Sunday, March 29, 2020

கொரோனாவின் விளைவுகள்



கொரோனோ என்னும் தொற்றுநோய் திடீரென்று உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் வாழ்வில் புகுந்துவிட்டது. தப்பிக்க முடியாமல் சகிக்க முடியாமல் நம் வாழ்வின், தினசரி இயக்கங்களில் இணைந்துவிட்டது. சம்பந்தமற்ற புதியவரவு. இதுவரை கேள்வியே பட்டிராத ஒன்று.

ஆனால் அது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என கொஞ்சம் யோசித்து பார்த்தால் சில உண்மைகள் புரிந்தன.


1.   நீளும் ஆயுள்காலம்: காடுகளில், மலைகளில், கடலில் அலைந்துக் கொண்டிருந்த மனிதன் கொரோனா வந்துவிட்டது என்றதும் வீட்டிற்கு வந்துவிட்டான். நாளெல்லாம் வேலை, பணம் என்று சுற்றிக்கொண்டிருந்தவர்கள், வீட்டில் முடங்கியதால் அவர்களின் டென்சன் வாழ்க்கை விடிவுக்கு வந்திருக்கும். ஆகவே அவர்களின் மருந்துகளின் அளவு உலகளாவில் குறையும். ஆயுள்காலம் அதிகரிக்கும்.
2.   விலங்குகளின் ஆயுள்காலம்: விலங்குகளின் ஆயுளையும், அதன் சுதந்திரத்தையும் தீர்மானிப்பது மனிதன் தான். காடு, மலை, வான், கடல் நான்கிலும் வசிக்கும் விலங்குகள் பெரிய சுதந்திரம் அடைந்திருக்கும். அதன் ஆயுள்காலம் அதிகரிப்பதுடன் அதன் சுதந்திரமும் அதிகரிக்கும். அது விரும்பும் இடத்திற்கு செல்லவும், தன் இரையை, தன் இணையை தேடிக்கொள்ளவும் முழு சுதந்திரம் கிடைக்கும்.
3.   உலக மாசு: உலகத்தின் மாசு தன்மை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வாகனங்கள், தொழிற்சாலைகள் இயக்கத்தால் நிகழ்கிறது. இனி நகரங்களின் மாசு வெகுவாக குறையும், பெட்ரோலிய பயன்பாடு குறைவதால் இன்னும் சில ஆண்டுகளுக்கு எதிர்காலத்தில் அந்த தேவை நீடிக்கும். இன்னும் 40 ஆண்டுகளில் எல்லா பெட்ரோலியமும் தீர்ந்துவிடும் என்பது ஒரு கணிப்பு.
4.   பழைமையை மீட்டெடுத்தல்: எல்லாவற்றிலும் எல்லா துறைகளிலும் புதிய தயாரிப்புகள், கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றன. புதிய தயாரிப்புகள், புதிய மோஸ்தர்கள் எல்லாமே அடிபடும். புதுமைகளை விடுத்து பழமையான சில விஷயங்களை அறிந்துக் கொள்வதிலும், அவைகள் குறித்து சிந்திப்பதும் நிகழும். மனிதர்கள் தங்கள் பழையை மீட்டெடுப்பதில் அக்கறை கொள்வார்கள், அதாவது புதுமையை கொஞ்சகாலம் நிறுத்தி வைப்பார்கள்.
5.   ஒழுங்குமுறை: சில நாடுகளை தவிர உலக நாடுகளில் அனைத்திலும் ஒழுங்கின்மை இருக்கும். வரிசையை கடைப்பிடித்தல், தன் முறைக்காக காத்திருந்தல், சாலையில் பொறுமை போன்றவைகள் இயல்பாகவே இனி அவர்களுக்கு வந்துவிடும். காவல்துறைக்கு பயப்படாத, தன் அரசியல், பணபலம் போன்றவைகளைக் கொண்டு சாதித்தவைகள் இனி செய்யமுடியாமல் ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்படும்.
6.   மனிதாபிமானம்: பணத்தேவை உழைப்பு இல்லாமல் போய், காவல், மருத்துவ, தூய்மை துறைகள் மட்டுமல்ல மற்றவர்களும் ஏதோ ஒருவகையில் உதவிகள் செய்ய வேண்டியிருக்கும். பணம், உடல் உழைப்புகளின் வழியே அவர்கள் செய்வது உலக மக்களின் மீதான மனிதாபிமானம் உயரும். தங்கள் தொழிலாளர்களுக்கு பணம், பணம் பெற்றவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்தல் என நீளும்.

இன்னும் சில நாட்களில் அதன் பரிமாணம் மாறி தொடங்கிவிடும். அதற்கு தகுந்தாற்போல் விளைவுகளும் மாறும். புதிய எண்கள் சேரும். காத்திருப்போம்.

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தன்னைத் தானே ஒருவர் சுயமதிப்பீடு செய்துகொள்வதற்கான காலமாகவும் இது அமைந்துவிட்டது.

கரந்தை ஜெயக்குமார் said...

காரொன உலகையே புரட்டிப்போட்டுவிட்டதே
அன்றாடம் தொழில் செய்தி, அன்றைய உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு, வயிற்றுப் பசி போக்கும் தொழிலாளர்களின் நிலை அல்லவா கவலைக்கிடமாகப் போய்விட்டது