கூடல். Show all posts
Tuesday, February 18, 2020
முத்து70: வரவேற்புரை
அனைவருக்கும் வணக்கம்.
மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களுக்கும், விழாவிற்கு வந்திருக்கும்
நண்பர்களுக்கு என் முதற்கண் வணக்கம்.
விழா நாயகன் திரு சி.எம். முத்து அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.
குடந்தையிலிருந்து ஆர்வத்துடன் சிஎம் முத்துவின் மீது அளப்பரிய அன்புடன் இங்கு வந்திருக்கும்
ஜி.பி. இளங்கோவன், ஜி.சரவணன் ஆகியோர்களை வருக வருக என வரவேற்கிறேன். தஞ்சை நாயகர்கள்,
சி.எம் முத்து அவர்களின் இனிய நண்பர்கள், அவரை குறித்த நட்பு அனுபவத்தை பேச இருக்கும்,
திருவாளர்கள் நா.விச்வநாதன், நந்தி செல்லதுரை ஆகியோரை வருக வருக என வரவேற்க்கிறேன்.
தஞ்சைகூடல் வாசக குழுவிலுள்ள என் நண்பர்கள், திருவாளர்கள் செழியரசு,
வீ.கலியபெருமாள், பா.சாமிநாதன், கலைச்செல்வி, தி.ஹேமலதா, கவியரசுநேசன், ஆசைத்தம்பி,
சு.பார்த்திபன், ஆகியோரை வருக வருக என வரவேற்கிறேன்.
Wednesday, January 22, 2020
மண்ணும் மனிதரும்: எதிர்பாராதவையின் ருசி
மூன்று தலைமுறை மனிதர்களை ஒரு
நேர்கோட்டு பார்வையில் சந்திக்கும் தருணம் அமைவது வாழ்வில் மிகச் சில கணங்கள் மட்டுமே.
எனக்கு தெரிந்த குடும்பங்களில் எல்லாம் ஏதோ ஒரு தலைமுறை வாழ்க்கையை தொலைத்ததும் அந்த
குடும்ப தொடர்ச்சி அறுந்து கிணற்றில் பாதியில் தொங்கும் எட்டா கயிறு போல நின்றுவிடுகிறது.
நான் சந்தித்த சத்திய மூர்த்தி என்கிற மனிதர் தன் தந்தையை போன்று வறுமையில் உழன்று
எல்லா தோல்விகளையும் சந்தித்து மனைவி, மகள், சொத்து, வீடு எல்லாவற்றையும் இழந்து நின்ற
கோலம் இன்றும் நினைவில் இருக்கிறது. அவர் மகள் வயிற்று பெண்ணால் அந்த குடும்பம் மேலே
வரும்போது அவர் உயிருடன் இல்லை.
Monday, January 20, 2020
நாவலை ஏன் விமர்சிக்க வேண்டும்
நாவலை விமர்சிக்க வேண்டும் என்கிற எண்ணம் அதை படிக்கிற ஒவ்வொருவருக்கும் படிக்கும்போது ஏற்பட்டுவிடுகிறது. நாவலின் மீதான நேர்மறை எதிர்மறை கருத்துகளின் வழியாகவே அதை வாசிக்கிறார்கள். ஆனால் குறைவாக வாசிப்பை கொண்டிருக்கும் வாசகர்கள், பொதுவெளியில் நாவல் மீதான விமர்சனங்களை தவிர்த்து அதன் சிறப்பு கூறுகளை மட்டும் பேசினால் போதும் என கூறுவார்கள்.
மண்ணும் மனிதரும் விமர்சனம் - கலியபெருமாள் வீராசாமி
மண்ணும் மனிதரும் இது ஒப்பீடு அளவில் முக்கியமான காலத்தோடு ஒத்திசைவுள்ள நாவல் எனவும் சேர்த்துக் கொள்ளலாம் மண் எப்படி வெளியே உள்ளதை, விதைப்பதையும் நீரையும், உரம் ஆகியவற்றை உள்வாங்கி விதையை வளர்த்து மரம், செடி, கொடி ஆக்குகிறதோ மனித வாழ்வும் அப்படியே வெளிபடும் விஷயங்களில் மாறுபடுகிறோம் பாடுபட்டு உழைத்தால் பலன் உண்டு.
Monday, December 23, 2019
சக்கை - நாவல் விமர்சனம்
கல்குவாரியில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை நாம் அதிகம் இதுவரை அறிந்ததில்லை. அவர்களின் வாழ்க்கை சாதாரண வாழ்விலிருந்து மிகவும் பின்தங்கியது. கடுமையான உழைப்பில் கரைந்துவிடும் இம்மக்கள் தம் வாழ்க்கையில் கலை, பாரம்பரியம், கேளிக்கைகள் போன்றவைகள் என்னவென்று அறியாதவர்கள். கிராமங்களிலிருந்து விலகி தனித்த வாழ்க்கையை வாழ்பவர்கள். பல தசாப்தமாக தனித்து வாழும் இம்மக்கள் அறிந்த ஒரே சொல் கல்.
Friday, October 11, 2019
கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் - காடு விமர்சனம்
குட்டப்பனின் வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற ஆசை கொண்டதனாலேயே கிரிதரன் தன் வாழ்வை தொலைக்கிறான் என்கிற எண்ணம் வந்தபோது காலை தூக்க கனவிலிருந்து எழுந்தமர்ந்தேன். உண்மைதானா என்கிற எண்ணம் நாள் முழுவதும் தொடர்ந்தது. அப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது இஞ்சினியர் அய்யரையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். குட்டப்பனின் தெளிவு, எல்லாவற்றிற்கும் தீர்வு காணும் குணம், சோர்வேயறியாத உடல்பலம், எல்லோருக்கும் பயன்படும் அவன் சேவைகள் கண்டு வளரும் கிரி தன்னை குட்டப்பனாக நினைக்கிறான். அதுஒரு எல்லை, மற்றொரு எல்லையில் அய்யர் இருக்கிறார். அவரது இலக்கிய ரசனை, எப்போதும் அவரிடமிருக்கும் உச்சநிலை, வேலைமுடிந்ததும் இடங்கொள்ளும் வனப்பிரஸ்தம், என்று மற்றொரு எல்லையை நோக்கி செல்ல எத்தனித்துக் கொண்டேயிருக்கிறான். நீலியும், வேணியும், அவன் அம்மாவும் அவனை அலைக்கழிக்க விடுகிறார்கள். வாழ்வின் எந்தப்பக்கத்திற்கும் செல்ல அவனால் முடியவில்லை. மாறாக அவன் மாமா சதாசிவத்தின் வழிசென்று காணாமல் ஆகிறான்.
Sunday, September 29, 2019
காடு - வாசிப்பும் மறுவாசிப்பும் - கலைச்செல்வி
இருவாசிப்புகளுக்கு இடைப்பட்ட காலம் கிட்டத்தட்ட நான்காண்டுகள்.
இந்த நான்காண்டுகளில் நிறைய புத்தகங்கள் வாசித்தாயிற்று. நிறைய எழுதியுமிருக்கிறேன்.
இடையில் நகர்ந்த காலங்களுக்குள் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள தோன்றுகிறது. பொதுவாக ஆழ்ந்த வாசிப்பு அல்லது தன்னை
ஒப்புக்கொடுக்கும் வாசிப்பு நேரும்போதெல்லாம் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அல்லது
பின்பக்கத்திலிருக்கும் வெற்றுத்தாளில் யார் யாருக்கு உறவு, அவர்களின் பெயர்கள், பிடித்தமான
அல்லது கவனம் கோரும் பக்கங்கள் குறித்த பென்சில் குறிப்புகள் போன்றவற்றறை எழுதிக் கொள்வது
என் வழக்கம். (மஹ்ஷர் பெருவெளியில் ஒரு குடும்ப மரமே வரைந்திருந்தேன். பிறகுதான் பின்னட்டை
பக்கம் திருப்பினேன். அவர்கள் குடும்பமரத்தை அச்சிட்டே வைத்திருந்தார்கள். ஹாஹா..)
