தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இல்லாத காலங்களில் நாம் அதிகம்
பார்த்த விளம்பரங்கள் நிர்மா, சாரிடான், அனாசின், விக்ஸ், கோல்கேட், 501, டெட், ஜீவன்டோன் போன்றவைகள் தான் இருக்கும். இவைகளை தாண்டி வேறு விளம்பரங்களை கவனித்து
ஒருவர் தம் மனதில் நிறுத்தியிருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் வித்தியாசமான ஆள் தான்.
அவருக்கு விளம்பரங்களின் மீது தனியாத ஆர்வமும், தொடர்ந்து நாட்டு நடப்புகளை கவனிப்பவருமாக இருப்பார் என நினைக்கிறேன்.
எந்த திரையரங்கிலும் சினிமாவிற்கு முன் காட்டபடும் ஆரம்ப
விளம்பர பகுதிகளில் இந்த விளம்பரங்கள் இருக்கும். இவற்றில் சில விளம்பரங்கள் இன்றும் தொடர்கின்றன.
ஆனால் ஆரம்ப காலங்களில் அதாவது 70-80களில்
இவைகளை வாங்க வைக்க இதன் நிறுவனங்கல் மிக சிரமபட்டன. பெரிய போட்டிகள் இல்லாத காலங்களில் இவைகளை
வாங்க மக்கள் ஏன் கஷ்டப்படவேண்டும். அப்போது மக்களுக்கு தேவையானவைகள் அவர்கள் இருக்கும் இடங்களியே கிடைத்துவந்தன. சோப்பிற்கு சவுக்காரம் கட்டி, பேஸ்டுக்கு பற்பொடி, தலைவலிக்கு சுக்கு கஷாயம் என்று அனைத்துமே
கிடைத்தன. ஆகவே மக்களுக்கு இவைகளைத் தாண்டி காசு கொடுத்து (அல்லது அதிக காசு கொடுத்து) வாங்க வேண்டிய
அவசியம் இல்லாமல் இருந்தது.