Wednesday, November 18, 2015

ஆட்டோகாரர்களை எதிர்கொள்ளல்ஆட்டோக்காரரை எதிர் கொள்வது என்பது எத்தனை சிரமமானது என்பதை எல்லா தமிழகவாசிகளுக்கு தெரியும். சென்னையில் இத்தனை பேருந்துகள் இருப்பதற்கு ஆட்டோகாரர்களின் அடாவடிதனம் தான் காரணம். இந்தியாவில் நான் பயணித்தவரை தமிழர்கள் கோழைகள் என்கிற முடிவை எடுக்க அவர்கள் ஆட்டோகாரர்களை எதிர் கொள்ள தெரியாததை ஒரு முக்கிய காரணமாக சொல்லலாம். மற்ற இடங்களில் ஒரு அளவிற்கு மேல் மீறிநடந்துக் கொண்டால் அந்த ஆட்டோகாரர் அந்த பகுதியிலிருந்து சென்றுவிட‌ முடியாது. ஆனால் சென்னையில் ஒரு ஆட்டோகாரர்கள் பணம் தரும் தன் பயணிகளை எந்த அளவிற்கு கீழ்தரமாக வும் நடத்தலாம். அவரை ஒரு கேள்வியும் கேட்க மற்ற மனிதர்களுக்கு தைரியம் வருவதில்லை.

