பசங்க படத்திற்கு விருதுகள் கிடைத்திருப்பது சந்தோஷமளிக்கிறது. பசங்க சிறுவர்களுக்கான படமில்லை, ஆனால் சிறுவர்களைப் பற்றிய படமெனத் தோன்றுகிறது. சிறுவர்களைப் பற்றிய படமென்பதனால் அதில் விரசம் குறைந்து கதையில் மீதான கவனத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறது. வெளிவந்தபோதே இதற்கெல்லாம் எங்கே மக்களிடம் வரவேற்பு கிடைக்கபோகிறது எனத் தோன்றியது. மக்களிடம் நல்ல வரவேற்பும், இப்போது விருதும் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி எற்படுத்துகிறது.
மிக எளிய கதை, அதை நகர்த்தி சென்ற விதமும், காட்சிகளில் புதுமையும் படத்தை வேறு இடத்தில் வைத்து பார்க்க வைத்துவிட்டது. ஒரு பையன் ஒரு பெண்ணிடம் கொள்ளும் காதலை செல்போனின் ரிங்டோன் முலமாக பார்வையாளர்களை புரியவைக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் மூலமாக இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. இப்படத்தின் மற்றோரு சிறப்பு வசனம். 'பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு ஒரு மனசு வேணும், அது உங்ககிட்ட இருக்கு' படம் பார்த்து இத்தனை நாளாயினும் ஞாபகமிருக்கும் வசனமிது.
சிறந்த வசனகர்த்தா விருதும், சிறந்த குழந்தை நட்சத்திர விருதும் இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. பசங்க டீமிற்கு வாழ்த்துக்கள்.
-o0o-
2 comments:
உண்மைதாங்க கட்டாயம் கிடைக்க வேண்டிய விருது.
உங்களுடைய வலை பூவை தற்போதுதான் எதார்த்தமாக வாசிக்கிறேன்.
புத்தகத்தின் மீதுதான் உங்களுக்கு எத்தனை தீராத காதல்.
உங்களின் நிறைய வரிகள் எனக்கு மிகவும் நெருக்கமா அமைஞ்சிருக்கு.
இப்படத்தை டிவியில்தான் பார்த்தேன். அப்போதே தெரிந்தது, இது விருதுக்கு தகுதியான படமென்று.
சிறுவயதிலிருந்து புத்தங்களின் மீது தீராத காதல், திங்க கொடுக்கும் காசுகளை சேர்த்து புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அதற்காக என் அப்பாவிடன் அடியும் வாங்கியிருக்கிறேன்.
உங்கள் தொடர் கமண்ட்மலைகளுக்கு நன்றிகள்.
Post a Comment