நடிகர்களுக்கும் அவர்கள் நடிக்கும் விளம்பரங்களும் சம்பந்தமில்லை, அது வெறும் நடிப்புதான்,
அதை சீரியசாக எடுத்துக்கொள்ளகூடாது, அந்த பொருளின் அம்பாசிடர் கிடையாது என்று பலவாறு பேசப்படுவதை கேட்கிறோம்.
எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருக்கும்போது இதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஒரு அசம்பாவிதமும், விளம்பரங்களுக்கு எதிரானதும் நடக்கும்போதுதான் இதை பெரிதாக விவாதிக்கவேண்டியிருக்கிறது.
அதுவரை சம்பந்தப்பட்ட நடிகர்கள் கவலை கொள்ளாது பணத்தை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சினிமா நாடகம் போன்றவைகள் நடிப்புதான். அவர்கள் ஏற்றிருக்கும்
பாத்திரத்தை சரியாக இயக்குனர்கள் சொல்வது மாதிரி நடித்துக் கொடுத்துவிடுகிறார்கள்.
சிலர் வெற்றிபெறுவதும் சிலர் அதில் தோல்வியடைவதும் நடக்கிறது. ஆனால் விளம்பரம் நடிப்பல்ல, நிஜம். நிஜமாக சொல்லப்படுகிற ஒரு விஷயத்தை நடித்து சொல்கிறார்கள்.
ஆகவே வரும் எல்லா விளம்பரத்திலும் அவர்கள் நடிப்பார்கள் என்று சொல்லமுடியுமா? காண்டம் விளம்பரத்திற்கு இந்த நடிகர்கள் நடிப்பார்களா? அல்லது இரவு 11 மணிக்கு மேல் அந்தரங்கம் பேசும்
டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வர சம்பதிப்பார்களா? என்பதையும் யோசிக்க வேண்டும்.