Wednesday, April 29, 2020

ஜெயமோகனின் முதல் ஆறு


முதல்காதல் துளிர்க்குமிடம் எப்போதும் நினைவில் நிற்கும். அந்த இடத்தை கடக்கும்போது, பார்க்கும்போது நிகழும் வேதியியல் மாற்றத்தை முதல் வேதியியல் மாற்றத்தோடு நினைவு படுத்திக்கொள்ளமுடியும். ஆனால் முதற்காதலுக்கு முன்னாலும் பின்னாலும் நிகழ்பவைகள் முற்றிலும் வேறானவைகள்
என்பதுகளில் இப்போதுபோல இருபாலர் ஒன்றாய் படிக்கும் நிலை இருக்கவில்லை. மிகப்பெரிய அனுகுண்டு சோதனை நடத்துவதுபோலத்தான் ஆண் பெண் உறவுகள் இருந்திருக்கின்றன. பெண்னை சந்திப்பதில் இருக்கும்  பிர்ச்சனைகள் ஒருபுறம் இருக்க, அவளுடன் பேசுவது அதனினும் பெரிய இக்கட்டுகள் இருந்தன. கதையின் நாயகன் எல்லோரையும் போல பேருந்தில் அவளை பார்க்கிறேன் தினமும் பின் தொடர்கிறான். அவளின் இனிமையா ஒரு பார்வைகூட அவன் மேல் படவில்லை. ரோட்டையே பார்கிறாள். சினிமா பாடல்கள் அப்போதைக்கு துணைபுரிந்தன. அந்த பாடல்களை தனிமையில் பாடவும் கேட்கவும் மட்டுமே முடிகிறது. குலசேகரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு மூன்றாண்டுகளாக தினமும் மாற்றமே இல்லாமல் அவளுடன் பயணிக்கிறான். அவள் அவனை பார்ப்பதுகூட இல்லை. அவனுக்கு கண்ணீர் முட்டி வருகிறது.

ஒரு நாள் மாற்றம் ஏற்படுகிறது. பேருந்து தடம் மாறி செல்லவேண்டியிருக்கிறது. தெரியாத பாதையில் சுற்றிவர வண்டியில் அத்தனைபேரும் இறங்கிக் கொள்ள அவனும் அவளும் மட்டுமே இருக்கிறார்கள். அவள் பேசுகிறாள். அவனும் பேசுகிறான். அந்த தன்னம்பிக்கை அவனுக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

பிறகு தக்கலையிலிருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் வண்டில் அவன் அவளை தேடவில்லை. அவன் ஆழ்மனம் அதிலிருந்து விடுபட்டிருந்தது. தன்னிறக்கம் கொண்ட அவன் முழுகாதலை அவள் அங்கிகரிக்கவேண்டும் என நினைத்தான். அதே ஆச்சரியத்துடன், விதந்தோதுதலுடன் அவள் அவனை காணவேண்டும் என எதிர்பார்த்தான். அப்படி நடந்திருந்தால் ஒழிய அந்தக் காதல் அவனுக்கானதல்ல. இனி அவள் அவனுடன் பேசக்கூடும், சிரிக்ககூடும், இனி அதே உணர்ச்சி பரவத்தில் அவன் திளைக்கபோவதில்லை. .ஆண் பெண் உறவில் இருக்கும் இந்த மெல்லியதடத்தை சரியாக பிடித்திருக்கிறார் ஜெ.

//அவன் வெளியே திகழ்ந்து கொண்டிருந்த பசுமையையே பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளம் விம்மிக்கொண்டே இருந்தது. ஒரு சொல்கூட அதில் நிலைகொள்ளவில்லை. காற்று சுழன்று வீசும்போது படப்டக்கும் கொடி பறப்பதுபோலிருந்தது.//

இனி அவளை அவன் ஒருபொருட்டாக மதிக்க முடியாது. ஓடும் பேருந்திலிருந்து பறந்து வெளியேறும் காகிதம் போல அவள் அவன் மனதிலிருந்து வெளியேறியிருப்பாள், இருவருக்கும் இடையே காதல் துளிர்த்திருந்தாலும் கூட.

No comments: