Tuesday, November 24, 2015

மதங்கள், மக்கள் தொகை, கடவுள்



மதரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கானது சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வெளியாகும் பொதுசென்சஸில் மதம் சம்பந்தமான கணக்கெடுப்பும் நிகழ்கிறது. சாதிரீதியான கணக்கெடுப்பிற்கு இன்னும் நாம் பக்குவப்படவில்லை என நினைக்கிறேன். அதற்கான சண்டகள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன‌. ஆனால் மதம் சம்பந்தமான கணக்கெடுப்பு வெளியாவதற்கு மதம் ஒரு வெளிப்படையான அடையாளமாக தவிர்க்கமுடியாத ஒரு சின்னமாக ஒவ்வொருவருக்கும் இருப்பது காரணமாக இருக்கலாம். கணக்கெடுப்பு என வரும்போது அதை தொடர்ந்து அவதானிப்பவர்களிடம் ஒரு பதற்றம் இருப்பதை பார்க்கலாம். நான் சார்ந்திருக்கும் மதத்தில் எத்தனை சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். எத்தனை சதவிதம் உயர்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்காதவர்கள் யாரும் இல்லை எனலாம். அதை குறித்து பின்னாளில் பேசாமல் இருப்பவர்களும் மிக குறைவே.
நேரடியாக மதம் ஒரு தனிப்பட்டவர்களின் சார்பு அல்லது பிறப்பால் ஒருவருக்கு சேர்ந்துவிட்ட ஒரு த‌னித்துவம் என்று மட்டும் கொள்ள முடியவில்லை. அதன் பின்ன‌ணியில் உள்ள அரசியல், பொருளாதார பிரிவினைகளையும் பார்க்க வேண்டியிருகிறது. ஒரு தனிமனிதன் இன்ன மதத்தில் இருக்கிறேன் என்பதும், ஒரு தேசம் இன்ன மதத்தில் பெரும்பான்மையாக இருக்கிறது என்பதற்கும் இடையேயான‌ வேறுபாடு ஆழமானது.
இந்தியாவில் கிருஸ்தவ, பெள‌த்த, சீக்கிய மத்ங்கள் 1951ல் என்ன இடத்தில் இருந்தனவோ அதே இடத்தில் தான் 2011லும் இருக்கின்றன. அவைகளின் சதவிகித்தில் பெரிய மாற்றம் இல்லை. மக்கள் தொகை அதிகரிக்க அவர்களும் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் இந்து, முஸ்லீம் மதங்கள் அப்படி இல்லை. இந்துமதம் 84.1ல் இருந்து 79.8 ஆக மாறியிருக்கிறார்கள். மூஸ்லிம்மதம் 9.9ல் இருந்து 14.23ஆக உயர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு பத்தாண்டுகளில், சராசரியாக 1% இந்துமதத்தில் குறைவதும் இஸ்லாமில் 1% அதிகரிப்பதும் நடக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் இஸ்லாம் நாடாக இந்தியா மாறிவிடும் என்று யாராவது சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும்.
மதரீதியாக ஒரு நாடு அல்லது பகுதி முற்றிலும் மாறும்போது அங்குள்ள மரபுகளும், பண்பாட்டு முறைகளும் சின்னங்களும் வேகமாக அழிந்து முற்றிலும் தனியேவிட்டப்பட்ட ஒரு சமூகமாக மாறிவிடுகிறது. அதன் மரபு பண்பாட்டு தொடர்புகள் அறுந்து எந்த பிடிப்புமற்ற சூனியத்தில் நின்றுவிடுவதாக தோன்றுகிறது. அந்த பகுதியின் வாழ்வை பின் வந்த சந்ததியினாரால் புரிந்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. முன்பு ஸ்பெயினில், இஸ்ரேலில், எகிப்தில் இது நடந்திருக்கிறது. இஸ்ரேலில் எகிப்தில் இருப்பவர்கள் நேற்றைய மத, பழக்கவழக்கங்களை கொண்டவர்கள் இல்லை. அவர்கள் புதிதாக குடியேறியவர்களாகவும், முன்பே இருந்தவர்கள் அந்த மத நம்பிக்கைகளை கைவிட்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களிடம் முந்தைய சேமிப்புகள் எதுவும் இல்லை.
ஆனால் இந்தியா முந்தைய காலத்திலிருந்தே இருக்கும் மரபுகளை மாற்றாமல் வாழ்ந்து வரும் சமூகம். இங்கே மதங்கள் மாறினாலும் அதன் பண்பாட்டு சின்னங்கள், மரபுகள் மாறுவதில்லை. இந்து, சீக்கிய, சமண, பெளத மதங்களில் ஒவ்வொண்றும் கொடுத்தக் கொண்டும் எடுத்துக் கொண்டும் தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றன. ஆனால் மூஸ்லீம் மதம் அப்படி இல்லை. அதன் மரபுகள் முற்றிலும் நிலையானவைகள். அதனால் அது அந்த மதம் அடையும் எந்த உயர்வும் இழப்பும் முக்கியமானதுபோல் பார்க்கப்படுவதாக நினைக்கிறேன்.
இந்து முஸ்லீம் மத கலவரங்கள் நடக்கும்போது யார் அகதிகளாக வெளியேறுகிறார்கள் என்று பார்க்கப்படுவதை எப்படி புரிந்துக் கொள்வது என தெரியவில்லை. மேற்குலகில் இருக்கும் சகிப்பின்மை இந்திய இந்துக்களிடம் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். அதே வேளையில் இஸ்லாமிற்கு இந்தியாவில் இருக்கும் சுதந்திரம் முஸ்லீம் நாடுகளில்கூட இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பார்க்கலாம் இன்னும் 50 ஆண்டுகள் இருக்கின்றன.

No comments: