Monday, November 29, 2010

ரஜினிகாந்த் ஜோக்குகள்ஆங்கில, இந்தி மீடியாக்களில் ரஜினிகாந்த் ஜோக்குகள் மிகவும் பிரபலமானவைகள். ரோபோ படம் இந்தியில் வந்தபின் தொடர்ந்து இந்த ஜோக்குகள் வெளியாவது அதிகரித்துள்ளன. குஷ்வந்த்சிங் ஜோக் மாதிரி பின்நாளில் பிரபலமடைய கூடுமென நினைக்கிறேன். ரஜினிகாந்தை அங்கு நடிகர் கோவிந்தா ரேஞ்சுக்குதான் பார்க்கிறார்கள். ஒரு இணையதளம் தொகுத்து முக்கியமானவற்றை அளித்துள்ளது. ஆங்கிலத்திலேயே அவற்றை அளிக்கிறேன், நன்பர்கள் முடிந்தால் தமிழ்படுத்தி அனுப்பவேண்டுகிறேன்.
 1. Rajinikanth doesn’t wear a watch. He decides what time it is.
 2. Rajinikanth has already been to Mars, that’s why there are no signs of life there.
 3. Rajinikanth killed the dead sea.
 4. If you spell ‘Rajanikant’ wrong on Google it doesn’t say, “Did you mean Rajinikanth?” It simply replies, “Run while you still have the chance.”
 5. Rajinikanth can play the violin with a piano
 6. Rajnikanth once wrote a cheque, the bank bounced!
 7. Micheal Jordan to Rajini: I can spin a ball on my finger for over two hours. Can you?
  Rajni: Rascala; how do you think the earth spins!?
 8. Rajinikanth once ordered a plate of idli in McDonald’s, and got it.
 9. If Rajnikant was born 100 years earlier, British would have fought to get independence from India.
 10. When Rajnikant logs on to facebook.com, facebook updates its status message!
 11. Rajni once killed 20 men just by saying "BANG"
 12. Rajinikanth knows Victoria’s secret.
 13. Rajinikanth can divide by zero.
 14. Rajinikanth has counted to infinity, twice.
 15. When Rajinikanth gives you the finger, he's telling you how many seconds you have left to live.
இது எப்படி இருக்கு?

_o0o_

Thursday, November 25, 2010

நகரத்தின் மறுபக்கம்
சுந்தர்சி நடித்த நகரம் மறுபக்கம் என்ற திரைபடத்தை பற்றி இணையத்திலும் போதாததற்கு முகநூலிலும் அன்பர்கள் சிலாகித்து எழுதியதைக்கண்டு அதைப் பற்றிய விமர்சனங்களை இணையத்தில் தேடி படித்தது நான் செய்த தவறாக இப்போது நினைக்கிறேன். முதலில் சுந்தர்சி படங்கள் அது நடிப்பாக இருந்தாலும் சரி, இயக்கமாக இருந்தாலும் சரி, கொஞ்சம் வருடங்களுக்கு முன் வெளியான தமிழ்படத்தின் அல்லது வேறு மொழிப்படத்தின் அப்பட்டமான தழுவழோ அல்லது உரிமை பெறாத ரீமேக்காகவோ இருக்கும் என்பதற்கு மாற்றுகருத்து இருக்க முடியாது. அதை மறந்து தேடியதை தவற்றின் முக்கிய அங்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
எல்லா விமர்சன எழுத்திலும் இணையஎழுத்து அன்பர்களின் எழுத்திலும் பல்லவியை மாற்றாமல் எழுதியிருந்தது சற்று ஆச்சரியம் தான். கதை ஆரம்பத்தை கூறக்கேட்டதுமே இது அல்பசினோ நடித்த‌ The Carlito’s way எனும் படத்தின் கதையல்லவா என எண்ணத்தோன்றியது. மேலும் தேடியபோது ஆமாம் இது அந்த படத்தின் கதைதான் என்று தெரிந்தது. அதில் தொழிலை விட்டு விலகிவிட நினைக்கும் கடத்தல்காரன், இதில் தாதா, அதில் காதாநாயகி கிளப்களில் ஆடும் டான்சர், இதில் சினிமாவில் குரூப் டான்சர், அப்புறம் வடிவேலுவின் காமடி ட்ராக்கை இணைத்திருப்பது, இவைகள் தான் வித்தியாசம். ஆரம்பத்தில் ரயில்நிலையத்தில் கூடஇருந்தவனே கத்தியால் குத்தப்பட்டு, நிலைதடுமாறி பழைய நினைவுகளை அசைப்போட்டபடி மருத்துவமனையில் இறக்கும் அதே கதைதான் இங்கும்.

