Tuesday, January 1, 2019

2018ல் வாசித்த நூல்கள்


வாசிப்பை நேசிக்காமல் இருக்க முடியாது என்று எந்த வயதில் நினைக்க ஆரம்பித்தேன் என சொல்வது கடினம். ஒருநாளைக்கு சில பக்கங்களாவது படித்துவிடுவது என்று வழக்கமானது மிக தற்செயல்தான். ஒவ்வொரு வருடமும் ஒரு திட்டமிடலுடன் ஒரு பட்டியலும் தயாராகிவிடுகிறது. ஆனால் அதிலிருந்து நூல்களின் தேர்வு அப்போதைய மனநிலையை பொருத்தது என நினைக்கிறேன். பாதியில் விட்டுவிட்ட நூல்கள்தான் அதிகம். சில காரணங்களுக்காக அவைகளை மனம் தொடரமுடியாமல் இருக்கும். ஒரேவகையான நூல்களை தொடர்ந்து வாசிப்பதும் அதனால்தான் என நினைக்கிறேன். இபுத்தகங்களினால் வாசிப்பு அதிகரித்திருக்கிறது. கண்கள் சோர்வடையாமல் இருப்பதால் தொடர்ந்து வாசிக்க முடிகிறது. பட்டியலில் இருந்த அபுனைவுகளில் பெரிய புத்தகங்களை அதிகம் வாசிக்கவில்லை என தோன்றுகிறது. சில வாசிக்காமல் பாதியில் இருப்பதும் ஒரு காரணம். இந்த ஆண்டிற்கு இதைவிட அதிகம் வாசிக்க வேண்டும் என்பதே இலக்கு. பார்க்கலாம்.
(e - இபுத்தகம்)

1.       பொறுப்புசி.எம்.முத்து
2.       வெண்ணிற இரவுகள் - தஸ்தயெவிஸ்கி (ரா.கிருஷ்னையா)
3.       அருவருப்பான விவகாரம் - தஸ்தயெவிஸ்கி (ரா.கிருஷ்னையா)
4.       சூதாடி - ஃப்யோதர் தஸ்தயெவிஸ்கி (ரா.கிருஷ்னையா)
5.       மழைப்பாடல் (வெண்முரசு) ஜெயமோகன்
6.       ரஷ்ய இலக்கியம்.வாணன்
7.       தஸ்தயேவிஸ்கியும் டால்ஸ்டாயும்சி.பி.ஸ்நோ (நா.தர்மராஜ‌ன்)
8.       கங்கைப் பருந்தின் சிறகுகள் - க்ஷ்மீநந்தன் போரா (துளசிஜெயராமன்) e
9.       ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
10.    வெங்கட் சாமிநாதன் கட்டுரைகள் e
11.    பாரதி நினைவுகள்யதுகிரி அம்மாள் e
12.    கூந்தப்பனை – சு.வேணுகோபால்
13.    .வே.சு. ஐயர் - தி.சே.செள.ராஜன் e
14.    அஞ்சலை- கண்மணி குணசேகரன்
15.    கரமசோவ் சகோதரர்கள்ஃபியோதர் தஸ்தயேவிஸ்கி (புவியரசு)
16.    ருத்ரப்யாகையின் ஆட்கொல்லி சிறுத்தை – ஜிம் கார்பெட் (தஞ்சைகவிராயர்)
17.    சிவப்புத் தகரக் கூரை – நிர்மல் வர்மா (எம்.கோபாலகிருஷ்ணன்)
18.     சுவரில் ஒரு ஜன்னல் இருந்துவந்தது – வினோத்குமார் சுக்லா (காமாட்சி தரணிசங்கர்)
19.    விழுந்துக் கொண்டிருக்கும் பெண் – சிறுகதைகள் (எம்.எஸ்)
20.     கலியுகக் கிழவியும் ஓநாய்க் குட்டிகளும் – சாந்தி சித்ரா (பா.ஜெய்கனேஷ்)
21.    பையன் கதைகள் – விகேஎன் (மா.கலைச்செல்வன்)
22.    ஆறாவடுசயந்தன் e
23.    காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பேக் (நல்லதம்பி) e
24.    நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன்
25.    கறிச்சோறு - சி.எம்.முத்து
26.    உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார் e
27.    சுமையாகனவுப்பிரியன்
28.    பொன்னகரம்அரவிந்தன் e
29.    நாவல் இலக்கியம்கைலாசபதி e
30.    நாவல் (கோட்பாடு) – ஜெயமோகன் e
31.    சிறுவர் கதைக் களஞ்சியம் (தொகுப்பு) ‍- சாகித்ய அகாடமி
32.    கார்ப்பரேட் கோடரிநக்கீரன் e
33.    இளையோருக்கான இந்திய தொன்மக் கதைகள் (தொகுப்பு) ‍- சாகித்ய அகாடமி
34.    சிலுவைராஜ் சரித்திரம்ராஜ்கெளதமன்
35.    நட்ராஜ் மகராஜ்தேவிபாரதி e
36.    நிலமெல்லாம் - ரத்தம் பா.ராகவன் e

3 comments:

kaliyaperumalveerasamy said...

Yes good to hear . most novels I read yearly thanks again for one more time to read

கரந்தை ஜெயக்குமார் said...

வாசிக்காத நாட்கள் எல்லாம் சுவாசிக்காத நாட்கள் என்பர் நம் முன்னோர்.
தொடர்ந்து சுவாசியுங்கள்
வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களது பதிவு, வாசிப்புப்பழக்கத்தைத் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.