Friday, January 10, 2014

நான் விரும்பும் பதிப்பகங்கள்








தமிழில் பதிப்பகங்களுக்கு குறைவேயில்லை. பதிப்பக பட்டியலை மேலோட்டமாக நோக்கினாலே அதன் எண்ணிக்கை ஐநூறுக்கு மேலாக‌ இருக்கும் என தெரிந்துவிடும். ஒரு 100க்கு மேற்பட்ட பதிப்பகங்கள் தீவிரமாக செயல்படுபவைகளாக இருக்கும். சில தொடர்ந்து செயல்படுவைகளும், சில தன் பழைய புத்தகங்களையே திரும்ப திரும்ப அச்சிட்டு வெளியிடுபவைளும் உள்ளன. பல பதிப்பகங்கள் எதாவது ஒரு கட்டத்திலாவது தீவிரமாக செயல்படுபவையாக இருக்கின்றன.

Monday, January 6, 2014

தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்

முழுவதும் இந்தியாவின் வெளியிலிருந்து நேரடியாக அந்த மொழியிலிருந்தோ அல்லது ஆங்கிலம் வழியாகவோ தமிழுக்கு மொழியெயர்க்கப்பட்டுள்ள நாவல்களை சேமிக்க வேண்டும் என்பதற்காக ஒரு வேட் பையிலில் எழுதிவைக்க ஆரம்பித்தேன். இதில் நாவல்கள் மட்டுமே உள்ளன. சிறுகதைகள், இந்திய மொழிபெயர்ப்பு நாவலகள் இணைக்கப்படவில்லை. (அவைகளை தனியாக எழுதவேண்டும்). பல‌ தமிழில் மொழிபெயர்க்க பட்டுள்ளது என்று தெரிந்தாலும் என்ன பதிப்பகம், மொழிபெயர்பாளர்கள் யார் என்ற விவரங்கள் பொதுவாக கிடைப்பதில்லை. ஒன்றுக்கு மேற்ப்பட்ட மொழிபெயர்ப்புகள் இருப்பதனால் எது சிறந்தது என்ற குழப்பமும் நீடிக்கிறது. சில பதிப்பகங்கள் அப்ரிஜ்டு வர்சன் எனப்படும் சுருக்க பதிப்புகளையும் வெளியிடுகின்றன. இவைகளும் ஒரு நல்ல மொழிபெயர்ப்புகளை படிக்க நினைக்கும் ஒருவருக்கு இடைஞ்சலானவைதான்.

Friday, January 3, 2014

2000பின் வெளிவந்துள்ள தமிழ் நாவல்கள்

2000பின் வெளியாகியுள்ள தமிழ் நாவல்களின் பட்டியல் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் நினைத்து இப்போழுதுதான் முடித்துள்ளேன். ஆனாலும் முழுமையானது என்று சொல்லமுடியவில்லை. சிலவிடுபடல்கள் இருக்கலாம் அல்லது சில 2000 முந்தைய பதிப்பான நாவலாக இருக்கலாம். நாவல்களின் யுகம் என்பதால் இது அவசியமாகிறது. 2000 வரை வெளியான மொத்த நாவல்களை இனிவரும் சில ஆண்டுகளில் 2000 பின் வந்த நாவல்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என தெரிகிறது. முன்பு வெகுஜன நாவல்கள் பரவலாக இருந்தது, அத்தோடு அது நாவல் என்றும் போற்றப்பட்டது. இப்போது வரும் நாவல்களில் மிகக் குறைவான நாவல்களைத் தவிர மற்றயவைகள் சிறந்த இலக்கிய நாவல்களாகவே இருக்கின்றன. ஒரு சான்றாதாரத்திற்கு ஆவாவது ஒரு முழுமையான பட்டியல் தயாரிக்கவேண்டும் என நினைக்கிறேன்.
விடுபடல்களை அல்லது நீக்கல்களை நண்பர்கள் கொடுத்து உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும்.