இந்தியாவில் மதவாதம் எல்லா பக்கங்களிலிருந்து வளர்கிறா என்று
சந்தேகம் வந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு மசூதியில் குண்டு
எறியப்பட்டது, அன்றே மு.க. அதை எரிந்த பாஜக ஆட்களை கைது
செய்ய வேண்டும் என்றார். அவர்களுடன் கூட்டணியில் வேறு இருந்தார்கள் ஆட்சியிலும் இருந்தார்கள்.
மறுநாள் காலை அதை எறிந்தது மற்றொரு முஸ்லீம் என்று தெரிந்தது. அதற்கு அவர் மன்னிப்புகூட
கேட்கவில்லை. பாஜக பெரிய அளவில் எந்த ஆர்பாட்டமும் செய்யவில்லை.
இவ்வளவு அப்பாவியாக இருக்கிறதே இந்த கட்சி என தோன்றியது.
ஆனால் இன்று நிலமைவேறு. பஜாகவின்
செயல்கள் முற்றிலும் தங்களின் சகிப்புதன்மையை இழந்து தீவிரவாத கட்சிகள் செயல்படுவதுபோல
நடந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். மத்தியில் ஆட்சி வந்தது அவர்கள் நிலை மாறிவிட்டதா
அல்லது கொஞ்சம் கொஞ்சமாக அவர்களே அந்த இடத்திற்கு வந்து விட்டார்களா தெரியவில்லை.
பஜாக இன்று தவிர்க்க முடியாத கட்சியாகிவிட்டது. முன்பு மேல்சாதிக்
கட்சி என்று இருந்த இடத்திலிருந்து இன்று ஊழலை ஒழிக்கபோகும் முற்போக்கு கட்சியாக தன்னை
முன்நிறுத்திக் கொண்டுவிட்டது. காங்கிரஸைவிட பெரியதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை
என்றாலும் அதன் போக்கில் முன்பிருந்த மென்மையான அணுமுறை மாறி ஒரு திமுக, அதிமுக, நவிநிமான், சிவசேனா மாதிரியான ஒரு ஆக்ரோஷமான கட்சியாக மாறிவிட்டது.
சமீபத்தில் நடந்த தாலிவிவாதம் போராட்டம், அடிதடி, கைகலப்பு என்று தாண்டி குண்டுவீசுதல் வரை சென்றிருக்கிறது.
வேகமான 'நல்ல' முன்னேற்றம்தான். அடிதடி, கைகலப்பு போன்றவைகளைதாண்டி குண்டுவீச்சு
வரை செல்வதை அந்த கட்சிக்கு ஓட்டளித்தவர்கள் நினைத்திருப்பார்களா? நாட்டு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல
துடிக்கும் ஒரு கட்சி என்ற நினைத்தவர்களுக்கு அடிதடியில் இறங்கு சாதாரண ஒரு சாதிக்
கட்சிதான் என நினைக்கும்போது சங்கடமாக இருக்கிறது.
அதன் தலைவர்கள் எச்.ராஜாவில் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள்
வரை பேசுவதை கேட்கும்போது தீவிரவாததிற்கு மாற்றவந்த கட்சி என்று சொல்லமுடியாமல் தீவிரவாத
கட்சியேதான் அது என்று நினைக்க தோன்றுகிறது.
முஸ்லீம் கட்சிகள் செய்வதை பாருங்கள், இதை முஸ்லீம்களிடம் கேட்க முடியுமா என்று
கேட்ட கட்சி இன்று அதையேதான் செய்கிறது. தீவிரவாததிற்கு தீவிரவாதம்தான் தீர்வு என்பது
போல அதன் செய்கைகள் இருப்பது அந்த கட்சிக்கு மட்டுமல்ல நாட்டிற்கு நல்லதல்ல.
அந்த கட்சியை பின் தொடரும் லட்சக்கணக்கான மக்கள் அதை பின்பற்றும்போது
தீவிரவாதம் என்பது சாதாரண செயலாக எல்லா இடத்திலும் பரவும் அபாயம் தோன்றிவிடும். நவிநிர்மான், சிவசேனா, ராம்சேனா, திரிநாமுல் போன்ற கட்சிகள் செய்யும் வெறுப்பு
அரசியலை பாஜகவும் செய்ய தொடங்கிவிட்டதையே இது காட்டுகிறது. இதற்கு முன்னால் இருந்த
தேசியம் என்கிற கொள்கை மாறி இந்து ராஜ்ஜியம் என்று ஆர்எஸ்எஸ்சின் கொள்கையை எடுக்கும்போதுதான்
இந்த குண்டுவீச்சு தீவிரவாதம் வளர்கிறது.
வெவ்வேறு மாநிலங்களில் பாஜகவின் தோழமை கட்சிகளும், ஆர்எஸ்எஸ்ம் செய்த அராஜகங்கள் இன்று தமிழகத்தில்
பாஜகவே நேரடியாக செய்யும் நிலைக்கு வந்துவிட்டது. சகிப்புதன்மையை முற்றிலுமாக குழைக்கு
இந்த செயல் மற்ற திராவிட மற்றும் சாதிக் கட்சிகளும் தூண்டப்பட்டு அவைகளும் அராஜகத்தில் இறங்க ஆரம்பிக்கும். அவைகள் இறங்குபோது நாம் இறங்ககூடாது
என்ற கேள்வி வருகிறது. ஆனால் அது சமநிலையை குழைக்கும் பாஜகவின் இந்த குண்டுவீச்சு செயல்
ஒருபடி மோசமான முன்னுதாரனம்தான்.
சமீபத்தில் பேசிய எந்த பாஜக தலைவர்களின் பேச்சும் ரசிக்கும்படியாக
இல்லை. அப்பட்டமான் துவேசமும், வெறுப்பு
கொண்டு செய்யப்படும் இந்த செயல்கள் அந்த கட்சியை அழிக்கு செயலுக்குதான் கொண்டுசெல்லும்.
மீண்டும் மற்றொரு காங்கிரஸை மக்கள் விரும்பமாட்டார்கள். கூடியவிரைவில் மக்கள் தூக்கி
எறியவும் தயங்க மாட்டார்கள். இந்த மாதிரியான அதீத செயல்களில் ஈடுபடாமல் அவர்கள் கூறிய
நாட்டு வளர்ச்சியை அக்கறை கொள்வதுதான் நல்லது.
No comments:
Post a Comment