சின்னம்மா அம்மா ஆவதும், அம்மா
பெரியம்மா ஆவதும் மிக இயல்பாக நடக்கப்போகிறது. இந்த இயல்பான மாற்றமாக ஆவதைதான் பொறுக்கமுடியாமல்
சங்கடப்படுபவர்கள். கோபப்படுகிறார்கள். விமர்சிக்கிறார்கள். ஏன் கீழ்தரமாக இறங்கிவந்து
எதிர்வினையாற்ற வேண்டும். முதலில் அவர்கள் எதிர்ப்பார்த்தது இதுவல்ல. 89ல் நடந்ததுபோல்
இரண்டாக, மூன்றாக உடைந்திருக்க வேண்டும். ஒரு தலைமை வேறொருவருக்கு கைமாறும்போது மிகபலமான
மோதல்களுடன் அது நிகழவேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் இங்கே நினைத்ததற்கு மாறாக
எப்படி முதல் தலைமை இருந்ததோ அதேபோலவே இந்த தலைமையும் இருக்கிறது. அதே போன்ற வழிபடுதல்கள்,
அடிபணிதல்கள் என எல்லாமும் தொடகிறது.
Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Sunday, January 8, 2017
Tuesday, December 6, 2016
ஜெயலலிதா என்னும் மனுஷி
இரண்டாம் முறை ஆட்சியை பிடிப்பவர் இறந்துவிடுவார் என்கிற வாட்ஸ்ஸப் வதந்தி இன்று உண்மையாகிவிட்டது. எம்ஜியார் இரண்டாம் முறை ஆட்சியை பிடித்ததும் (நடுவில் ஒருமுறை கவர்னர் ஆட்சிவந்தது) அவர் இறந்தார். பல்வேறு உடல் பிரச்சனைகள் எம்ஜியாரைப்போலவே ஜெ.வுக்கு ஏற்பட்டு காலமாகியிருக்கிறார். அவரின் மரணம் எதிர்பாராத மிக அசாதாரமான சூழலில் நடந்திருக்கிறது. அவருக்கென்று வாரிசுகள் யாரையும் காட்டாமல் அவர் இறந்திருக்கிறார். ஜெயலலிதா எப்படி எம்ஜியாரின் இறப்பிற்கு பின்னே உருவாகி வந்தாரோ அப்படி யாராவது உருவாகி வரவேண்டும்.
ஜெயலலிதா கட்சியை பிடிக்கவும், ஆட்சியை பிடிக்கவும் ஏற்பட்ட சிரமங்களை போலவே எதிர்கட்சியினரை சமாளிக்க மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது. 89ல் சின்ன கட்சியாக அவர் சட்டமன்றத்தின் உள்ளே வந்தபோதே மக்களாலும், அரசியலார்களாலும் அத்தனை வெறுப்புடன் பார்க்கப்பட்டார். சட்டமன்றத்திலேயே தாக்கப்பட்டார். முழுமையாக விரட்டப்படவேண்டும் என்கிற வெறியில் எழுந்த பல்வேறு அவதூறுகளால் தொடர்ந்து வசைப்பாடபட்டார். இந்த ஒன்றே அவரை தொடர்ந்து அரசியலில் இருக்க செய்துவிட்டது.
Tuesday, January 27, 2015
பெயரா பட்டமா: ஈவேராவா பெரியாரா
சில ஆண்டுகளுக்கு முன்னால், என்னை பேர் சொல்லி அழைக்கும் அளவிற்கு
தமிழகத்தில் தரம் தாழ்ந்திவிட்டது என்றார் திமுகவின் தலைவர். அப்போது அவர் ஆட்சியில்
இருந்து இறங்கியிருந்தார், எதிர்க்கட்சியாககூட
இல்லை.
அதேபோல் ஒரு சமயம் ஆட்சியில் இருந்தபோது அதிமுக தலைவியை
புரட்சி தலைவி என்று மேடையில் சொல்லாமல் பெயரைச் சொன்னதால் இயக்குனர் மனிரத்தினம் வீட்டில் குண்டுவிசப்பட்டது. இதேபோல் பல்வேறு சமயங்களில் ஆட்சியில் இருப்பவர்களை
அவர்களின் பெயர்களை மட்டும் சொன்னதால் பல இன்னல்களை சொன்னவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
ஆட்சியில் இருப்பவர்களை எதாவது ஒரு பட்டபெயர் சொல்லியே அழைக்க
வேண்டும் என்கிற கட்டாயம் தமிழகத்தில் உண்டு. விதிவிலக்காக ஈவேரா, அவரை பெரியார் என்றோ, வைக்கம்வீரர் என்றோதான் அழைக்க வேண்டும்
என்கிற கட்டாயம் இப்போதும் இருக்கிறது. கர்மவீரர் காமராஜர், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜியார், புரட்சிதலைவிஅம்மா ஜெயலலிதா, தளபதி ஸ்டாலின், கேப்டன் விஜயகாந்த், வைகோ (பெயரை முழுமையாக சொல்லக்கூடாது). அவர்களின் பெயர்களை இந்த பட்ட பெயர்களோடு
சேர்த்து மட்டுமே அழைக்க வேண்டும். ஆனால் சிலரை பட்டபெயரை மட்டுமே சொல்ல வேண்டும் என்றும்
விதியிருக்கிறது.
எம்ஜியார் தமிழ்ப் பல்கலைகழகம் ஆரம்பித்தபோது மேடையில் இருந்த
துணைவேந்தர், மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
என்று அழைத்தார். எம்ஜியார் எதுவும் சொல்லாமல் இருந்தார், அதற்கு பின்னால் துணைவேந்தருக்கு எந்த
நெருக்கடியோ, நீர்பந்தமோ ஏற்படவும்வில்லை.
ஆனால் சாதாரணம் தமிழக அரசியல் மேடையில் எப்போதும் சின்ன
மாவட்ட தலைவர்,
செயலர்களை ஒரு பட்டத்தோடுதான்
அழைக்கப்படுகிறது. புரட்சி சுகுமாரன், தளபதி வெங்கட், சின்னதளபதி சுரேஷ், என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டம் இருக்கிறது. பட்டம் இல்லாதவர்
அவ்வளவாக பிரபலமாகாதவர். பட்டத்தால்
என்ன பயன்? ஒன்று அவரின் பெயர் பட்டத்தோடு
சேர்ந்து வருவதால் தன் பெயருக்கு ஒரு மதிப்பு கூடுவதாக நினைக்கிறார். மற்றொன்று தனக்கான
ஒரு அடையாளமாக அதை நினைப்பது.
தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் அண்ணன் என்றோ, அவரின் சர்நேம் (இரண்டாம் பெயர்) கொண்டோ
அழைத்தால் அவர் மரியாதைச் செய்யப்பட்டதாக் நினைக்கிறார். நமக்கு இரண்டாம் பெயர் இல்லாததால், அல்லது பயன்பாட்டில் இல்லாததால், இந்த மாதிரியான பட்டங்கள் தேவைப்படுகின்றன
என நினைக்கிறேன். பொதுவாக
அவர்கள் தங்களை அரசியலில் வரவழிவகுத்த தலைவர்களின் அல்லது தங்கள் கட்சியின் தலைவர்களின்
பட்டங்களை சுருக்கி அல்லது நீட்டி தனக்கு வைத்துக்கொள்பவர்களாக் இருப்பார்கள். இதனால் அவர் இன்னாரின் அடிபொடி
என்று தெரிந்துவிடும் நன்மை இருக்கிறது. இது எதிர்களுக்கு ஒரு சவாலாகவும், தனக்கு கீழுள்ளவர்களுக்கு ஒரு தன் தலைமையின்
நெருக்கத்தை உணர்த்துவதுமாக இருக்கிறது.
Monday, April 11, 2011
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..
குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை , சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.
ஏனென்றால் ,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது ,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ ,பங்கோ கிடையாது.
இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...
குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ. 50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
ஆனால்... இன்று..
அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
மீண்டும் உங்கள் நினைவிற்கு..
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது ,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ ,பங்கோ கிடையாது
- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
- இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
- Tata, Hyundai, Ford, Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
இந்தியாவின் No. 1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக் களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம், சட்டம்/ஒழுங்கு)

இந்தியாவின் No. 1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்
நாமும் No. 1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)
அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை ??
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.
அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை ??
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய ,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.
இதில் நாம் தவறிழைத்தாலோ ,அடிபணிந்தாலோ,ஏமா ந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.
நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய ,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.
இதில் நாம் தவறிழைத்தாலோ ,அடிபணிந்தாலோ,ஏமா
உலகம் நம்மை காரி உமிழும்.
நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!
(மின்னஞ்சலாக வந்த செய்தி அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அளிக்கப்பட்டுள்ளது)
Subscribe to:
Posts (Atom)