Showing posts with label வாசகசாலை. Show all posts
Showing posts with label வாசகசாலை. Show all posts

Thursday, October 11, 2018

நூற்றாண்டுகளை கடக்கும் சிறுகதை


1
பெரிய விஷயங்களை பேசும் இலக்கியங்கள் இருந்த காலத்தில் சின்ன விஷயங்களின் கலையை சொல்ல வந்த வடிவம் சிறுகதை. முதலில் சிறுகதைகள் கேளிக்கைக்காகதான் உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் கேளிக்கைகள் மாறி தீவிரத்தன்மை கூடி இன்று நாம் படிக்கும் சிறுகதைகளாக வளர்ச்சியடைந்தன. 

Monday, September 10, 2018

கறிச்சோறு: நிறைவேறா வேண்டுதல்கள்


கடந்த ஐம்பதாண்டுகளில் தஞ்சை வட்டாரத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு சாட்சியாக விளங்குபவர் சி.எம் முத்து என்று ந.முருகேசபாண்டியன் ஒரு கட்டுரையில் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார். கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது உண்மை என்றே படுகிறது. தி.ஜா. கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், குபாரா போன்றவர்கள் இசை, நடனம், போன்ற கலைகளின் உயர்குடிகளின் ரசனைக்கு ஏற்றவகையில் நாவல்கள் படைக்கப்பட்டபோது வயல்களில் மனித வாழ்க்கை, குடும்ப உறவுகளில் சிக்கல், சாதிய மனநிலை ஏற்றத்தாழ்வுகள், மிதமிஞ்சிய அன்பு, மிதமிஞ்சிய கோபதாபங்கள் என்று வாழ்வின் மிக அடித்தட்டில் இருக்கும் மக்களின் சுகதுக்கங்களை ரசனைகளின் மேல் பெரிய ஈடுபாடுமில்லாத வாழ்க்கையை பற்றி பேசுகிறார். எந்த பெரிய லட்சியங்கள், கொள்கைகள் இல்லாத மனிதர்கள் நேரடியாக மற்ற மனிதர்களை சார்ந்து வாழும் வாழ்வை, தன் இயல்பிற்கும் தன் சிந்தனைக்கும் மீறாத வாழ்வு கொடுக்கும் கரிசனத்தை எந்த கேள்விகளுமற்று எற்றுக்கொள்ளும் கதாபாத்திரங்களை படைப்பதில் கடந்த 50 ஆண்டுகளாக சலிப்பின்றி இயங்கிக் கொண்டிருக்கிறார் சி.எம்.முத்து.

Monday, September 3, 2018

நெடுங்குருதி: வெக்கை நதியின் துயரம்



சொற்களற்ற தொடர்பு (nonverbal communication) என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை தொடர்புறுத்தல் முறை நம் உடல்வழியாக எப்போது வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம், அதை உடல்மொழிம் என்று சொல்லலாம். ஒருவரது நேரடி மற்றும் மறைமுக சைகைகளை அதன்மூலம் அவருக்கு தெரியாமல் நாம் படித்துவிடமுடியும். அவர் நமக்கு உணர்த்துவதை புரிந்துக் கொள்ளவும் அவரது பொதுஇயல்புகளைப் புரிந்துக் கொள்ளவும் முடியும். அந்த சொற்களற்ற தொடர்ப்பு அல்லது உடல்மொழியை நம் இலக்கியத்திலும் காணமுடியும். குறியீடுகளாக, படிமங்களாக இலக்கியத்தில் சொல்லப்படுபவைகளை மறைமுகமாக இந்த தன்மையைதான் உணர்த்துகின்றன என்று சொல்லலாம்.

