Showing posts with label பேருந்து. Show all posts
Showing posts with label பேருந்து. Show all posts

Wednesday, October 6, 2021

சுஜாதாவின் சொல்லுக்காக புனைபெயர் வைத்துக் கொண்டேன்: எழுத்தாளர் ஹரணியின் பேட்டி

க. அன்பழகன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் ஹரணி மிக இளம்வயதிலிருந்தே எழுத தொடங்கிவிட்டார். தஞ்சாவூர் ஹரணி என்று சில நேரங்களில் எழுதும் இவர், ஹரிணி என்கிற தன் நண்பரின் குழந்தையின் வைணவ பெயரை சைவ பெயராக மாற்றி ஹரணி என வைத்துக் கொண்டார். அன்பழகன் என்பது கூட அவர் அப்பா, அப்போதைய தலைவர் க.அன்பழகன் போல சிறந்த அறிஞராக வேண்டி வைத்தது என்று கூறுவார். அவர் அப்பா அமைத்து கொடுத்த சிறு நூலகத்தின் உந்துதலால் அப்பாவின் விருப்பம்போலவே படித்து கல்லூரி ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் ஆனவர்.

கல்லூரி ஆசிரியர் பணிக்கு தினமும் தஞ்சையிலிருந்து சிதம்பரம் வரை காலையும் மாலையும் பேருந்தில் பல ஆண்டுகளாக பயணம் செய்திருக்கிறார். பிறகு ரயில் சேவை பரவலானதும் ரயிலில் அப்பயணத்தை தொடர்கிறார். அப்பேருந்து பயண அனுபவத்தை 'பேருந்து' எனும் நாவலாக எழுத அது அவரை பிரபலப்படுத்தியது. நீண்ட பேருந்து வாழ்க்கையின் அனுபவத்தை சொல்லும் நாவல், ஒரு பெரிய சமூக வளர்ச்சி வீழ்ச்சி மாற்றத்தை அந்நாவல் முன் நிறுத்துகிறது.

கவிதை, சிறுகதை, நாவல் என்று பல வகைமையில் எழுதியிருக்கும் அவர், ‘அப்பிராணி’ ‘சாலையைக் கடக்கும் நத்தைகள்’ போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். உயிர்க்குடில் (1995), ஒவ்வொரு மழை நாளிலும் (2000), மறுபடியும் நதி வரும் (2002), வலை (2004), காலம் நின்றவர்கள் (2007), புரண்டுபடுக்கும் வாழ்க்கை (2011), செல்லாத நோட்டு (2012), அப்பா (2020) போன்ற சிறுகதை தொகுப்புகளை எழுதியிருக்கிறார். காந்தியும் குமரேசனும் (2015), மிட்டாய் வண்டி சிறுவர் தொகுப்பு (2019) போன்ற சிறார் கதைகளையும் எழுதியிருக்கிறார்.

தஞ்சை ப்ரகாஷுடன் நெருங்கிய நட்பு கொண்டவர், அவருடன் இருந்த மற்ற இலக்கிய நண்பர்களுடனும் நெருக்கமான நட்பை பேணிவருபவர். தஞ்சாவூர் கரந்தையில் வசிக்கும் அவருடனான ஒரு சிறு உரையாடல்.


Tuesday, March 10, 2015

நிறுத்தம்

மாட்டுவண்டி, குதிரைவண்டி காலங்கள் எல்லாம் போய் பஸ்கள் வந்து அதுவும் போய் ஆட்டோ, டாக்ஸி என்று வந்துவிட்டது. ஆனால் மற்ற நான்கைவிட பேருந்துகளுக்கு பொதுவெளியில் நிறுத்துவதற்கு என்று சில இடங்கள் தேவைப்படுகின்றன. அங்கு நின்று மக்களை ஏறவும் இறங்கவும் வேண்டியிருக்கிறது. அதன் காரணமாகவே அவற்றிற்கான பெயர்களும் தேவைப்படுகின்றன. ஊர்களில் ரயிலடி ஸ்டாப், பூங்கா ஸ்டாப், தேரடி என்ற பெயர்கள் பொதுவானவையாக இருக்கும். அதைத் தவிர சினிமா தியேட்டர்களின் பெயர்களிலும் நிறுத்தங்கள் இருக்கும். எங்கள் ஊர் நிறுத்தங்களுக்கு டைமண்ட், செல்வம் என்று பெயர்கள் உண்டு.
கொஞ்சம் தேடிக் கண்டுகொண்டால் சுவாரஸ்யமான பெயர்களைக் கொண்ட நிறுத்தங்களும் அதற்காக காரணங்களில் இருக்கும் விநோதங்களையும் காணமுடியும். எங்களூருக்கு பக்கத்தில் புளியமர ஸ்டாப் என்று ஒரு நிறுத்தம் உண்டு ஆனால் பக்கத்தில் புளியமரம் எதுவும் இல்லை.
அப்பாவின் வேலைகாரணமாகவும் என் வேலைகாரணமாகவும் பலஊர்களுக்கு செல்ல சேர்ந்துள்ளது அதைதவிர சில ஊர்களுக்கு நண்பர்கள், உறவினர்களுக்காக செல்ல்வேண்டியிருந்தது. இருந்திருந்தாலும் பல நிறுத்தங்களின் பெயர்கள் நினைவில் இல்லை ஆனால் நினைவில் இருக்கும் பெயர்கள் மறக்க முடிந்ததில்லை.

Friday, January 16, 2015

சென்னை மீட்டர் ஆட்டோ



சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் காலை எழுந்ததும் முதல் சவாரியில் அன்றைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து சென்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ஆட்டோவையே எடுக்கிறார்கள். ஆகவே நாம் கூலி, பணம், அதிகம், குறைப்பு என்று எதைப்பேசினாலும் அவர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணுகிறது. சாவுகிராக்கி என்று வசையோடுதான் அப்புறம் பேச்சை ஆரம்பிக்கிறார்கள்.
பொதுவாக ஆட்டோகாரர்கள் மிகுந்த கஷ்டத்துடன் வேலைசெய்வதாகவும், பயணிகளான நமக்காக சேவை மனப்பாண்மையுடன் செயல்படுவதாகவும் ஒரு எண்ணம் சிலரிடையே உண்டு. இவ்வளவு கடினமான வேலையை அவர்கள் செய்ய‌ பயணிகளை துரத்திவந்து பிடிப்பது ஏன் என்றுதான் புரிவதில்லை. அவர்களின் அன்றைய நாளின் மிகப்பெரிய காரியமே யாரை எப்படி ஏமாற்றலாம் என்பதுதான். ஆட்டோ ஓட்டுவதை நேர்மையான ஒரு செயலாக ஆட்டோ ஓட்டுநரே நினைப்பதில்லை. எப்படி அரசாங்க வேலையில் லஞ்சம் கூத்தாடுகிறதோ அதுபோல. ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறேன் எனபதை நேர்மையில்லா வேலை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். சென்னையில் மிக குறைவான நபர்கள் மட்டுமே ஆட்டோவை நேர்மையாக பணம் வாங்குபவர்கள்.