Friday, September 17, 2010

பசங்க


பசங்க படத்திற்கு விருதுகள் கிடைத்திருப்பது சந்தோஷமளிக்கிறது. பசங்க சிறுவர்களுக்கான படமில்லை, ஆனால் சிறுவர்களைப் பற்றிய படமெனத் தோன்றுகிறது. சிறுவர்களைப் பற்றிய படமென்பதனால் அதில் விரசம் குறைந்து கதையில் மீதான கவனத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறது. வெளிவந்தபோதே இதற்கெல்லாம் எங்கே மக்களிடம் வரவேற்பு கிடைக்கபோகிறது எனத் தோன்றியது. மக்களிடம் நல்ல வரவேற்பும், இப்போது விருதும் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி எற்படுத்துகிறது.

மிக எளிய கதை, அதை நகர்த்தி சென்ற விதமும், காட்சிகளில் புதுமையும் படத்தை வேறு இடத்தில் வைத்து பார்க்க வைத்துவிட்டது. ஒரு பையன் ஒரு பெண்ணிடம் கொள்ளும் காதலை செல்போனின் ரிங்டோன் முலமாக பார்வையாளர்களை புரியவைக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் மூலமாக இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. இப்படத்தின் மற்றோரு சிறப்பு வசனம். 'பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு ஒரு மனசு வேணும், அது உங்ககிட்ட இருக்கு' படம் பார்த்து இத்தனை நாளாயினும் ஞாபகமிருக்கும் வசனமிது.

சிறந்த வசனகர்த்தா விருதும், சிறந்த குழந்தை நட்சத்திர விருதும் இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. பசங்க டீமிற்கு வாழ்த்துக்கள்.

-o0o-