வேட்டையாடுதலில் உயிர்தியாகம் (animal
sacrifice) என்று ஒரு வார்த்தை சொல்லப்படும். கொலை என்கிற வார்த்தையை குறிக்கும் நாகரீகமான சொல். வேட்டையாடுதலில் மனிதனுக்கு இருக்கும் ஆர்வம் பின்னாளில் அவைகளை சோதனை உயிரியாக மாற்றம் செய்தான். கொடூரமாக இவ்வுயிரிகளை கொலை செய்வதை ஞாயப்படுத்த சில காரணங்கள் தேவையாக இருந்தன என நினைக்கிறேன். உணவு பயன்பாட்டிற்குபின் உள்ளுறுப்புகளின் மீச்சத்தை சோதனை செய்ய ஆரம்பித்திருப்பான். அறிவியலாக பரிணமித்த உடற்கூறுயியலின் மற்றொரு வடிவம் சோதனை உயிரி. மருந்தகங்களில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை முதலில் சிறு உயிரிகளுக்கு கொடுத்து அதன் எதிர்வினைகளை எழுதிவைத்தார்கள். நோய் இல்லாத உயிரிகளை நோய் உண்டாக்கி மருந்துகளை கொடுத்து குணமாகிறதா என்று பார்க்க ஆரம்பித்தார்கள். பல உயிரிகள் பயன்பட்டாலும் எலி பிரதானமாக அமைந்தது, அதுவும் குறிப்பிட்ட வகை எலிகள் இதில் அதிகம். முக்கியமாக அதன் சிறிய அளவு ஒரு காரணமாக இருந்தது.
ஆய்வக எலி என்கிற அறிவியல் வார்த்தைக்கு பேச்சுவழக்கில் சோதனை எலி என்று குறிப்பிடுவோம். உண்மையில் அவ்வார்த்தை பலகாலம் தொட்டு மண்ணில் இருக்கிறது. ஆய்வக எலிகள் ஆய்வகத்தை விட்டு வெளியே அதனால் புதிய நோய்கள் பரவக்கூடும். இந்த சிறு உயிரி உலகில் பல பகுதிகளில் மனிதன் இருக்கும் பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் வாழ்கின்றன. ஒரு ஆய்வக எலி தப்பித்து வெளியே வருவதும் பின்னால் அதனால் உருவாகும் சிறுமாற்றங்களையும் பற்றி பேசுபொருளாக கொண்ட அறிவியல் புனைவு என்று சொல்லலாம் அ.அமலன் ஸ்டேன்லி எழுதியிருக்கும் அத்துமீறல் நாவலை.
சுவாரஸ்யமான புதிய வாழ்க்கையை அறியும் ஆவலை பூர்த்தி செய்யும் புனைவு. ஆய்வக உயிரி தன்னை தற்காத்துக் கொள்ள தெரியாமல் போவதிலிருந்து தன் சந்ததியினரை பெருக்கிக் கொள்ளும் வழிவகையற்று போயிருக்கும் நிலை வரை அவற்றின் சோதனை வாழ்க்கையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. சில சோதனைகள் எளிமையானவையாகவும் சில புற்றுநோய்களை அதன் மீது உருவாக்கி வலி கொண்ட வாழ்கையை கணக்கிடுவது எல்லாமே மனித இனத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும்தான் நினைப்பது ஒரு வகையில் தூய அறிவியல் வளர்ச்சிப் பார்வைதான்.
அறவியல் பார்வை ஒன்று பலநெடுங்காலமாக
உரத்து ஒலித்தும் செவிசாய்க்க முடியாத நிலை மருத்துவ துறைக்கு. மருத்துவ துறைக்கு மனிதன் செலவழிக்கும் தொகை மற்ற எந்த துறையையும் (ராணுவத்துறையை தவிர) விட அதிகமானது.
மருத்துவ ஆய்வாலரால் தப்பிக்கும் ஒரு பெண் வெள்ளெலி அடையும் துன்பங்கள், அதை கண்டறிய அவர்கள் செய்யும் முயற்சிகள் எல்லாம் சேர்து உலகத்தில் சோதனை எலிக்கு இருக்கும் ஒரே வழி உயிர்த்தியாகம் என தோன்றுகிறது. கண்டடையப்பட்டு உயிர்தியாகம் செய்யும் தருணத்தில் மென் விரல் தொடுகையும், மயக்கமுறவைக்கும் வாயுவின் இன்பமும் சேர்ந்த மகிழ்சியுடன் அதை இல்லாமல் ஆக்கி பாலிதீன் பையில் அடைத்து எரியூட்ட எடுத்து செல்லப்படுகிறது.
***
அறிவியல் புனைவு என்று சொன்னாலும், ஆய்வகத்தின் ஆய்வறிக்கை ஒன்றின் தமிழாக்கம் போன்றிருக்கிறது சில பகுதிகள். உரையாடலின் ஒரு பகுதியாகவோ அல்லது அறிக்கை என்று சொல்லப்பட்டு சில பகுதிகளை இணைத்திருக்கலாம். 'ஆய்வக எலியின் கதை' என்று சொல்லப்பட்டாலும் ஆய்வகத்தில் உள்ள ஒரு எலியின் ஒருநாள் வாழ்க்கை சொல்லப்படுகிறது. எலி பார்வையில் கதை விரியும் சில இடங்கள், உயர்தினை, அஃக்றினை குழப்பங்கள் தென்படுகின்றன.
எலி மீதான முற்காலத்தில் நடந்த வரலாற்று செய்திகள், கதைகள், பழக்கங்கள் இணைத்திருப்பது சுவாரஸ்யம். அதிலொன்று எலிக்குஞ்சுகளை ஆலிவ் எண்ணெய் உறவைத்து உயிருடன் சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. ஒருபக்கம் அருவருப்பாக பார்க்கும் வழக்கமும் இருந்திருகிறது. எலியால் பரவிய நோய்கள் பல உண்டு. ஆனாலும் எலியென்னு சிறு உயிரி நமக்களிக்கும் பாடம்: சிறியனவாக இருக்காதே.
1 comment:
விங்குகளின் வாழ்க்கை எப்பொழுதுமே துன்பம் மிகுந்ததுதான்.
இருபத்து நான்கு மணிநேரமும் பிற விலங்குகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதுடன், மனிதனின் சோதனை முயற்சியில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இன்று நடக்கின்ற நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது, நாமே ஒரு ஆய்வக எலிதானோ என்னும் எண்ணம் ஏற்படுகிறது
Post a Comment