வாசிப்பு தனிநபர்களின் அடையாளம்
என்று உணர கொஞ்சகாலம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மிககுறைவான சதவிகிதத்தினர் என்றாலும்
இன்று வாசிப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். புத்தகத்தை பரிசளிப்பது இன்று ஒவ்வொருவரிடையே
தொடங்கியிருக்கிறது. புத்தகம் குறித்து பேசும் பேச்சரங்கங்கள், கூடல்கள் எல்லா ஊர்களிலும்
ஆரம்பமாகியிருக்கின்றன. வயதானவர்கள் பழந்தமிழ், பக்தி இலக்கியங்களை கூடி பேசுவது எல்லா
ஊர்களிலும் இருப்பதைபோல நவீன தமிழ் இலக்கியத்திற்கும் கவிதை, சிறுகதை, நாவல்கள் குறித்து
பேசுபவர்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது முகநூல், வாட்ஸப் மூலமாக அறியமுடிகிறது. அதேபோல
இந்திய/தமிழக வரலாறு குறித்த பார்வைகள் விரிவடைந்திருக்கின்றன. கோயில் கல்வெட்டுகள்,
குகைப்பயணங்கள் போன்றவைகளை எல்லா தரப்பினருமே முன்னெடுத்து செல்கிறார்கள்.
Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts
Saturday, January 14, 2017
Tuesday, December 8, 2015
நிஜ நிவாரணம்
சில வருடங்களுக்கு முன்பு ஒரு கோயிலுக்கு அன்னதானத்திற்காக சென்றிருந்தோம். புளிசாதம், தயிர்சாதம், போன்ற அயிட்டங்களை எடுத்துக்கொண்டு ஒரு குடும்ப வேண்டுதலின் பொருட்டு அடையாறை தாண்டி இருந்த ஐயப்பன் கோயிலில் இவைகளை அங்குவரும் பக்தர்களுக்கு அளிக்க சென்றோம். உண்மையை சொல்வதென்றால் அப்படி செல்வது அதுதான் முதல் தடவை. நானும் என்னுடன் வந்த ஆண் பெண்களாக இருந்த உறுப்பினர்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது. கோயில் நிர்வாகத்திடம் பேசி ஒரு இடத்தில் அமர்ந்து வைத்திருந்த வாளிகளை திறந்து சிரித்த முகத்துடன் மனிதர்களை நோக்கினால், சட்டென ஒரு மனித வட்டம் எங்களைச் சுற்றி இருந்தது. ஒருவர் தட்டைக் கொடுக்க அடுத்தடுத்து நபர்கள் சாதங்களை வைத்து ஊறுகாய் ஒருவர் வைக்க, கூட்டு ஒருவர் வைக்க என திட்டம். ப்ளாஸ்டிக் தட்டுகள் எங்களிடமிருந்து பிடுங்கப்பட்டன. இருங்கள் தருகிறோம் என்பதை யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை. கடகடவென தட்டு உடைய கையை நீட்ட வைங்க வைங்க என்றார்கள். ஒரே களேபரமாக இருந்தது. ஏங்க இப்படி அவசரபடுறீங்க என்றதற்கு, குண்டான ஒரு பெண்மணி தரமாட்டீங்களா, தருவீங்களா மாட்டீங்களாங்க, எனக்கு கொடுங்கங்க என்றார். நிஜமாகவே அந்த நேரம் எரிச்சலாக இருந்தது. எங்களை குனிந்து எடுக்ககூட மக்கள் விடவில்லை. அத்தனை அவசரம். அங்கிருந்த மக்களுக்கு தேவையான உணவுகள் அங்கு இருந்தன. ஆனால் அவர்கள் செய்த அவசரத்தில் பாதியாவது வீணாயிருக்கும். சாப்பிட்டுவிட்டு அந்த தட்டுகளை கண்ட இடத்தில் எறிந்துவிட்டு சென்றார்கள். அவர்கள் படித்தவர்கள்தான். ஆனால் சாதாரண எளிய மக்கள். அவர்கள் நினைத்திருந்தால் 15 நிமிடங்களில் எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படி செய்திருக்க முடியும்.
Thursday, December 3, 2015
வெள்ளமும் வெறுப்பும்
திருவல்லிக்கேணியில் இருந்த காலத்தில் ஒருமுறை பெரிய மழைவந்தது.
