Friday, March 27, 2015

பெண்கள் சினிமா

ஒரு பெண்மணி எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தார். அவர் மாலை ஆனதும் எல்லா குழந்தைகளையும் கூப்பிட்டு கதை சொல்ல ஆரபித்துவிடுவார். டிவி வந்த இந்த காலத்திலும் அவர் கதை சொல்வதை விட்டதில்லை. அதில் பல சினிமா கதைகளும் இருக்கும். சிலநேரங்களில் ஒரு சினிமாவை பார்த்துவிட்டு வந்து அதை ஒரு நாவல்போல விரித்து அவரால் வரிக்கு வரி சொல்லிவிட முடியும். பெரிய உணர்ச்சிகள் எதுவும் இல்லை என்றாலும் ஒரு 3 மணிநேரம் கதையை 3 மணிநேரம் சொல்லுவார். கிட்டதட்ட ஒவ்வொரு சாட்டையும் சொல்வது மாதிரிதான் இருக்கும். அவரின் ஞாபக‌திறனை பாராட்டாமல் இருக்க முடியாது. பெண்களில் சிலர் உள்ளதை உள்ளபடி திருப்பிச் சொல்லும் வல்லமை உண்டானவர்கள். நான் சிறுவனாக இருந்த சமயத்தில் அக்கா ஒருவர் இப்படி கதைச் சொல்லுவார். சில காதல் காட்சிகளைத் தவிர மற்றவற்றை நாவல் படித்துக் காட்டுவதைப் போல சொல்லிக்கொண்டே செல்வார்.
பெண்கள் சினிமாவை எப்படி பார்க்கிறார்கள்? காட்சிகளாக மட்டுமே அவற்றை பார்க்கிறார்கள் அவற்றின் இடையே இருக்கும் உணர்ச்சிகளை அவர்கள் பார்ப்பதில்லை என்று தோன்றும்.

பெண்களில் பலர் சினிமாவை பார்ப்பதில்லை என்று தோன்றும். ஏனெனில் சினிமா முழுவதும் ஆண்களின் பார்வையில் இருக்கிறது. ஒரு 10 சதவிகிதம் இருக்கலாம். அவைகள் மட்டும் நடு பார்வையில் சொல்லப்பட்டு மற்றதெல்லாம் படத்தின் கதாநாயகனே படத்தை எடுத்துச் செல்கிறார். எழுபதுகளில் இருந்த அளவிற்குகூட இல்லை, முழுவதும் பெண்கள் சினிமாவில் இல்லாமல் வெறும் பாடல்களுக்கு மட்டுமே என்று வந்து போகிறார்கள். அதைக் கொண்டு பெண்கள் எப்படி தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். குறிப்பாக சொல்வதென்றால் ஒரு சினிமாகூட பெண் புரட்டகொனிஸ்டாக் இருந்து கதை சொல்வதில்லை. (மிக குறைவாக ஒன்றிரண்டு இருக்கலாம்). வேறு ஒருவர் பெண்ணின் கஷ்டங்களைப் பற்றி பேசுவதாக இருக்கும்.
டிவிபோல சினிமாவை அவர்கள் பக்கம் இழுக்க முடியாதுதான். அது அவர்களின் கையிலும் இல்லை. சினிமாவின் முக்கிய பார்வைகள் எல்லாம் 20வயது இளைஞர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் தான் இப்பொதும் பார்வையாளர்கள்.
ஆனால் உண்மையில் பெண்கள் சினிமாவை பார்க்கும் பார்வையே வேறு. சினிமாவில் ஒரு பெண் நீங்க இருந்து சாப்பிட்டுதான் போகனும் என்று ஒரு விருந்தினரை சொன்னால், உடனே நம் பெண்கள் என்ன வெறும் காபியையா.. வெறும் காபி மட்டும்தான் இருக்கு டெபில்ள என்பார்கள். ஒரு பெண்மனி அணிந்திருக்கும் உடை, தோடு, செயின், புடவையின் டிசைன், ஜாக்கெட்டின் டிசைன் போன்றவைகள் முக்கியமானவையாக அவர்களுக்கு தோன்றுகிறது. இந்த மாதிரியான ஜாக்கெட் பேசன் இப்ப திரும்ப வந்திருச்சு என்பார்கள்.
தீவிரமாக ஒரு படத்தைப் பார்க்ககூடாது என்கிற முடிவில் பெண்கள் இருப்பதாக் தோன்றுகிறது. அப்படி ஒரு படத்தைப் பார்ப்பதாக இருந்தால் பெண்களின் பார்வையை சார்ந்ததாக‌ அல்லாமல் ஆண்களின் கொடுரத்தை மறுப்பக்கதை சொல்லும் ஆண்களின் படமாக இருக்கும். நாங்கள் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சென்ற படத்தில் சில பெண்கள் இருந்தார்கள். அந்த படம் பெண்ணிய பார்வை கொண்ட பாலச்சந்தரின் படம். ஆனால் பெண்கள் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இப்படியெல்லாம் இல்லை என்றார்கள். சொல்லப்போனால் அந்த படம் அவர்களுக்கு புரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த படத்தில் சுகாசினி செய்த எந்த செயலையும் அவர்கள் வரவேற்க்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது.
எத்தனை முக்கியமான, சோகமான நம்மை அதிரவைக்கும் செய்தியாக இருந்தாலும் பெண்களுக்கு அதைச் சொல்லும் பெண்ணின் புடவைதான் ஞாபகத்தில் இருக்கிறது.


No comments: