Showing posts with label interview. Show all posts
Showing posts with label interview. Show all posts

Monday, October 2, 2017

மினி பேட்டி -- பேசும் புதியசக்தி

செப்டம்பர்'17 பேசும் புதியசக்தி இதழில் என் மினிபேட்டி ஒன்று வெளியானது. அந்த பேட்டியை முழுமையாக வாசிக்க விரும்புபவர்களுக்காக, கேள்விகள் எஸ்.செந்தில்குமார்.

Friday, January 9, 2015

பாவண்ணனுடன் ஓர் உரையாடல் : இரண்டாம் பகுதி



கேள்வி: கிரிஷ் கார்னாட்டின் நாடகங்களை பல தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். குறிப்பாக பலிபீடம், அதில் முன்னுரையிலேயே இது தமிழில் அறங்கேறுமா என பார்த்து மொழிபெயருங்கள் என்று கூறியிருக்கிறார் கிரிஷ் கர்னாட், அவர் சொன்னது போல் இதுவரை ஒருமுறைகூட மேடை ஏறவில்லை. வருங்காலத்தில் நாடகம் என்றவகை தமிழ் இலக்கியத்தில் இல்லாமல் போய்விடுமா?

பாவண்ணன்:  நாடகமே இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. கண்டிப்பாக நாடகச் செயல்பாடுகள் தொடர்ந்தபடியேதான் இருக்கும். தமிழ்ச்சூழலின் பிரச்சினை, நாடகங்களுக்கான பார்வையாளர்கள் இல்லை என்பதுதான். ரசனையுணர்வும் மேலான தேடலுணர்வும் கொண்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருகப்பெருக நாடகங்களுக்கான வரவேற்பும் பெருகும். அதுவரை, ஒரு சிறிய கூட்டத்தினருக்கான செயல்பாடாக மட்டுமே நாடகம் சுருங்கியிருக்கும். கிரிஷ் கார்னாடின் நாடகங்கள் புராணம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகிய பின்னணிகளைக் கொண்டவை. அந்தக் களங்களிலிருந்து நாடகத்துக்கான கருக்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். சமகாலத்துக்குரிய பார்வையை விவாதிக்கும் ஒரு களமாக அக்கருக்களை அவர் புனைந்துகொள்கிறார். நாடகத்தில் துக்ளக் பேசினாலும், அதை ஒரு நவீன அரசியல்வாதியின் பேச்சாகவே பார்வையாளர்கள் உணரும் வகையில் அவருடைய புனைவு கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இந்தியத்தாயை மனத்தில் வைத்துக்கொண்டு  பாரதியார் பாஞ்சாலி சபதம் எழுதியதுபோல கார்னாட் தன் நாடகங்களை அமைக்கிறார்.