Wednesday, June 4, 2014

தவப்புதல்வன் சிவாஜி



தவப்புதல்வனை பாதியிலிருந்துதான் பார்த்தேன். சட்டென ஒட்டிக் கொண்டுவிட்டது. படம் கருப்பு வெள்ளையில் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தாலும், ஒரளவிற்கு நேர்த்தியாகவே படம் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான படம். அதனால் கதையில் பல ஓட்டைகளை கூற‌முடியும். கதை மிக எளிய நேர்கோடாகதான் அமைந்திருக்கிறது. ஒரு இசைகலைஞன் தன் பரம்பரை வியாதியான மாலைக்கண் நோய் தனக்கு வந்துவிடகூடாது என்பதும் அது தன் அம்மாவிற்கு தெரியகூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறான். ஒரு நாள் மாலைககண் நோய் வந்துவிடுகிறது. அம்மாவிடம் சொல்லாமல் இருக்கிறான் ஒரு டான்சர் தன்னை திருமணம் செய்ய சொல்கிறாள் அல்லது அவன் அம்மாவிடம் சொல்லப்போவதாக சொல்லி அவனை டார்சர் செய்கிறாள். கடைசியில் ஒரு வெளிநாட்டு டாக்டரின் ஆப்பரேசனில் குணமடைந்து அம்மாவை அவளிடமிருந்து காக்கிறான்.