அல்பசினோ, கமலஹாசனுக்கு குரு மாதிரி அவரை நினைத்து தமிழில் பலபடங்களை செய்திருக்கிறார். அல்பசினோவின் வசன உச்சரிப்பும், நடையும் சினிமா உலகில் மிகவும் பிரபலமானவை. அவற்றை, மொக்கையாக வரும் சுந்தர்சி எப்படி செய்திருப்பார் என்பதை நினைக்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஆங்கில, சீன சண்டைப் படங்களை பார்க்காத/பார்த்திராத ஒரு ரசிகர் கூட்டமொன்று விஜயகாந்த் படத்தின் சண்டைக் காட்சிகளை அற்புதம் என்று கூறுவது போலத்தான் நகரம் படத்தை அற்புதம், அருமை என்று சிலாகிப்பது. நடுநடுவே அய்யய்யோகளும் அம்மம்மாக்களும் வேறு. தமிழ் சினிமாவில் நல்ல ஒரிஜினல் படங்கள் வருவது எப்போதாவதுதான் நிகழ்கின்றன, மற்ற நேரங்களில் இந்தமாதிரி 'சுட்ட' படங்கள்தான் வரும், அதையும் சிலாகித்து குதிப்பதை 'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' என்பது மாதிரியானது என்று தெரிந்ததுதானே?

_o0o_

Friday, November 19, 2010

காதல் மன்னன் கவிதைகள்


வரவிருக்கும மன்மதன் அம்பு படத்திற்கு கமல் எழுதிய பாடல் ஒன்று இணையத்தில் கிடைத்தது. சினிமாவில் மட்டுமல்ல காதல் மன்னன், நிஜத்திலும் தான் என்று என்னத்தோன்றும் வரிகள். கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கைகோர்த்தாளா
?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்

காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா

உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்

கூட்டல் ஒன்றே குறியென்றானபின்

கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை

ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றை இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.


_o0o_

Tuesday, November 2, 2010

தாகம் ‍- கு.சின்னப்பபாரதிவாழ்க்கை தாகம், சுதந்திர தாகம் என்று பொருள்படும் இந்த தாகம் எனும் நாவல் இரு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி மாரப்பன் எனும் விவசாயின் வாழ்க்கையையும் இரண்டாம் பகுதி தாழ்த்தப்பட்ட அடிமைகளின் வாழ்க்கையையும், மார்க்ஸிய முறையில் எழுச்சி பெறுவதையும் கூறுகிறது. இரண்டாம் பகுதியை படிக்க ஆரம்பித்ததும் 290 பக்கங்கள் கொண்ட முதல் பகுதி ஏன் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது எனற குழப்பம் ஏற்படுகிறது.அத்துடன் மாரப்பனின் இத்தனைநீள கதை தேவையா என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
அதிக விவரங்களும், வர்ணணைகளையும் கொண்ட ஆரம்பபகுதிகளை படிக்கும்போது சலிப்பும்,அயர்ச்சியும் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் அதன் பின்னால் நாம் கண்டிராத வாழ்க்கை முறையையும், புதிய அனுபவங்களையையும் பெறுகிறோம் எனும்போது புத்தகத்தை கீழே வைக்க மனம் வருவதில்லை.
தஞ்சைபகுதி விவசாயியைவிட ஒருபங்கு கடின உழைப்பை செலுத்தவேண்டிய நிலையில் கொங்கும‌ண்டல விவசாயியான மாரப்பனின் வாழ்க்கைமுறை துயரம் நிறைந்தது. அதனுடே அவன் வாழ்க்கை செல்கிறது. மனைவி, குழந்தைகள் என்று இருந்தாலும் நிலத்தினுடன் அவன் கொள்ளும் உறவு அலாதியானது. மாரக்காள், கோமாளிக் கிழவர் பாத்திரங்கள் மிக அழகாகச் உருவாக்கப்பட்டுள்ளன. கோமாளிக்கிழவர் பேசு பேச்சுக்கள் ஒரு வயோதிகரிடம் கதை கேட்ட நிறைவை அளிப்பவை.
களப்பணி செய்து நாவல் எழுதும் வழக்கம் கொண்ட சின்னப்பபாரதியின் மற்றய கதைகள் போல இதுவும் அமைதிருக்கிறது. மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன் போன்றவர்கள் எழுதும் பாணியிலான நாவல்தான் என்றாலும், அதிலிருந்து வேறுபடும் விசயஙகளும் உள்ளன. கிராமத்தில் கருகலைப்பிற்கு எருக்கஞ் செடியை உபயோகித்தல், அடிமைகளின் திருமண உறவுகள், என்று பல அத்தனையும் புதிய நாம் கேட்டிராத விசயங்கள். இதற்க்காக ஆசியரரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
-o0o-