இந்தி மொழி எழுதப் பயன்படும் தேவநாகரி லிபியை தான் மராட்டி மொழிக்கு பயன்படுத்துகிறார்கள். மராட்டியில் புதிய எழுத்துக்கள் இரண்டைதவிர இந்தியும் மராட்டியும் பார்க்க ஒன்றுபோலத்தான் இருக்கும். இரு மொழிக்காரர்களும் மற்ற மொழியை எளிதாக படித்துவிடமுடியும். மஹாராஷ்டிராவில் ஐந்தாம் வகுப்புக்குமேல் இந்தியும் இருப்பதால் இந்தியை அறியாதவர் அங்கு யாரும் இருக்க முடியாது. (இந்தி தெரியாதவர் ஐந்தாம் வகுப்பை தாண்டாதவர் என்று பொருள்.) ஆனாலும் இந்தியில் வரும் எல்லா இலக்கியங்களும் நூல்களும் மராட்டியில் உடனே மொழியாக்கம் செய்யப்பட்டுவிடும்.
Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts
Saturday, February 25, 2017
Wednesday, September 30, 2015
மொழி என்னும் ஊடகம்
ஊருக்கு சென்றிருந்த போது இரு நண்பர்களை சந்தித்தேன். அவர்கள்
உயர்கல்வி பயின்று அரசுதுறையில் நல்ல வேலையில் இருப்பவர்கள். ஒரு சயின்டிஸ்ட் மற்றவர்
டாக்டர். பேச்சினுடே மஹாராஷ்டிராவில் ஆரம்ப பாடசாலைப் பள்ளிகள் மொத்தம் 3 மணிநேரம் தான் இயங்கும் என்று கேட்டதும் ஆச்சரியப்பட்டார்கள். மிச்ச
நேரம் குழந்தைகள் என்ன செய்வார்கள் என்றார்கள். மிச்ச நேரம் நிறைய இருப்பதால் இங்குள்ள குழந்தைகள் கராத்தே, புட்பால், இசை போன்ற எக்ஸ்ரா கரிகுலர் படிப்புகளுக்கு
செல்கிறார்கள் என்றேன். அதுதாங்க சரி, அதிகமான நேரம் பள்ளிகூடம் இருக்க கூடாது எனவும் அவர்களுக்கு நிறைய
விளையாட்டுகள் இருக்க வேண்டும் என்றும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அவர்கள் இருவரும் மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் எடுத்தவர்கள். வேலை படிப்பு என்று தீவிரமான மனநிலை
கொண்டவர்கள். பள்ளிப்படிப்பை தாண்டி வேறு எந்த
விஷயங்களிலும் கவனத்தை சிதறடிக்காதவர்கள்.
Thursday, January 29, 2015
அமெரிக்க ஆங்கிலமும் பிரிட்டிஷ் ஆங்கிலமும்
ஆங்கிலேயர்கள் என்கிற பதம் எல்லா வெள்ளை இனத்தவர்களையும்
குறிக்கும் என நாம் நினைத்திருக்கிறோம். ஸ்பானிஷ், சுவீடிஸ், பிரன்ச், ஜெர்மென், அத்தோடு வட அமெரிக்க, தென் அமெரிக்க மக்களும் வெள்ளையாகத்தான்
இருப்பார்கள். அத்தோடு
ஆங்கிலம் பேசும் எல்லோரையும் ஆங்கிலேயர்கள் என்றும் நினைத்திருக்கிறோம். ஆனால் அமெரிக்கரை
ஆங்கிலேயர் (இங்கிலீஷ் மேன்) என்று சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டார். கர்நாடகா ஆந்திராவை தாண்டிவிட்டால் எல்லாமே
வடஇந்தியா என்று நாம் சொல்வதுபோல இது. ஒரு மராட்டி, ஒடியா, ஏன் பெங்காலி, ராஜஸ்தானிகூட தான் வடஇந்தியர் என்று அழைக்கப்படுவதை
ஒத்துக்கொள்ள மாட்டார். மத்திய பிரதேசம்கூட இல்லை, உபி, பீகார், உத்திரகாண்ட், தில்லி போன்ற இடங்களில் வசிப்பவர்களை மட்டுமே
வடஇந்தியர்கள் என்று சொல்லமுடியும். பிரிட்டனில் வாழ்பவர் மட்டும் ஆங்கிலேயர் என்பதை ஓரளவு ஒத்துக்கொள்வார்.
பிரிட்டன் வகிக்கும் யுகேவில் இருக்கும் வட அயர்லாந்தை சேர்ந்தவர் தன்னை ஆங்கிலேயர்
அல்ல ஐரிஷ் என்பார்.
Thursday, January 1, 2015
தமிழும் இந்தியும்
இந்தி உட்பட மற்ற இந்திய மொழிகளை வெறுப்பவர்கள்
அல்லது காழ்ப்புணர்வோடு பேசுபவர்கள் பொதுவாக தமிழகத்தை விட்டு வெளியே
சென்றவர்கள் இல்லை என்பதை கவனிக்கலாம். வேலைக்காகவோ அல்லது சுற்றுல்லாவிற்காகவோகூட
இந்தியாவின் பிற பாகங்களுக்கு செல்லாதவர்கள்தான் இந்த நிலைப்பாட்டை உடையவராக இருப்பார்கள். வேறு சிலர் அரசியல் மேடைப்
பேச்சிலிருந்து இக்கருத்தை பெற்றிருப்பார்கள். சில காரணங்களுக்காக வெளியே சென்றவர்கள இந்திய மொழிகளை குறிப்பாக இந்தியை வெறுப்பதில்லை.
இந்தி எதிர்ப்பு நிலையை கொண்டவர்கள் கூட அப்படி தமிழகத்தை விட்டு வெளியே வந்ததும்
அந்த நிலை மாறுவதையும் கவனிக்க முடியும். நானும் அப்படி மாறியவனே.
ஏன் இந்திமொழியை வெறுக்க வேண்டும்? அது திணிக்கப்படுகிறது அல்லது தமிழை குறைத்து
மதிப்பிடப்படுகிறது என்பதாலா? ஆம் என்றால் ஒருவகையில் அது நியாயம் என்றுதான்
படுகிறது. அதனால் தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகள், வாக்கியங்கள் மறைந்து
இந்தியாக மாறிவிடும் அபாயம்
இருக்கிறது. தூய மொழியாகிய தமிழ்மொழியில், இடையில் சில மொழிகளை சேர்த்து கண்டுபிடிக்கப்பட்ட
மொழியாகிய இந்தி கலப்பதால் தூய்மை கெடும் என்பதும் ஏற்றுக்கொள்ள கூடியதாகவே எனக்குப்படுகிறது. ஆனால் இது நாள் வரை தமிழ்
மொழியில் இருக்கும் வார்த்தைகள் அதன் அர்த்தங்களும் தமிழ்மொழியிலிருந்து நேரடியாக வந்தவைகள் தானா என்றால்
இல்லை என்றுதான் மொழியறிஞர்களின் பதிலாக இருக்கிறது. தினப்படி நாம் பேசும்
சாதாரணப் பேச்சுக்களில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், தெலுகு, மாராட்டி அத்தோடு நமக்கு
நேரடியாக சம்பந்தமே படாத உருது மொழியின் வார்த்தைகள்கூட இருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)


