தமிழில் பதிப்பகங்களுக்கு
குறைவேயில்லை. பதிப்பக பட்டியலை மேலோட்டமாக நோக்கினாலே அதன் எண்ணிக்கை ஐநூறுக்கு மேலாக இருக்கும்
என தெரிந்துவிடும். ஒரு 100க்கு மேற்பட்ட
பதிப்பகங்கள் தீவிரமாக செயல்படுபவைகளாக இருக்கும். சில தொடர்ந்து செயல்படுவைகளும்,
சில தன் பழைய புத்தகங்களையே திரும்ப திரும்ப
அச்சிட்டு வெளியிடுபவைளும் உள்ளன. பல பதிப்பகங்கள் எதாவது ஒரு கட்டத்திலாவது தீவிரமாக
செயல்படுபவையாக இருக்கின்றன.
உள்ளடக்கத்துடன் அதன் தயாரிப்பின் தரம், நல்ல காகிதம், புதுமையான அட்டை என்று நம்மை கவர்வனவாக சில பதிப்பகங்கள் இருந்துவிடுகின்றன. சமீபகாலங்களில் என்னை அதிக கவனிக்க வைத்த பதிப்பகங்கள் என்றால் எதிர், காலச்சுவடு, நற்றினை பதிப்பகங்களை சொல்லலாம்.
உள்ளடக்கத்துடன் அதன் தயாரிப்பின் தரம், நல்ல காகிதம், புதுமையான அட்டை என்று நம்மை கவர்வனவாக சில பதிப்பகங்கள் இருந்துவிடுகின்றன. சமீபகாலங்களில் என்னை அதிக கவனிக்க வைத்த பதிப்பகங்கள் என்றால் எதிர், காலச்சுவடு, நற்றினை பதிப்பகங்களை சொல்லலாம்.
எதிர் வெளியீட்டின் தேர்வுகள் என்னை கவர்ந்தபடியே இருக்கின்றன. ஒரு சில நல்ல புத்தகங்களே போதும் தொடர்ந்து அதை பின் தொடர்ந்தபடி இருப்பதற்கு. அதன் மொழிபெயர்ப்பு தேர்வுகளான, சிறிதே அழகு, ஆனி ப்ராங்கின் டைரிகுறிப்புகள், பாடும்பறவையின் மெளனம், மணற்குழி பெண் போன்ற புத்தகங்கள் தமிழுக்கு நல்ல அறிமுகங்கள். இது தவிர வேறு நல்ல நேரடி நூல்களும் உள்ளன. (http://www.ethirveliyedu.in/ )
காலச்சுவடு பதிப்பகத்தின் தொடர் உழைப்பு பிரமிக்க வைப்பவை. விதவிதமாக வெளியிடுவதில் காலச்சுவடு அதிகம் ஆர்வம் கொள்கிறது. எல்லாப் பக்கங்களிலும் நீளும் அதன் ஆக்டோபஸ் கைகள் நல்ல புத்தகங்களை வெளியிடுவதில் அதிக முயற்சிகொள்கின்றன. தனிமையில் நூறுஆண்டுகள், பனி, என் பெயர் சிவப்பு போன்ற மொழிபெயர்ப்புகளும், பெருமாள் முருகன், ஜொடீ குரூஸ் போன்றோரின் நூல்களுடன் குபாரா போன்றோரின் பழைமையான எழுத்துகளையும் மறுபதிப்பு வெளியிடுவதிலும் ஆர்வம் கொள்கிறது. (http://kalachuvadu.com/)
நற்றினையில் அதன் அட்டை
தேர்வே அசத்தலாக இருக்கிறது. உள்ளே உள்ள எழுத்துக்களின் தெளிவான அச்சு அதன் தீவிர மனநிலையை காட்டுகிறது. அசோகமித்ரன், கநாசு, கோபிகிருஷ்னன், சி.மோகன் போன்றோரின் மறுபதிப்புகளும், புதிய எழுத்துகளை அறிமுகபடுத்துவதும் சிறப்பாக உள்ளன.
இதற்கு அடுத்து கிழக்கு, தமிழினி, உயிர்மை, போன்ற பதிப்பகங்கள் தொடர்ந்து கவனிக்க வைப்பவைகள். கூடவே சந்தியா, தமிழ் புத்தகாலயம், என்சிபிஎச், என்பிடி, சாகித்ய அகாடமி போன்ற பதிப்பகங்கள் நான் விரும்பும் பதிப்பகங்கள்.
No comments:
Post a Comment