Thursday, November 26, 2015

லாலுவும் நீலுவும்சிறுவர்களுக்கான பாலுவும் நீலுவும் என்ற ஒரு நாவலை முன்பு படித்தது நினைவிருக்கிறது. பாலு நல்லவன் நீலு கேட்டவன். இருவரும் அவர்களுக்குள் நடக்கும் சின்ன சண்டைகளும் சமாதனங்களும், எது சிறந்தது, மேன்மையானது போன்ற சிலவற்றை இருவரும்  புரிந்து கொள்வதும் என கதை நகரும். இரு சிறுவர்கள் காடு மலை நகரம் என்று சைக்கிளில் பயணிப்பதை படிக்க அத்தனை ஆனந்தமாக இருந்ததாக நினைவு. இன்று லாலுவும், நீலுவும் (நிதீஷ்) அப்படி தங்களுக்குள் நட்பை வளர்த்து சுற்றி திரிவதாக நினைத்துக் கொள்கிறேன். முற்றிலும் வெவ்வேறு குணங்களை கொண்ட இருவர் சேர்ந்து தங்களுக்கு சமரசங்களை வளர்த்துக் கொள்வதை இனி வருங்காலத்தில் லாலு, நிதீஷ் உறவிலும் சொல்லலாம் என நினைக்கிறேன்.
நிதீஷ் குமார் சின்ன அரசியல் தலைவராக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று பெரும் அரசியல் தலைவராக பீகாரில் உருவெடுத்திருக்கிறார். இரண்டு முறை ஆட்சிக் காலத்தை முடித்திருக்கும் அவர் சிறந்த ஆட்சியை அளித்தும் இருக்கிறார். எந்த பெரிய ஊழல்களும் அவர் ஆட்சியில் இல்லை. மாறாக நல்ல முன்னேற்றத்தை அவர் ஆட்சி காலத்தில் பீகார் அடைந்திருக்கிறது. எல்லா பத்திரிக்கைகளும் அவரை புகழ்ந்து கூறியே இருக்கின்றன. பீகார் அடைந்த வளர்ச்சி விகிதம் மற்ற எந்த மாநிலத்தைவிடவும் அதிகம்.
எதிர்காலத்தில் பிரதமராகவும் ஆக தகுதி இருப்பதாக அவரைப் பற்றி புகழ்ந்து பேசப்பட்டது. ஆனால் இதெல்லாம் ஒரு காலகட்டம்வரைதான். பிஜேபியில் மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், நிதிஷின் அணுகுமுறைகள் மாறுபாடு அடைந்தன.
அதுவரை பிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்த அவரது கட்சி சட்டென மதவாதம், வகுப்புவாதம் என்று விலக ஆரம்பித்தது. முக்கியமாக அதில் நாம் கவனிக்க வேண்டியது அவரது கட்சியின் செல்வாக்கு அதனால் சரிந்தது என நிதிஷ் உணர்ந்ததுதான். ஆகவே அவசரமாக விலகினார். அதுவரை எதிரணியில் இருந்த லாலுவின் கட்சியில் அவரை சந்தித்து பேசி கூட்டணி வைத்துக் கொண்டார். எந்த கட்சியில் அதிக ஊழல்கள் மலிந்துள்ளன என கூறப்பட்டதோ, எந்த கட்சி எதிர்த்து அரசியல் செய்து ஆட்சியை பிடித்தாரோ, அதே கட்சியுடன் கூட்டணியை பேசினார். எப்படி அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்துக்கொண்டால் தமிழகத்தில் ஆச்சரியமாக பார்க்கப்படுமோ அப்படி பார்க்கப்பட்டது.
ராஜதந்திரம் என்று மீடியாவால் பார்க்கப் பட்டாலும் அதுவரை கொஞ்சூண்டு இருந்த வளர்ச்சி இதனால் தடைபடும் என உறுதியானது. ஏனெனில் லாலுவின் கட்சி இடைசாதியினர்களான யாதவ் சாதியை தூக்கிப் பிடிக்கும் வேலையை செய்யும் கட்சி. அக்கட்சியில் தோன்றிய அடாவடிதனங்களுக்கு பயந்ததே மக்கள் லாலுவின் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்தனர்.
இடைநிலை சாதிகளுக்கு எதிராக தன் கட்சியை கொண்டு செல்லமுடியவில்லை என்றாலும் கொஞ்சமேனும் திறம்பட நடத்துவதாக சொல்ல்பட்ட கட்சி மீண்டும் பழைய வழிமுறைகளை பின்பற்ற மிக மோசமான கட்சியுடனேயே சேர்ந்துவிட்டது.
இந்த இருகட்சிகளால் பிஜேபி பின்னடைந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும், பிஜேபியின் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறது. அதிமுக, திமுக, காங்கிரஸ் என்ற கூட்டணி கட்சியை தேமுதிக எதிர்த்து ஆட்சியை எப்படி பிடிக்க முடியாதோ அதேதான் அங்கு நடந்துள்ளது. இருந்தும் அதிகபடியான வாங்கு வங்கியை அது அடைந்திருக்கிறது என்றுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.
லாலு ஆட்சியில் இல்லை என்றாலும் அவர் மகன்கள் தொடர்ந்து பல்வேறு அழுத்தங்களை கொடுக்கபோகிறார்கள். இன்னும் ஊழல்கள் நடக்கப் போகின்றன. ஆனால் அத‌ற்கான பொறுப்பை நிதிஷின் தலையில் போடப்போகிறார்கள். நிதிஷே வலிய சென்று வாங்கி கொண்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர்தானே லாலுவை தேடிச் சென்றவர்.

No comments: