Thursday, June 6, 2019

வருத்தம் தெரிவித்தலும், மன்னிப்பு கோருதலும்



அண்ணா ஒரு சின்ன சந்தேகம். வருத்தம் தெரிவித்தல் , மன்னிப்பு கோருதல் இரண்டு வார்த்தைகளும் வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தபடுகின்றனவா?

-பிரகாஷ் மூர்த்தி, கிளிநொச்சி.

அன்புள்ள பிரகாஷ்

சாதாரணமாக இதைப் பார்க்கும்போது பெரிய வித்தியாசம் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஒரே அர்த்தத்தைதான் அளிக்கின்றன, ஆனாலும் சின்ன வித்தியாசம் இருக்கிறது. மேற்குலக நண்பர்களிடம் பழகுபோது அல்லது மேற்குலக தாக்கம் உள்ள நண்பர்களை சந்திக்கும்போது நமக்கு இந்த சந்தேக எழுகிறது என நினைக்கிறேன்.
வருத்தம் தெரிவிப்பது என்பது ஆங்கில வார்த்தைகளின் நேரடி தமிழாக்கம். “ சே சாரி, ஐ ஃபீல் சாரி” என்கிற பதத்தின் தமிழ் வடிவம். நான் வேலை செய்த அமெரிக்க நிறுவனத்தின் ஊழியர்களிடம் பேசும்போது சின்ன விஷயங்களை பரிமாறிக்கொள்ளும்போதுகூடசாரி, தேங்க்யூ” போன்ற வார்த்தைகளுடனேயே பேசவேண்டியிருக்கும். மிகவும் பண்பட்ட வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொள்ள வேண்டும். ஒரு விஷயம் தனக்கு தெரியவில்லை என்றால்பிளீஸ் அட்வைஸ் மீ” என்று கேட்டுக் கொள்ள வேண்டும். அவர்களுக்குள்ளும் அப்படிதான். அப்படிசாரி, தேங்க்யூ” சொல்லாத வார்த்தைகள் அவமரியாதையாக பார்க்கப்படும். வேறு வழியில்லாமல் நமக்கும் அப்படிதான் பேசவேண்டியிருக்கும்.

நம் தமிழ், இந்திய, ஆசிய பண்பாட்டில் மன்னிப்பு கேட்பது ஒருவரது கடைசிநிலைப்பாடு என்கிற எண்ணம் நமக்கு இருக்கிறது. கடைசியாக தோல்வியை ஒப்புக்கொள்வது போல. நாம் சாதாரண உரையாடல்களில் “நன்றி, மன்னிப்பு” போன்றவைகளை கேட்க தேவையில்லை. தனக்கு கீழ் உள்ளவர்களிடம் அவைகளை சொல்லத் தேவையேயில்லை.

நான் வாழ்ந்த மகாராஷ்டிரா, தில்லி பகுதியில், மன்னிப்பு வார்த்தையை பிரயோகிக்கும்போது தமிழ் மக்களைப் போல திகைத்து நிற்பதை கவனித்திருக்கிறேன். புனேயில் இருந்த சமயத்தில் ஒரு விசயத்திற்காக சாரி கேட்டபோது சம்பந்தப்பட்ட நபர் சமாதானமாகவில்லை. மற்றொருவரிடம் சாரி மராட்டியில் கேட்டு அவரிடம் சொன்னதும் அதிர்ந்துவிட்டார். இல்ல பரவாயில்லை, என்று பதறினார்.

இந்திய பண்பாட்டில் காலால் ஒருவரை தெரியாமல் இடித்துவிட்டால் பெரிய குற்றம். உடனே அவர் அவரை கைகளால் தொட்டு வணங்கவேண்டும்.

மேற்குலகில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என நினைக்கிறேன். நமக்கு நிச்சயம் உண்டு.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மேற்குலகிலும் இச்சொற்களுக்கிடையே வித்யாசம் உள்ளதைப் படித்திருக்கிறேன். சில நிகழ்வுகளில்தான் அவர்கள் மன்னிப்புக் கோருகிறார்கள். சில நிகழ்வுகளின்போது வருத்தம் தெரிவிக்கிறார்கள். எந்தெந்த இடத்தில் எதனைத் தெரிவிக்கவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.