அப்படியாகதான் 2015ல் நான் காடு நாவலை வாசித்திருந்தேன். அன்று நான் குறித்து வைத்திருந்த
பக்கங்களுக்கும் இன்று நான் என்னை மறந்து கதைக்குள் ஊடுருவி நின்ற சம்பவங்களுக்குமிருந்த
இடைவெளி என் மாற்றத்தை காட்டி நின்றது. (கிண்டிலில் அடிக்கோடிடலாம். ஆனால் முன்னட்டை,
பின்னட்டையில் பென்சில் குறிப்புகள் எழுதிக் கொள்ள முடியாதது குறைதான்.)
Thursday, September 5, 2019
கானல் நதி விமர்சனம் - கலைச்செல்வி
எந்த முன்முடிவுமின்றி ஒரு நாவலை
அணுகுவதே ஒரு சுவாரஸ்யம்தான். கானல்நதியை அப்படிதான் அணுகினேன். தபலா மேதை
குருச்சரண்தாஸ் தனது நண்பனான இந்துஸ்தானி இசை பாடகன் தனஞ்செய்முகர்ஜியின்
வாழ்க்கையை நாவலாக எழுதும்படி கேசவசிங்சோலங்கியிடம் கேட்டுக் கொள்கிறார் என்ற
கேசவ்சிங்சோலங்கியின் முன் அறிமுகத்தோடு நாவல் தொடங்குகிறது. ஆனால் அது நாவலின்
தொடக்கம் என்பதை அறியமுடியாமல், முன் அறிமுகத்தில் இருந்தபடி சாரங்கன் என்பவரால்
தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல் என்று எண்ணிக் கொண்டேன். பிறகு எங்கிருந்து
யுவன்…? நாவலின் களம் வங்காள கிராமத்திலிருந்து துவங்குவது வேறு என் குழப்பத்தை
கூடுதலாக்கியது.
Tuesday, September 3, 2019
இசைவாகா வாழ்க்கை - கானல் நதி விமர்சனம்
இசை வாழ்க்கை என்பது ஒரு பழமையான வாழ்க்கை முறையோடு இயைந்துவிட்டது என்கிற எண்ணம் நம் மனதில் எங்கோ இருக்கிறது. கிராமபோன், அதன் இசைத்தட்டுகள், வால்வு ரேடியோக்கள், ஹார்மோனியம், பழைய
வீணை ஆகியவைகளின்
நினைவுகள் நம் அந்த உணர்வுகளை உறுதிப்படுத்துகின்றன. பழமையடையும்போது இசைக்கு திடமான ஒரு அழுத்த உணர்ச்சி கூடிவிடுகிறது போலும். இசை பழமை அடைய அடைய அது எளிமையடைகிறது, கூடவே இசையின் நுணுக்கங்கள் புரிபட ஆரம்பிக்கின்றன. புதிதாக இருக்கும்போது மெட்டின் மேல் குவியும் மனம் பழையதாகும்போது வார்த்தைகளின் மேல் குடிகொள்கிறதே அதுபோல.
Monday, August 5, 2019
கலங்கிய நதி வாசிப்பனுபவம்
தில்லியில் இருந்த சமயங்களில் அறிந்த ஒன்று அங்குவாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தில்லிவாழ் மக்கள் எப்போதும்
பொருட்படுத்தி அவர்களை மதித்து அவர்களுடன் இணக்கமாக மற்ற மக்களிடம் இருப்பது போல் இருந்ததில்லை
என்பதுதான். அதாவது அவர்கள் இரண்டாம்தர மனிதர்களாகத்தான் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக அவர்களின் பூர்வீக இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து அகதிபோல் வாழ்வது ஒரு காரணம். அவர்கள் வாழ்ந்த இடம் மிக மோசமானதாக சூழல் தொடரும் இடமாக இன்றும் இருக்கிறது.