ஒருமுறை ஒருவர் காரில் கண்களை கூசும் டிம் லைட்டுகளாக உள்ள ஹட் லைட்டுகளை பொருத்தப்பட்ட காரில் வந்துக்கொண்டிருந்தார். எதிர் வந்த ஆட்டோகாரர் அவரை போகவிடாமல் மறித்து நின்று என்னடா லைட் இது, எப்படி எதிர்தாப்பல வாரவனெல்லாம் போவன் என்று திட்டஆரம்பித்தார். அந்த கார்காரருக்கு 70 வயதிருக்கும். அவர் வாழ்வில் இதுவரை கேட்டிராத அத்தனை கெட்டவார்த்தைகளையும் கேட்டார். சற்று பணக்காராக தெரிந்த அந்த பெரியவர், தன் நண்பரின் வண்டியை எடுத்துவந்திருக்கிறார் என்று தெரிந்தது. எதுவே அவர் பேசவில்லை பயந்துபோய் தலைகுனிந்தபடி லேசாக முணுமுணுத்தில் இருந்து அவர் சொல்லவந்ததை புரிந்துக் கொள்ள முடிந்தது. நான் உட்பட அங்கிருந்த எல்லா மனிதர்களும் வேடிக்கைதான் பார்த்தனர், ஒரு கேள்வியும் கேட்கவில்லை.
ஆட்டோகாரர்களைவிட ரிக்ஷாகாரர்கள் இதைவிட மோசம். எந்த வாழ்க்கை விழுமியங்கள் இல்லாத அவர்களிடம் மாட்டும் மனிதர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் தான். இதைவிட அதிக வசவுகள் அவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆட்டோகாரர்கள் தைரியமாக செயல்படுவதற்கு காரணம் அவர்கள் எதாவது அரசியல்வாதிகளின் அடியாள்களின் அடியாள்களாக இருப்பதுதான். எதாவது அரசியல் கூட்டமென்றால் அவர்களை அழைத்துச் செல்வார்கள். சில நேரங்களில் சில அரசியல் புள்ளிகள் ஆட்டோகளை வாங்கி இந்த மனிதர்களிடம் வாடகைக்கு விட்டிருப்பார்கள். ஆகவே அவர்களிடம் ஒரு தைரியம் எப்போதும் இருக்கும்.
இந்த ஆட்டோகாரர்களை எதிர்கொள்வதுதான் எப்படி? அவர்களுக்கும் பணம் தேவை, நமக்கும் பயணம் செல்லவேண்டியிருக்கிறது. ஆகவே அவர்களுடன் ஒரு இணக்கதை பேணவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. எல்லா நேரங்களிலும் நாம் ஷேர் ஆட்டோ, பஸ்ஸை எதிர்ப்பார்க்க முடியாதே?
நான் ஒரு முறை மவுண்ட் ரோட்டிலிருந்து திருவல்லிக்கேணிக்கு செல்லவேண்டியிருந்தது. இரவு நேரம் ஆட்டோ தேடியபோது, வந்த ஆட்டோ டிரிப்லிகேணா, எவ்வளவு தருவே என்றார். ஒரு வாடிக்கையாளரை மரியாதையாக விளிக்கவேண்டியவரின் முதல் கேள்வி இதுதான். வாபோ என்று கூறுவது நிச்சயம் தவறுதான். நான் சற்றும் சளைக்காமல், நீ சொல்லு முதல்ல, வரதா இல்லையான்னு நான் முடிவு பண்றேன் என்றேன். இல்லை சார் என்று ஒரு பணத்தை கூறினார். அது நியாயமாக இருந்ததால் ஏறிவிட்டேன். போகும் வழியில் மிக மரியாதையாகவே என்னிடம் பேசினார்.
இது ஒரு உத்திதான் அவருக்கு. ஒரு முறை மரியாதை குறைவாக பேசிபார்ப்பார் பயந்தால் அப்படியே பேசி பணம் பறித்துவிடுவார். நாம் பேசும் மறுபேச்சில் அவர் புரிந்துக் கொண்டு நம் வழிக்கு வருவார். எல்லா ஆட்டோ காரருக்கும் சவாரி தேவையாக இருக்கிறது. ஆகவே சற்று மிரட்டிபார்த்து மனிதர்களை புரிந்துக் கொள்ள முயற்சிக்கிறார். அதே வேளையில் பல நல்ல ஆட்டோகாரர்களும் உண்டு. முதல் கேள்வியிலேயே சரியான கூலியை கூறிவிடுவார்கள். அவர்களிடம் பேரம் பேசவேண்டியே இருக்காது.
எல்லா ஆட்டோகாரர்களும் மீட்டர் போடுவதை விரும்புவதில்லை. மீட்டர் 100 வரும் என்றால் 120 கேட்பார்கள், 200 கேட்பவர்களிடம் மனிதர்கள் சவாரிக்கு வருவதில்லை என்பதை அவர்கள் எப்போது புரிந்துக் கொள்வதில்லை. அந்த வேளையில்தான் அதிகபடியாக கெடுபிடியாக நடந்துக் கொள்கிறார்கள்.
எழும்பூர், சென்ரல் போன்ற இடங்களில் அவர்கள் எதையாவது செய்து பணத்தை அடித்துவிடவேண்டும் என நினைப்பது மனிதர்களின் அப்பாவிதனம் முக்கிய காரணம். சென்ரலில் இறங்கிய ஒரு வடநாட்டுகாரரை ஆட்டோமே ஆவ், செள ரூபா தே என்று ஏறாத அவரை நச்சரித்தார் ஒரு ஆட்டோகாரர். பேகை வைத்துவிட்டு விட்டார் ஒரு அறை, அங்கிருந்து அந்த ஆட்டோகாரர் அந்த இடத்திலிருந்து காணாமல் போய்விட்டார்.
பெண்களுக்கு ஆட்டோகாரர்களை சமாளிப்பதில் இருக்கும் சிரமத்தை மறுக்கமுடியாது. எந்த நேரத்தில் எப்படி பேசுவார்கள் எனபது தெரியாதுதான். ஆனால் சென்னையில் இருக்கும் ராஜஸ்தானிய (சேட்) பெண்கள் இந்த ஆட்டோ காரர்களை திறமையாக சமாளிப்பதை பலசம‌யம் கவனித்திருக்கிறேன்.
பயணிகள் தைரியமாக எதிர் கொள்கிறார்களா என்று பார்ப்பது ஆட்டோகாரர்களின் முதல் வேலை, அவர் எதிர்பார்பை முறியடிகாதவரை நம்மை அவர்கள் வெறுபேற்றவே நினைப்பார்கள். அதன் மூலம் அதிக பணம் பெறமுடியும் என நினைப்பதுதான். நாம் ஆட்டோகாரரை சந்திக்கும்போது அதற்கு தயாராக இருப்பதுதான் நாம் செய்யவேண்டிய முதல் வேலை. அதேவேளையில் நியாயமான கூலியை நாம் கொடுக்க தயாராக இருப்பதை அவர்கள் புரிந்துக் கொண்டாலே நம்மை அவர்கள் பத்திரமாக அழைத்துச் செல்லவே ஆசைப்படுவார்கள்.
நாம் இருக்கும் பகுதியில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் நாம் அவ்வப்போது செல்ல ஒரு நியாயமான ஆட்டோகாரரை பேசிவைத்துவிட்டால் எந்த இடத்திலும் அதிகமாகவும் அடாவடியாகவும் கேட்கமாட்டார்கள். இப்போது ஒலா போன்ற வண்டிகள் வந்துவிட்டதால் எல்லா ஆட்டோகாரர்களும் சற்று கலங்கி போய் இருப்பது தெரிகிறது. அவர்களே ஓடிவந்து மீட்டர் காசுதாங்க என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது வருங்காலத்தில் இன்னும் நியாயமாக நடந்துக் கொள்ள வழிவகுக்கும் என நினைக்கிறேன்.

No comments: