Thursday, February 2, 2012

பண்புடன் இணைய இதழ்

இணைய இதழ்கள் யாருக்கும் பொதுவாக பெரிய அளவில் கவர்வதில்லை. சொல்வனம், திண்ணை போன்ற சொல்லும்படியான ஒரிரண்டை தவிர மற்றயவைகள் அதற்கு தேவையான தரத்துடன் இல்லை என்பதே காரணம். 'பண்புடன்' என்ற இணைய இதழ் சற்று வித்தியாசம் காட்டி இம்மாத இதழ் வருகிறது. ஒரு பொறுப்பாசிரியரின் உழைப்பில் ஒவ்வொரு இதழும் வெளிவரும் இந்த இணைய இதழ், ஒவ்வொரு இதழும் வெவ்வேறு பாணியில் அமைவது இது தான் காரணமென்றாலும் சில சம்யங்களில் நல்ல தொகுப்பாக அமைந்துவிடுவதும் உண்டு. அந்தவகையில் இம்மாத இதழ் மா. கார்த்திகைபாண்டியனின் பொறுப்பில் சீரிய உழைப்பில் வெளிவந்துள்ளது. அதில் என் கதையான 'பஸ்ஸாண்ட்' வெளிவந்துள்ளதால் என் கவனத்தை கவர்ந்ததாக் சொல்லலாம். முழுமையாக இன்னும் படிக்கவில்லை. ஆனால் வாசகர்களுக்கு இந்த பக்கங்களை பரிந்துரைக்க தயக்கம் எதுவும் இல்லை. ஒரு குழுவாக வரும் எழுத்துக்களிலிருந்து மாறுபட்டது என்பதை அந்த பக்கங்களை பார்த்துமே புரிந்துவிடுகிறது.

இணைய இதழின் பக்கம்: www.panbudan.com

என் கதையின் பக்கம்: http://panbudan.com/story/k-j-ashokkumar


3 comments:

கே.ஜே.அசோக்குமார் said...

நன்றி. தங்களின் உற்சாகத்திற்கும் சேர்த்து.

R. Gopi said...

@கெ.ஜே. அசோக்குமார், எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். ராமஜெயம், ஸ்ரீலக்ஷ்மி பேருந்துகள் ஊர் நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டன. திருச்சி பஸ் ஸ்டாண்டும் எனக்கு நெருக்கமானது. வேலை / படிப்பு விஷயமாகப் பலமுறை திருச்சி வந்திருக்கிறேன்.

சிறுகதையைப் பற்றி: கதை அதன் போக்கில் போகிறது. மிகவும் எளிமையாக ஆனால் effective ஆக சொல்ல வந்ததைச் சொல்லி இருக்கிறீர்கள்.

கே.ஜே.அசோக்குமார் said...

வணக்கம் திரு.கோபி, நானும் கும்பகோணம்தான். சொந்த ஊராக இருந்தாலும் அப்பாவின் வேலைகாரனமாக வேறுவேறு ஊர்களில் இருந்தோம். விடுமுறைக்கான ஊராக எப்போதும் குடந்தைதான் இருந்தது இருக்கிறது. உங்கள் எழுத்துக்களை கவனித்து வருகிறேன், படிப்பாளியாக இருப்பது பொறாமையளிக்கிறது. மகாமக நினைவுகள் நல்ல தொடர். நீங்கள் கூறும்பகுதியிலெல்லாம் வாழ்ந்திருக்கிறோம். தூரவரும்போதுதான் அதன் அருமை தெரிகிறதுபோல.

அந்த சிறுகதை ஒரு வேகத்தில் எழுதியது ஆனால் நன்றாக வந்துள்ளதாக சொல்பவர்கள் அதிகம். திருச்சியில் படித்ததால், அந்த தாக்கம்.