Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Saturday, July 8, 2017

இலக்கியமும் மேடைப்பேச்சும்




எண்பது வயதாகும் என் தமிழ் ஆசிரியர் அவரின் இளமை காலத்தில் பட்டிமன்றங்களுக்கு அழைக்கப்படுவதும் அங்கே அறிவார்ந்த மக்கள் கூட்டம் குழுமியிருந்து கேட்டு ரசித்ததையும் பலமுறை கூறியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த அனைத்து பொருளிலும் பட்டிமன்றங்கள் இருக்கும் என்றார். தொலைக்காட்சி இல்லாத காலம், ரேடியோ எல்லா இடங்களிலும் பரவாத காலம் சைக்கிள்களில் பயணம் செய்து மனிதர்கள் தங்கள் இலக்கிய அறிவையும் படைப்பாற்றலை வளர்ந்துக்கொண்ட நேரம். பின்னால் திக கட்சி வேறுன்றியதும் அதன் முகம் மாறத் தொடங்கியிருக்கிறது. இன்றைய கேளிக்கை வடிவத்தை வந்தடைந்துவிட்டது. பட்டிமன்றங்கள் வெறும் மேடை முழக்கங்களாக உருவாகிவிட்டன.

Wednesday, December 7, 2016

சோ



சோ என்கிற பெயர் எப்படி அவரின் பெயரின் முன்னால் வந்தது என்று நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. சோ என தொடங்கும் ஒரு பெயரின் சுருக்கம் என்று நினைத்துக் கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது. சோ எப்படி வந்தது என்று ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டபோது அந்த ரகசியத்த உங்களிடம் சொல்லுவேன்னு நினைக்கிறீங்களா என்றார். சோ என்கிற பெயர் அவர் நடித்த முதல் நாடகத்தின் (பகீரதன் எழுதிய தேன்மொழியாள் என்ற நாடகம்) ஒரு கதாபாத்திரத்தின் பெயர். அவர் நடித்த அந்த கதாபாத்திரத்தின் பெயரை புனைப்பெயராக தன் முன் இணைத்துக்கொண்டார். சினிமாவிற்கு வந்தபின் சோ மிகப் பிரபல்யமான பெயராக மாறிவிட்டது.

Tuesday, December 6, 2016

ஜெயலலிதா என்னும் மனுஷி

இரண்டாம் முறை ஆட்சியை பிடிப்பவர் இறந்துவிடுவார் என்கிற வாட்ஸ்ஸப் வதந்தி இன்று உண்மையாகிவிட்டது. எம்ஜியார் இரண்டாம் முறை ஆட்சியை பிடித்ததும் (நடுவில் ஒருமுறை கவர்னர் ஆட்சிவந்தது) அவர் இறந்தார். பல்வேறு உடல் பிரச்சனைகள் எம்ஜியாரைப்போலவே ஜெ.வுக்கு ஏற்பட்டு காலமாகியிருக்கிறார். அவரின் மரணம் எதிர்பாராத மிக அசாதாரமான சூழலில் நடந்திருக்கிறது. அவருக்கென்று வாரிசுகள் யாரையும் காட்டாமல் அவர் இறந்திருக்கிறார். ஜெயலலிதா எப்படி எம்ஜியாரின் இறப்பிற்கு பின்னே உருவாகி வந்தாரோ அப்படி யாராவது உருவாகி வரவேண்டும்.

ஜெயலலிதா கட்சியை பிடிக்கவும், ஆட்சியை பிடிக்கவும் ஏற்பட்ட சிரமங்களை போலவே எதிர்கட்சியினரை சமாளிக்க மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது. 89ல் சின்ன கட்சியாக அவர் சட்டமன்றத்தின் உள்ளே வந்தபோதே மக்களாலும், அரசியலார்களாலும் அத்தனை வெறுப்புடன் பார்க்கப்பட்டார். சட்டமன்றத்திலேயே தாக்கப்பட்டார். முழுமையாக விரட்டப்படவேண்டும் என்கிற வெறியில் எழுந்த பல்வேறு அவதூறுகளால் தொடர்ந்து வசைப்பாடபட்டார். இந்த ஒன்றே அவரை தொடர்ந்து அரசியலில் இருக்க செய்துவிட்டது.

