மிகப் பெரும் மேதமைக் கொண்ட விஞ்ஞானி, ஐன்ஸ்டைன் என நினைக்கிறேன்,
அவர் தன் தொழிற்கூடத்தில்
இரண்டு எலிகள் தினம் தொல்லை செய்துவந்தன. இரண்டையும் பிடிக்க முயற்சி செய்து முடியாமல்
போய்விட்டது. ஆகவே அவைகள் போய்வர வழி ஏற்படுத்து தரவேண்டும் என யோசித்தார். ஒரு பெரிய
ஒரு சிறிய எலிகளுக்காக ஒரு பெரிய ஓட்டையும் ஒரு சிறிய ஓட்டையும் ஏற்படுத்தியிருந்தார்.
அதை கவனித்த அவரது நண்பர் ஏன் இரு ஓட்டைகள் என கேட்டார். இரண்டு எலிகள் இருக்கின்றனவே
என்றார். ஏன் ஒரே பெரிய ஓட்டையில் இரு எலிகளும் செல்லமுடியுமே என்றார் நண்பர். விஞ்ஞானி
அதிர்ச்சியடைந்தார், எப்படி நமக்கு இது தெரியாமல் போனது என்று.
ஆம் மேதமைகள் எப்போதும் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்து இருக்க முடிந்ததில்லை. அவர்களின் எண்ணங்கள்
சிந்தனைகள் வேறு எங்கோ இருக்கும். அத்தோடு நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான அளவு பழக்கப்படாமலும்
இருந்திருப்பார்கள்.
Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts
Monday, December 21, 2015
Thursday, November 26, 2015
லாலுவும் நீலுவும்
சிறுவர்களுக்கான பாலுவும் நீலுவும் என்ற ஒரு நாவலை முன்பு
படித்தது நினைவிருக்கிறது. பாலு நல்லவன் நீலு கேட்டவன். இருவரும் அவர்களுக்குள் நடக்கும்
சின்ன சண்டைகளும் சமாதனங்களும், எது சிறந்தது, மேன்மையானது போன்ற சிலவற்றை இருவரும் புரிந்து கொள்வதும் என கதை நகரும். இரு சிறுவர்கள் காடு மலை நகரம் என்று சைக்கிளில்
பயணிப்பதை படிக்க அத்தனை ஆனந்தமாக இருந்ததாக நினைவு. இன்று லாலுவும், நீலுவும் (நிதீஷ்) அப்படி தங்களுக்குள்
நட்பை வளர்த்து சுற்றி திரிவதாக நினைத்துக் கொள்கிறேன். முற்றிலும் வெவ்வேறு குணங்களை
கொண்ட இருவர் சேர்ந்து தங்களுக்கு சமரசங்களை வளர்த்துக் கொள்வதை இனி வருங்காலத்தில் லாலு, நிதீஷ் உறவிலும் சொல்லலாம்
என நினைக்கிறேன்.
Wednesday, November 18, 2015
அரசியல் தெளிவு
தமிழக இந்திய அரசியலை கொஞ்சம் உற்று கவனித்தாலே மண்டை வெடித்துவிடும்
அபாயம் இருக்கிறது. பல வருடங்களாக பல்வேறு தலைவர்களை சந்தித்திருக்கும் பல அன்பர்களையும்
அவர்கள் எழுதும் கட்டுரைகளை படிக்கும்போது ஒன்றை வெளிப்படையாகவே அவ்வப்போது சொல்லிக்கொண்டே
இருப்பார்கள். அது 'இந்தியாவில் நடக்கும் அரசியல் என்னால்
புரிந்துக் கொள்ளமுடியவில்லை' என்று கூறுவதுதான். நேரடியாக இதை
சொல்லவேண்டும் என்று இல்லை, பல சமயங்களில் மறைமுகமாகவும், நாசூக்காவும் சொல்லியிருப்பார்கள். அப்படி சொல்லவில்லை என்றால்
அவர்கள் அந்த அரசியலில் நல்ல பிழைப்பை நடத்துகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.
Friday, March 20, 2015
ஆதிக்கசாதியின் சிறுநீர்
நான் கல்லூரி விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தபோது
நண்பர்கள் எல்லாம் சேர்ந்து விடுமுறைக்கு அதில் இருந்த இருவர் சேர்ந்த ஒரு கிராமத்திற்கு
செல்லலாம் என்று முடிவானது. பசுமையான கிராம பயணம் செல்லவேண்டும் என்பது எங்களின் அனைவரின்
விருப்பம். நான் படித்தது திருச்சியில். அங்கிருந்து ஒரு 300 கிமீ தொலைவில் இருந்தது அந்த கிராமம். பஸ்ஸைப் பிடித்து காலையில்
இறங்கியதும் அங்கிருந்த கிராமமக்கள் எங்களை பிடித்துக்கொண்டார்கள். எங்கிருந்து வருகிறீர்கள் யாரை காணவேண்டும்
என்று அன்புடன் விசாரித்தார்கள். சொன்னது அவர்களுக்கு தெரிந்திருந்தது. அவரின் மகன், அவரின் பேரன் என்று சொல்லி அவர்களின் குடும்பத்தை சொன்னார்கள்.
அவர்கள் மட்டுமல்ல எல்லோரையும் தெரிந்தே இருந்தது. ஒவ்வொருவரின் பூர்வீகம் அவர்களின்
கையில்தான். சிலர் வந்து நண்பர்களின் வீட்டிற்கு கூடவந்து விட்டு பேசிவிட்டு சென்றார்கள். அத்தனை அன்போடு அவர்கள் நடந்துக்
கொண்டது ஆச்சரியமாக இருந்தது. சிறு நகரத்திலிருந்து வந்த எங்களுக்கு பக்கா கிராமமான
ஊரில் ஏற்படும் எந்த அனுபவமும் புதிதுதான்.
மாலை எங்களை கிராம உலா அழைத்து சென்ற அந்த இருநண்பர்கள், ஏரி, ஊருணி, வயல்கள், தென்னந்தோப்பு என்று அனைத்தையும் காட்டினார்கள்.
வயல்களின் பசுமையை காணக்காண தீரவேயில்லை. தென்னந்தோப்பில் எங்களுக்காக சொல்லி புதிதாக
இறக்கிய இளநீர்களை தந்தார்கள்.
Subscribe to:
Posts (Atom)

