Wednesday, February 22, 2012

வம்சி புத்தக வெளியீடுகள்


மார்ச் 03, 2012 சனிக்கிழமை மாலை 6.00 மணி
சுப்ரீம் ஹோட்டல், மதுரை

வரவேற்புரை
கே.வி. ஷைலஜா
வம்சி புக்ஸ்.

விலகி ஓடிய கேமிரா - மின்னல்
வெளியிடுபவர்
கலாப்ரியா
பெற்றுக்கொள்பவர்
டாக்டர். ஆமானுல்லா
உரை
சுபகுணராஜன்

வேல.ராமமூர்த்தி கதைகள் வேல.ராமமூர்த்தி
வெளியிடுபவர்
பிரபஞ்சன்
பெற்றுக்கொள்பவர்
ஏஸ்.ஏ. பெருமாள்
உரை
பாரதி கிருஷ்ணகுமார்

முன்னொரு காலத்தில் கண்ணாடிச்சுவர்கள் - உதயசங்கர்
வெளியிடுபவர்
இரா. நாறும்பூநாதன்
பெற்றுக்கொள்பவர்
ஜே. ஷாஜகான்
உரை
கிருஷி, மணிமாறன்

ஆதி இசையின் அதிர்வுகள் - மம்மது
வெளியிடுபவர்
திரு. சீத்தாராமன்
பெற்றுக்கொள்பவர்
ஏம்.ஜே. வாசுதேவன் ஐ.ஏம். கம்யூனிகேஷன், மதுரை.
உரை
பூர்ணகுமார் அகில இந்திய வானொலி நிலையம், மதுரை.

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்- ஜா. மாதவராஜ்
வெளியிடுபவர்
வேல ராமமூர்த்தி
பெற்றுக்கொள்பவர்
செ. சரவணகுமார்
உரை
ஜெ. ஷாஜகான்

பதிவர்களுக்கான வம்சி சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
வெளியிடுபவர்
பிரபஞ்சன்

முதல் பரிசு
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - ஏம். ரிஷான் ஷெரீப்

இரண்டாம் பரிசு
இரைச்சலற்ற வீடு - ரா. கிரிதரன்
யுக புருஷன் அப்பாதுரை

மற்றும் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் எழுதியவர்கள்
படுதா - போகன்
சுனை நீர் – ராகவன்
உயிர்க்கொடி - யாழன் ஆதி
அசரீரி - ஸ்ரீதர் நாராயணன்
பெருநகர சர்ப்பம் -  நிலா ரசிகன்
கொடலு - ஆடுமாடு
கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப் பாண்டியன்
பம்பரம் - க.பாலாசி
அப்ரஞ்ஜி - கே.ஜே.அசோக்குமார்
முத்துப்பிள்ளை கிணறு - லஷ்மிசரவணக்குமார்
கல்தூண் - லதாமகன்
கருத்தப்பசு - சே.குமார்
மரம்,செடி,மலை - அதிஷா
அறைக்குள் புகுந்த தனிமை - சந்திரா
வார்த்தைகள் -  ஹேமா

நிகழ்வு ஓருங்கிணைப்பு
ஆ. முத்துகிருஷ்ணன் பவாசெல்லதுரை

_o0o_

Monday, February 20, 2012

சொல்வனம் - சிறுகதை


முக்கியமான சிறுகதையாக நான் நினைக்கும் என் சிறுகதை ஒன்று சொல்வன இணைய இதழில் வெளியாகியுள்ளது. இணைய இதழ்களில் முக்கிய இதழாக திகழும் சொல்வனம் பல நல்ல கட்டுரைகளையும், கதைகளையும் வெளியிட்டு வருகிறது. அதில் சிறுகதை வெளியாவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் பார்வைக்கும் கருத்திற்காகவும் அந்த‌ பக்கத்தை பகிர்ந்துகொள்கிறேன்.  


Thursday, February 2, 2012

பண்புடன் இணைய இதழ்

இணைய இதழ்கள் யாருக்கும் பொதுவாக பெரிய அளவில் கவர்வதில்லை. சொல்வனம், திண்ணை போன்ற சொல்லும்படியான ஒரிரண்டை தவிர மற்றயவைகள் அதற்கு தேவையான தரத்துடன் இல்லை என்பதே காரணம். 'பண்புடன்' என்ற இணைய இதழ் சற்று வித்தியாசம் காட்டி இம்மாத இதழ் வருகிறது. ஒரு பொறுப்பாசிரியரின் உழைப்பில் ஒவ்வொரு இதழும் வெளிவரும் இந்த இணைய இதழ், ஒவ்வொரு இதழும் வெவ்வேறு பாணியில் அமைவது இது தான் காரணமென்றாலும் சில சம்யங்களில் நல்ல தொகுப்பாக அமைந்துவிடுவதும் உண்டு. அந்தவகையில் இம்மாத இதழ் மா. கார்த்திகைபாண்டியனின் பொறுப்பில் சீரிய உழைப்பில் வெளிவந்துள்ளது. அதில் என் கதையான 'பஸ்ஸாண்ட்' வெளிவந்துள்ளதால் என் கவனத்தை கவர்ந்ததாக் சொல்லலாம். முழுமையாக இன்னும் படிக்கவில்லை. ஆனால் வாசகர்களுக்கு இந்த பக்கங்களை பரிந்துரைக்க தயக்கம் எதுவும் இல்லை. ஒரு குழுவாக வரும் எழுத்துக்களிலிருந்து மாறுபட்டது என்பதை அந்த பக்கங்களை பார்த்துமே புரிந்துவிடுகிறது.

இணைய இதழின் பக்கம்: www.panbudan.com

என் கதையின் பக்கம்: http://panbudan.com/story/k-j-ashokkumar