Wednesday, November 18, 2015

அரசியல் தெளிவு



தமிழக இந்திய அரசியலை கொஞ்சம் உற்று கவனித்தாலே மண்டை வெடித்துவிடும் அபாயம் இருக்கிறது. பல வருடங்களாக பல்வேறு தலைவர்களை சந்தித்திருக்கும் பல அன்பர்களையும் அவர்கள் எழுதும் கட்டுரைகளை படிக்கும்போது ஒன்றை வெளிப்படையாகவே அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அது 'இந்தியாவில் நடக்கும் அரசியல் என்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை' என்று கூறுவதுதான். நேரடியாக இதை சொல்லவேண்டும் என்று இல்லை, பல சமயங்களில் மறைமுகமாகவும், நாசூக்காவும் சொல்லியிருப்பார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் அவர்கள் அந்த அரசியலில் நல்ல பிழைப்பை நடத்துகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

Monday, April 11, 2011

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!


தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..


குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை
, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.


ஏனென்றால்
,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது
,
ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ
,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய

உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.
50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..


அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை
1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..


குஜராத்தில் இலவசங்கள் கிடையாது
,
ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ
,பங்கோ கிடையாது

-
மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-
இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-
Tata, Hyundai, Ford, Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின்
No. 1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)
நாமும் No. 1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த
20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை
??

அடுத்த
5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.


இது அநியாய
,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ
,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.


நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

(மின்னஞ்சலாக வந்த செய்தி அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அளிக்கப்பட்டுள்ளது)

Wednesday, April 7, 2010

காலாவதியும் கவர்மெண்டும்


எத்தனை பொருப்பில்லாமல் அரசியல்வாதிகள் நடந்துகொண்டாலும் அதை பொருத்துக்கொள்ளும் நல்ல மனசு நம் மக்களுக்கு. இல்லையென்றால் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் ஒன்று நடந்திருக்கும் போதும் எதும் கண்டுகொள்ளாமல் தம் வேலைகளை பார்த்துக்கொண்டு செல்லும் மக்களை என்னவென்று சொல்வது. எப்படி காலாவதி மருந்துகள் புழ‌க்கத்தில் உள்ளன என்று கேட்டபோது, முதல்வர் அவைகள் இப்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன, வேண்டுமானால் சிபிசிஐடிக்கோ அல்லது சிபிஐக்கோ உத்தரவிடஉள்ளதாக கூறினார். எதுவும் தெரியாது உன்னால் ஆனதை பார்த்துக்கொள் என்பதுதான் அதன் அர்த்தம்.
நம்மக்களுக்கு பொருமை அதிகம் என்று கூறியதற்கு காரணம் இருக்கிறது. மற்ற மாநில மக்களுக்கு அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்களை ஏதோ தேவதூதர்கள், ரட்சகர்கள் என்னும்படியாக பார்க்கும் பார்வை இல்லை. அவர்களை சாதாரண மனிதர்களாகவே நடத்துகிறார்கள். அவர்களை எளிதாக அணுகமுடிகிறது. தெருவிளக்கு சரியாக எரியவில்லை என்றால்கூட ஒன்றுகூடி சம்பந்த பட்ட அரசுஅதிகாரிகளை அடிக்கசெல்கிறார்கள்.
கொஞ்சநாள் முன்பு தெருகுழாயில் தண்ணீர்வரவில்லை என்பதற்காக தெருவாசிகள் ஒன்றுசேர்ந்து சம்பந்தபட்ட அலுவலகம் சென்று அந்த அதிகாரியின் முகத்தில் கரியை பூசினார்கள். இதேபோல் கர்நாடகவில் காவேரி பிரச்சனையின் போது அரசுஅதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அம்மக்கள் என்னபாடு படுத்தினார்கள் என்பது நாம் கண்டோம்.
இதய, சக்கரை நோயாளிகளும், கர்ப்பிணிகளும் தான் அதிகம் மருந்து எடுத்துக் கொள்பவர்கள். காலாவதி மருந்து உட்கொள்வதினால் அதற்கான பிரச்சனை உடனே தெரியப்போவதில்லை. முதலில் பாதிக்கபோவது உட்கொண்டவர்க‌ளின் கிட்னிதான். அதன்பின் ஒவ்வொரு பாகமாக பாதிக்கப்படும். கர்ப்பிணிகள் உட்கொள்வதால் பிறக்கும் குழந்தைக்கு என்ன பிரச்சனைகள் வரும் என்பதும் தெரியவில்லை. கொஞசநாள் முன்பு மர்மக்காய்ச்சல் பரவியதிற்கு இந்த மருந்துகள் முக்கிய காரணமாக கூட‌ இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கபட்டு இருப்பவர்கள் எத்தனை கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்கள். சொல்லப்போனால் இது எதனால் என்று தெரியாத அறியாமையில்கூட‌ இருக்கலாம். எதுஎப்படியோ தமிழ்நாட்டு மக்கள் நல்ல மனது படைத்தவர்கள்.