தமிழ் இலக்கிய உலகில் தன் படைப்புகளுக்காக
அதிகம் பேசப்பட்டவரும், தன் கட்டுரைகளுக்காக அதிகம் விமர்சிக்கப்படவரும், தன் சார்பு
கட்சி, அரசியலில் முயற்சிகளுக்கா அதிகம் கேலிக்குள்ளானவரும், தன் தனிப்பட்ட ஆசாபாங்களை
பொதுவில் வெளியிட்டதினால் அதிகம் வசைபாடப்பட்டவரும் என ஒருவர் உண்டென்றால் அது ஜெயகாந்தனாக
தான் இருக்கும்.ஆனால் அவரது நாவல்கள் வெகுஜன உலகில்
கொண்டாடப்பட்ட அளவில் நவீன இலக்கிய உலகில் கொண்டாடப்படவில்லை. உரத்து ஒலிக்கும் குரல்
அவரது படைப்பில் ஒலிக்கிறது என்கிற காரணம் முன்னிறுத்தப்பட்டு விலக்கி வைக்கப்பட்டார். உண்மையில் அவரது கதைகள் உரத்து
ஒலித்ததா? உரத்து ஒலித்த காரணத்தால் அவரது படைப்புகள் முற்றிலும் நிராகரிக்கபடவேண்டுமா?
நவீன தமிழ் உலகை அவரது படைப்புகள் ஒரு சதவிகிதம்கூட முன்னோக்கி கொண்டு செல்லவில்லையா?
என்கிற பல்வேறு கேள்விகள் இன்று நாம் கேட்டுக் கொள்ளவேண்டிய இடத்தில் இருக்கிறோம்.
Showing posts with label ஜெயகாந்தன். Show all posts
Showing posts with label ஜெயகாந்தன். Show all posts
Monday, June 11, 2018
Friday, April 3, 2015
சுஜாதா எழுதுகிறார்
வேலையில் சேர்ந்தபோது நாங்கள் அப்ரன்டிசுகள் என்பதால் நிறைய
பேச நேரமிருந்தது. எல்லாம் அன்றைய சினிமா, தினசரி காதல் விவகாரங்கள்தான்.
சிலர் மட்டும் வாசிப்புகளைப் பற்றி ஆர்வம் கொள்வார்கள். அதில் ஒரு பெண்ணிடம் பேசும்போது
சுஜாதாவை எனக்கு பிடிப்பதில்லை எல்லாம் தெரிந்த மாதிரி எழுதுகிறார் என்றாள்.
நான் சிறுவயதிலிருந்து படிக்க ஆரம்பித்திருந்தேன். பள்ளி
நாட்களிலிலேயே சுஜாதாவை படித்திருந்தேன். கிரைம்/குற்ற நாவல்களை படித்து சலித்திருந்த சமயத்தில் ஏறக்குறைய
சொர்க்கம் என்ற நாவல் குமுதத்தில் வெளிவந்தது பைண்ட் செய்து வைத்திருந்ததை படித்ததில் சட்டென உலகம் வேறுபக்கம் சுழல்வதுபோல்
உணர்ந்தேன். அதற்குமுன் சுஜாதாவின் கட்டுரைகள், சில மர்மநாவல்களை மாதநாவல் வரிசையில் படித்திருந்தேன். மிகவும்
பிடித்துதான் இருந்தது. இப்படிகூட
கதை எழுதமுடியும் அப்படியெல்லாம் கதைகள் வருகின்ற என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்த
வயதில் அது ஆச்சரியம்தான் சந்தேகமில்லை. ஆனால் அதில் அவர் கையாளும் வார்த்தை பிரயோகங்களும்
நேரடித் தன்மைகளும் இன்றும்
படிக்க அலாதியானதுதான்.
Thursday, April 2, 2015
திரைக் கதாசிரியர்கள்
வாலிப வாலி என்றோரு நிகழ்ச்சி டிடியில் ஒளிபரப்பாகியது.
மறுஒளிபரப்பும் அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கும். அதில் சினிமாப் பாடல்கள் இலக்கியமல்ல
என்று பேசப்படுவதை பற்றி கேட்டதும் சற்று மிகையாகவே கோபப்பட்டார். இல்லை என்று சொல்பவர்
முக்கியமானவராக இருக்கவேண்டும் அவர் அவர்துறையில் சாதித்திருக்க வேண்டும் என்றெல்லாம்
கூறினார். ஒரு வகையில் ஞாயமானதும்கூட என்று தோன்றியது. அதே பகுதியில் சினிமாவில் கதாசிரியர்கள்/நாவலாசிரியர்கள்
வெற்றி பெறாததைப் பற்றி கேள்வி கேட்டதும் கதாசிரியர்கள்/நாவலாசிரியர்கள் சினிமாவிற்கு
தகுந்த தேவையை அவர்களால் அளிக்க முடியவில்லை என்று கூறினார். நாவலை நன்றாக எழுதுபவராக
இருக்கலாம் ஆனால் சினிமாவிற்கு 5 நிமிடத்திற்கு சொல்லவேண்டியதை
அவர்கள் சொல்லிவிடவேண்டும் என்று கூறினார்.
சினிமா என்பது ஒரு பெரிய மீடியாவாக தமிழில் உருவெடுத்துவிட்டது.
அதன் வேகம் அதிலிருக்கும் உழைப்பு எல்லாமெ அபாரமானது. கூடவே அபாயகரமானதாகவும் இருக்கிறது.
பெரிய அளவில் வட்டிக்கு பணம் பெற்று போட்ட முதலை இரண்டாக எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்
அதன் தயாரிப்பாளர்கள். அவர்களின் அழுத்தம் இயக்குனர்கள், நடிகர்கள் மீதும் செல்கிறது. சொல்லப்போனால்
இந்த மூவருமே பெரும் மனஉளைச்சலில்தான் இருக்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)