Sunday, July 28, 2019
கலங்கிய நதி விமர்சனம் - அண்டனூர் சுரா
கற்பனை -1
தேச பிரதமர் - தீவிரவாதி, நக்சலைடு அல்லது அவரது கட்சிக்காரர்களால் கடத்தப்படுகிறார் என வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்...?. பிரதமர் நாற்காலியில் மற்றொரு பிரதமர் உட்காரும் வரை தேடுதல் பணி கிஞ்சிற்றும் தொடங்கியிருக்காது. புதியப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்ததன் பிறகு காணாமல் போனவர் திரும்பி வந்தால், அவரது பதவி என்னாகுமென்று கணிப்பின் அடிப்படையிலேயே அவர் தேடுதல் பணியை முடுக்குவார். அதற்குள்ளாக, ஒரு சராசரி குடிமகன் இந்த உலகை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருப்பான்.
Friday, July 19, 2019
காஃப்காவின் நாய்க்குட்டி விமர்சனம் - இரா.கதிரேசன்
தஞ்சை இலக்கிய கூடல் சார்பாக நடந்த
கூட்டத்தில் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின்
காஃப்காவின் நாய்க்குட்டி பேசுவதற்கு எடுத்துக் கொண்டார்கள்.
எதார்த்த
வாத நாவலின் சாயலில் அமைந்துள்ள பின் நவீனத்துவ நாவல் என்று இதை கூறலாம். பின்
நவினத்துவ நாவல்களின் பண்புக்கூறான carnival தன்மை இந்நாவலில் இருக்கிறது. நிலபிரபுத்துவ
சமூகம் மறைந்து தொழில் மைய சமூகம் உருவாகும் காலகட்டத்தில்தான் ஒரு இனக்குழுவாக
இருந்த மனிதன் தன்னை தனிமனிதனாக உணருகிறான். ஆகவே இலக்கியத்திலும் அதுவரை இருந்த ஒட்டு
மொத்த சமுகத்தை எழுதும் எழுத்து முறை மாறி தனி மனிதனின் புற அக உலக நெருக்கடிகளை,
கொந்தளிப்புகளை பேசக்கூடிய படைப்புகள் உருவாகின.
Tuesday, February 28, 2017
தஞ்சை கூடலின் முதல் சிறுகதை கூட்டம்
சிறுகதைக்கு கூட்டம் கூட்டுவது என்பது பெரிய சங்கடமான விஷயம். பழந்தமிழ் இலக்கியங்களுக்கு பேசும் பேச்சாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பேசப்படும் படைப்பின் ஆசிரியர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள். அத்தோடு செல்லமாக அவன் இவன் சொல்லலாம். அந்த ஆசிரியரின் படைப்புடன் நெருக்கமாக இருக்கிறோம் என்கிற அர்த்தம் அதில் வந்துவிடுகிறது. எ.கா. கம்பன் என்ன சொன்னான்?, பாரதி இப்படி பாடினானே?
சிறுகதைக்கு கூட்டம் கூட்டும்போது ஆசிரியர் காலமாகியவர் என்றால் கொஞ்சம் தப்பிக்கலாம். அப்போது சாதிய அடையாளங்கள் அவர் மேல் போடப்பட்டு புகழ்ந்து/இகழ்ந்து பேசுபவர்களை நண்பராக/எதிரியாக பார்க்கப்படும். சமகாலத்து எழுத்தாளர்கள் என்றால் எங்கும் தப்பிக்க முடியாது. ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியம். கொஞ்சம் கிழிறக்கி பேசிவிட்டால் போச்சு. ஊரே பற்றி எறியலாம். அல்லது பெருமழை பெய்யலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)