Tuesday, June 12, 2018

தஞ்சை வாசகசாலை இரண்டாம் நிகழ்வு


இலக்கிய விழா மனநிலை வருவது என்பது ஒருவகை கொண்டாட்ட உணர்ச்சிதான். பார்வையாளனாக இருக்கும்போது பெரிய கவலையற்று, பிரச்சனைகளை மறந்த சந்தோஷ நிலைதான் இருக்கும். அது சிறு தூறலில் நனையும் சுகமும் கூட. விழாவின் பங்கேற்பாளனாக/பேச்சாளனாக இருக்கும்போது ஜன்னல்கள் மூடப்பட்ட இறுக்கமான அறையில் அடைப்பட்ட உணர்வே மேலோங்குகிறது. பெருமழையில் நனைந்து ஒடுங்கும் மனநிலை. இந்த ஆண்டு எனக்கு மூன்றாவது நிகழ்வு என நினைக்கிறேன். பேச்சு தயாரிப்பிலேயே மனம் தோய்ந்து மற்றவைகளை யோசிக்க திராணியில்லாமல் கிடந்தன விழா நிகழ்வின் முந்தைய நாட்கள். விழா தொடங்க நாளிலிருந்து நடப்பது நடக்கட்டும் என்று தோன்ற ஆரம்பித்துவிடும்.


Monday, June 11, 2018

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் வாசிப்பனுபவம்


தமிழ் இலக்கிய உலகில் தன் படைப்புகளுக்காக அதிகம் பேசப்பட்டவரும், தன் கட்டுரைகளுக்காக அதிகம் விமர்சிக்கப்படவரும், தன் சார்பு கட்சி, அரசியலில் முயற்சிகளுக்கா அதிகம் கேலிக்குள்ளானவரும், தன் தனிப்பட்ட ஆசாபாங்களை பொதுவில் வெளியிட்டதினால் அதிகம் வசைபாடப்பட்டவரும் என ஒருவர் உண்டென்றால் அது ஜெயகாந்தனாக தான் இருக்கும்.ஆனால் அவரது நாவல்கள் வெகுஜன உலகில் கொண்டாடப்பட்ட அளவில் நவீன இலக்கிய உலகில் கொண்டாடப்படவில்லை. உரத்து ஒலிக்கும் குரல் அவரது படைப்பில் ஒலிக்கிறது என்கிற காரணம் முன்னிறுத்தப்பட்டு விலக்கி வைக்கப்பட்டார். உண்மையில் அவரது கதைகள் உரத்து ஒலித்ததா? உரத்து ஒலித்த காரணத்தால் அவரது படைப்புகள் முற்றிலும் நிராகரிக்கபடவேண்டுமா? நவீன தமிழ் உலகை அவரது படைப்புகள் ஒரு சதவிகிதம்கூட முன்னோக்கி கொண்டு செல்லவில்லையா? என்கிற பல்வேறு கேள்விகள் இன்று நாம் கேட்டுக் கொள்ளவேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

Sunday, January 1, 2017

வாசகசாலை 2016 இலக்கிய விருது



என் கதைகளை தொகுப்பாக வெளியீட்டபோது சில கதைகளை எடுத்துவிட்டு மேலும் நல்லக் கதைகளை எழுதியபின் அவைகளையும் இணைத்து வெளியிட்டிருக்கலாம் என்று நண்பர்களால் சொல்லப்பட்டது. நானும் சற்று குழப்பமாக இருந்தேன். வாசகசாலையின் கார்த்திக் போன் செய்தபோது தவறுதலாக சொல்லப்பட்டிருக்கலாம் என்றுகூட நினைத்தேன். ஆம் வாசகசாலை அமைப்பின் சிறந்த சிறுகதை தொகுப்பாக என் சாமத்தில் முனகும் கதவு தேர்வு செய்யப்பட்டிருந்தது. என் தொகுப்பின் மீது நம்பிக்கை கொள்ள முடிந்தது. ஒரேபாணி கதைகளாக இல்லாமல் சில சோதனை முயற்சிகளும் புதிய பாணி கதைகளும் கொண்ட இந்த தொகுப்பு நான் விரும்பும்படியே அமைந்திருக்கிறது.