Wednesday, December 14, 2016

ஆசுபத்திரிநாம் உள்ளே நுழையும்போது இன்முகத்துடன் வரவேற்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள், ஆயாக்கள், வார்ட் பாய்கள் என்று அங்கு வேலை செய்யும் அனைவரும் ஒரே மாதிரியான மனநிலையிலும் உடல்மொழியிலும் இருக்கிறார்கள். அப்படி பயின்றிருக்கிறார்கள். நோயாளிகளின், கூடவருபவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நோயாளிகளின் நோய்க்கு தகுந்தாற்ப்போல் எதிர்வினையாற்றுவதைவிட அவர்களின் முககுறிகளுக்கு மட்டுமே எதிர்வினை செய்கிறார்கள். ஆனால் இது ஒரு பாவனை என்று புரிய அதிக நாட்கள் தேவையிருக்காது. சில காசு அதிக செலவு பிடிக்கும் பெரிய மருத்துவமனைகளைத் தவிர மற்ற சின்ன மருத்துவமனைகள் ஒன்றுபோலதான் இருக்கின்றன.

Wednesday, December 7, 2016

சோசோ என்கிற பெயர் எப்படி அவரின் பெயரின் முன்னால் வந்தது என்று நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. சோ என தொடங்கும் ஒரு பெயரின் சுருக்கம் என்று நினைத்துக் கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது. சோ எப்படி வந்தது என்று ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டபோது அந்த ரகசியத்த உங்களிடம் சொல்லுவேன்னு நினைக்கிறீங்களா என்றார். சோ என்கிற பெயர் அவர் நடித்த முதல் நாடகத்தின் (பகீரதன் எழுதிய தேன்மொழியாள் என்ற நாடகம்) ஒரு கதாபாத்திரத்தின் பெயர். அவர் நடித்த அந்த கதாபாத்திரத்தின் பெயரை புனைப்பெயராக தன் முன் இணைத்துக்கொண்டார். சினிமாவிற்கு வந்தபின் சோ மிகப் பிரபல்யமான பெயராக மாறிவிட்டது.

Tuesday, December 6, 2016

ஜெயலலிதா என்னும் மனுஷி

இரண்டாம் முறை ஆட்சியை பிடிப்பவர் இறந்துவிடுவார் என்கிற வாட்ஸ்ஸப் வதந்தி இன்று உண்மையாகிவிட்டது. எம்ஜியார் இரண்டாம் முறை ஆட்சியை பிடித்ததும் (நடுவில் ஒருமுறை கவர்னர் ஆட்சிவந்தது) அவர் இறந்தார். பல்வேறு உடல் பிரச்சனைகள் எம்ஜியாரைப்போலவே ஜெ.வுக்கு ஏற்பட்டு காலமாகியிருக்கிறார். அவரின் மரணம் எதிர்பாராத மிக அசாதாரமான சூழலில் நடந்திருக்கிறது. அவருக்கென்று வாரிசுகள் யாரையும் காட்டாமல் அவர் இறந்திருக்கிறார். ஜெயலலிதா எப்படி எம்ஜியாரின் இறப்பிற்கு பின்னே உருவாகி வந்தாரோ அப்படி யாராவது உருவாகி வரவேண்டும்.

ஜெயலலிதா கட்சியை பிடிக்கவும், ஆட்சியை பிடிக்கவும் ஏற்பட்ட சிரமங்களை போலவே எதிர்கட்சியினரை சமாளிக்க மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது. 89ல் சின்ன கட்சியாக அவர் சட்டமன்றத்தின் உள்ளே வந்தபோதே மக்களாலும், அரசியலார்களாலும் அத்தனை வெறுப்புடன் பார்க்கப்பட்டார். சட்டமன்றத்திலேயே தாக்கப்பட்டார். முழுமையாக விரட்டப்படவேண்டும் என்கிற வெறியில் எழுந்த பல்வேறு அவதூறுகளால் தொடர்ந்து வசைப்பாடபட்டார். இந்த ஒன்றே அவரை தொடர்ந்து அரசியலில் இருக்க செய்துவிட்டது.

Friday, December 2, 2016

விளையாட்டுல என்ன இருக்குநான் சிறுவனாக இருந்தபோது என் வீட்டருகே இருந்த பெண்மணியின் முகம் இன்றும் நினைவிருக்கிறது. ஒடுங்கிய கன்னம், துருத்திய கண்களுடன் இருக்கும் அவரின் செய்கைகள் எப்போதும் விசித்திரமாக இருந்ததே அதற்கு காரணம் என நினைக்கிறேன். அவரின் பிள்ளைகளை வெளியே எப்போது விளையாட அனுமதிப்பதில்லை. மாலையானதும் வீட்டில் வைத்து பூட்டிவைத்துவிடுவார் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடி தன் குழந்தைகள் கெட்டுவிடும் என்பதுதான் அவர் சொல்லும் காரணம். விளையாட்டுல என்ன இருக்கு, படிப்புலதான் எல்லாம் இருக்கும் என்பார். ஆனால் எப்போதாவது அந்த குழந்தைகள் விளையாட வரும்போது அதிக விளையாட்டு தனத்துடன் நடந்துக்கொள்வதைப் பார்க்க வயதிற்குரிய புத்திசாலிதனம் இல்லாமல் இருப்பதாக தோன்றும். கால்நூற்றாண்டாக விளையாட்டை புறக்கணித்த குழந்தைகள் வளர்ந்து இப்போது இருக்கும் இன்றைய தமிழகத்து மனிதர்கள் அந்த 'புத்திசாலிதனம்' இல்லாமல் இருக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும்.

Thursday, December 1, 2016

புதுத்துணிபுதுத்துணி வாங்கி தைத்தது வந்ததும், மடிப்பு கலையாமல் இருக்கும்போதே பிரிக்காமல் அதற்கு மஞ்சளோ குங்குமமோ தடவிவிடுவார்கள். பல துவைப்புக்கு பின்னேயும் அதன் அந்த மஞ்சள்/சந்தன நிறம் மாறாமல் இருக்கும். ஒருவர் தன் காலரில் மஞ்சள் அல்லது குங்கும கறையுடன் வந்தால் அது புதுத்துணி என்று அர்த்தமாகிவிடும், அந்த சட்டை எவ்வளவு பழசாக இருந்தாலும். இன்று புதுத்துணிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று நினைக்கிறேன். நேரடியாக ஆயத்த ஆடைகளை மக்கள் அணிய தொடங்கியது ஒரு காரணமாக இருக்கலாம். மிக குறைந்த விலையிலும் மக்களிடம் பணப்புலக்கம் அதிகமாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு 15 வருடமாக இந்த நிலை மாறிவிட்டது என நினைக்கிறேன்.

முன்பு வருடத்திற்கு அதுவும் தீபாவளி சமயத்தில் மட்டும் துணி எடுக்கும் பழக்கம் இருந்தது. துணி வாங்குவது ஒரு பெரிய படலமாக நடக்கும். துணி எடுத்தாச்சா என்கிற கேள்வி ஒருவரை ஒருவர் கேட்டபடி இருப்போம். முதலில் சிறுவர்களுக்கு இருக்கும் பின் பெரியவர்கள் என்று கடைக்கு சென்று வருவார்கள். பின் தைக்க என்று தனியாக கடைகள் இருக்கும் தெருவிற்கு சென்று வருவார்கள். சிலர் துணியை தண்ணீரில் நனைத்து காய வைத்து பின் தைக்க கொடுப்பார்கள். சுருங்குதல், சரியாக உடலில் அமராது என்று காரணங்களைச் கூறி அப்படி செய்வார்கள்.