தொலைக்காட்சியில் ஒரு பெண்மணி குழந்தைகளின் டிவியில் உணவு
விளம்பரங்கள் வரக்கூடாது என்று கூறிக்கொண்டிருந்தார். சட்டப்படி அப்படி இருக்கிறதா
தெரியவில்லை, ஆனால் அவர் சொல்வது முற்றிலும் சரி என்று
நினைக்கிறேன். குழந்தைகள்
அந்தவயதில் அதிகம் பார்ப்பது, கேட்பதுமான விஷயங்கள்தான் அவர்கள் மனதில்
ஆழப்பதிவாகின்றன என்று சொல்வார்கள். மற்ற டிவியில் வரும் பர்கர், பீசா, நூடுஸ்கள்
போன்ற விளம்பரங்கள் அவர்களை சாப்பிட
தூண்டினாலும், குழந்தைகளுக்கான பிரத்தியேக டிவியில்
இந்த விளம்பரங்கள் வரும்போது இன்னும் அதிகமாக அவற்றை மட்டுமே உண்ண வேண்டும் என நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
குழந்தைகளின் உணவு பிரச்சனை எல்லா வீடுகளிலும் இருக்கிறது.
எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் இதை உண்பதில்லை அதை உண்பதில்லை என்று பெருமை படுவதை
பற்றி ஒரு கிண்டல்கூட இருக்கிறது. வருத்தம் தானே படவேண்டும்? மாறாக பெருமை படுகிறார்கள். அவர்களே இதை
ரசிக்கிறார்கள்,
தங்கள் குழந்தைகள்
உடல் நலம் கெட்டு,
ஆரோக்கியமற்ற குழந்தைகளாக
வளர அவர்கள் பிரிய படுகிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.
காய்கறிகள், கீரை இரண்டும் குழந்தைகளுக்கான மிக முக்கிய உணவாக டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
நகரங்களில் கீரைகள் கிடைப்பதில்லை, ஆனால் காய்ந்த காய்கறிகள் கிடைக்கும். அதுவும் மாவுசத்துகள் கொண்ட
உருளை, காலிபிளவர், அப்புறம் முட்டைக்கோஸ், பட்டாணி போன்றவைகளைத் தாண்டி அதிகம் கிடைப்பதில்லை, இவைகள் அதிகம் கெடாது என்பதால் எல்லா கடைகளிலும்
கிடைக்கும்.
ஒரு வயதுமுதல் குழந்தைகளுக்கான உணவுகள் பெரியவர்களின் உணவையே
உண்ண கொடுக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் என்பதுகளுக்கு பின்னால் எல்லா
வீடுகளிலும் காய்கறி, கீரை, பருப்பு போன்ற உணவுகள் தவிர்க்கப்பட்டு
சோறும் அதனுடன் சேர்ந்து அப்பளம், வத்தல், பஜ்ஜி போன்றவை உணவுகள் தான் கொடுக்கப்படுகின்றன.
நகரத்தில் இன்னும் அதிகம்.
குழந்தைகள் ஐந்து வயதிற்கு மேலேயே பீசா சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.
மைதா, உருளைக்கிழங்கு, பட்டாணி, சீஸ் போன்றவைகளை மட்டும் சேர்க்கப்படும்
இந்த மாதிரியான உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பல பொருட்கள் இருப்பதாக தெரிகிறது.
அப்புறம் நூடுல்ஸ், இவற்றில் அதிகம் காய்கறிகளை சேர்க்க முடியாது அதிகம்போனால் கேரட், முட்டைகோஸ் அவ்வளவுதான். நூடுல்ஸில் இருக்கும்
வேதிப் பொருட்கள் என்ன என்பது நமக்கு தெரியாது. என்னென்ன பிரிசர்வேட்டிவ் சேர்க்கபடுகின்றன
என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குழந்தை டிவிக்களில் உணவு விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டும்.
எந்த மாதிரியான உணவுகளை குழந்தகளுக்கு கொடுக்க வேண்டும் எனபதை பெற்றோர்கள் முன்பே
முடிவு செய்து கொள்ளவேண்டும் அதன்படி அவர்களுக்கு அந்த உணவுகள் கிடைக்க ஒரு லிஸ்ட்
தயார் செய்துக் கொள்ளலாம். சில பள்ளிகளில் குழந்தைகளுக்கான உணவில் இன்ன தேதியில் இந்த
உணவுகள் அளிக்க வேண்டும் என்று லிஸ்ட கொடுத்துவிடுகிறார்கள். இது குழந்தைகளுக்கிடையே
தாழ்வுமனப்பாண்மையை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுதான் என்றாலும்
சிறந்த உணவுகள் அவர்களுக்கு கிடைக்கும். இதையே தினமும் வீடுகளிலும் பயன்படுத்தலாம்.
நூடுல்ஸ் பீசா மட்டுமல்ல, வற்றல், அப்பளம் போன்ற எண்ணெய் வஸ்துகளும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
காய்கறிகள், கீரைகள், வேகவைத்த
உணவுகள், முளைக்கட்டிய பயிறுகள், பழங்கள் போன்றவைகளை தினமும் குழந்தைகள்
கொடுக்கப்படவேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துவதை அலட்சிய படுத்தக் கூடாது என நினைக்கிறேன்.
அந்த லிஸ்டில் இவைகள் வாரத்தில் ஒருமுறையாவது இடம் பெறவேண்டும்.
1 comment:
Post a Comment