பேச்சலர்களாக சில நாட்கள் சரியான உணவு கிடைக்காமல் அழைந்திருக்கிறோம். ஒரு முறை பெல்ஸ்
ரோடு திருப்பத்தில் வரும்போது மழை பிடித்துவிட்டது. மூடிய கடையின் ஓரத்தில் ஒதுங்கிய பலரில்
நானும் ஒருவன். அங்கு ஏற்கனவே சிலர் இருந்தனர். ஒரு பக்கத்தில் ஒரு கல்லின் மேல் தன்
10 மாத இருக்கும் குழந்தையை ஒரு
சுருட்டியதுணியில் வைத்தபடி அமர்ந்திருந்தார். பார்த்ததும் லேசாக மனது பதறியது. இந்த
அடைமழையில் எப்படி நனையாமல் போகபோகிறார் என்று. அவர் ரொம்ப நேரம் அங்கு இருப்பதாக தோன்றியது.
அவரின் உடை ஸ்டைலில் அங்கு பக்கதில் இருக்கும் சேரியில் இருக்கும் மனிதர் என தெரிந்தது.
கசங்கிய லுங்கியும் சட்டையும் அணிந்து கலைந்த தலையுமாக இருந்தார். அவரின் மேலேயும் தூங்கும் குழந்தையின்
மேலேயும் இருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை.
Wednesday, April 29, 2015
சென்னை vs. பெங்களூர்
பெங்களூரு நகரம் முன்பு மதராஸ் மாகாணத்துடன் இருந்தது. அப்போது
இந்தியாவில் நான்கு பெரிய நகரங்கள் மட்டும்தான் இருந்தன, மும்பை, தில்லி, கல்கத்தா, சென்னை.
மொழிவாரி மாநிலங்களாக பிரிந்தபின்னும் இந்த நான்கு நகரங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த
பெங்களுர், அகமதாபாத், ஹைதராபாத் போன்ற நகரங்கள் பெரியஅளவில்
வளர்ச்சி பெற்றோ அல்லது மக்கள் கூடும் இடமாக உடனே மாறிவிடவில்லை. கொஞ்சம்கொஞ்சமாக இந்த மூன்று
நகரங்களும் தங்களுக்கேயுரிய தனித்தன்மையுடன் வளர்ச்சிபெற்று அந்ததந்த மாநிலத்தில் இருக்கும்
தொழில்களையும் வளர்ச்சி பெறச் செய்தன.
முன்னாலிருந்தே இருக்கும்
பெரிய நகரங்களான மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை நகரங்களும் வளர்ச்சி பெற்று
மக்கள் தொகையில், தொழில்வளர்ச்சியில், பிடிபி உயர்வில் என்று எல்லாவகையிலும் வளர்ச்சிபெற்று வந்தன.
ஆனால் இன்றைய தேதியில் பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், புனே போன்ற நகரங்களின் வளர்ச்சி விகிதம் சென்னையைவிட அதிகம். முதல்
மூன்று நகரங்கள் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்தாலும், சவலைப்
பிள்ளை போல் சென்னை அப்படி வளர்ச்சியடையவில்லை. அதற்கு நம் அரசியல் வாதிகள்தான் காரணம்
என நினைக்கிறேன்.
Friday, January 16, 2015
சென்னை மீட்டர் ஆட்டோ
சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் காலை எழுந்ததும் முதல் சவாரியில்
அன்றைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து சென்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ஆட்டோவையே
எடுக்கிறார்கள். ஆகவே நாம்
கூலி, பணம், அதிகம், குறைப்பு என்று எதைப்பேசினாலும் அவர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணுகிறது. சாவுகிராக்கி என்று வசையோடுதான் அப்புறம்
பேச்சை
ஆரம்பிக்கிறார்கள்.
பொதுவாக ஆட்டோகாரர்கள் மிகுந்த கஷ்டத்துடன் வேலைசெய்வதாகவும், பயணிகளான நமக்காக சேவை மனப்பாண்மையுடன்
செயல்படுவதாகவும் ஒரு எண்ணம் சிலரிடையே உண்டு. இவ்வளவு கடினமான வேலையை அவர்கள் செய்ய பயணிகளை துரத்திவந்து பிடிப்பது
ஏன் என்றுதான் புரிவதில்லை. அவர்களின் அன்றைய நாளின் மிகப்பெரிய காரியமே யாரை எப்படி ஏமாற்றலாம்
என்பதுதான். ஆட்டோ ஓட்டுவதை
நேர்மையான ஒரு செயலாக ஆட்டோ ஓட்டுநரே நினைப்பதில்லை. எப்படி அரசாங்க வேலையில் லஞ்சம்
கூத்தாடுகிறதோ அதுபோல. ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறேன் எனபதை நேர்மையில்லா வேலை என்றுதான்
எடுத்துக்கொள்ளவேண்டும். சென்னையில்
மிக குறைவான நபர்கள் மட்டுமே ஆட்டோவை நேர்மையாக பணம் வாங்குபவர்கள்.
Subscribe to:
Posts (Atom)


