சில வருடங்களுக்கு முன்பு ஒரு கோயிலுக்கு அன்னதானத்திற்காக சென்றிருந்தோம். புளிசாதம், தயிர்சாதம், போன்ற அயிட்டங்களை எடுத்துக்கொண்டு ஒரு குடும்ப வேண்டுதலின் பொருட்டு அடையாறை தாண்டி இருந்த ஐயப்பன் கோயிலில் இவைகளை அங்குவரும் பக்தர்களுக்கு அளிக்க சென்றோம். உண்மையை சொல்வதென்றால் அப்படி செல்வது அதுதான் முதல் தடவை. நானும் என்னுடன் வந்த ஆண் பெண்களாக இருந்த உறுப்பினர்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது. கோயில் நிர்வாகத்திடம் பேசி ஒரு இடத்தில் அமர்ந்து வைத்திருந்த வாளிகளை திறந்து சிரித்த முகத்துடன் மனிதர்களை நோக்கினால், சட்டென ஒரு மனித வட்டம் எங்களைச் சுற்றி இருந்தது. ஒருவர் தட்டைக் கொடுக்க அடுத்தடுத்து நபர்கள் சாதங்களை வைத்து ஊறுகாய் ஒருவர் வைக்க, கூட்டு ஒருவர் வைக்க என திட்டம். ப்ளாஸ்டிக் தட்டுகள் எங்களிடமிருந்து பிடுங்கப்பட்டன. இருங்கள் தருகிறோம் என்பதை யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை. கடகடவென தட்டு உடைய கையை நீட்ட வைங்க வைங்க என்றார்கள். ஒரே களேபரமாக இருந்தது. ஏங்க இப்படி அவசரபடுறீங்க என்றதற்கு, குண்டான ஒரு பெண்மணி தரமாட்டீங்களா, தருவீங்களா மாட்டீங்களாங்க, எனக்கு கொடுங்கங்க என்றார். நிஜமாகவே அந்த நேரம் எரிச்சலாக இருந்தது. எங்களை குனிந்து எடுக்ககூட மக்கள் விடவில்லை. அத்தனை அவசரம். அங்கிருந்த மக்களுக்கு தேவையான உணவுகள் அங்கு இருந்தன. ஆனால் அவர்கள் செய்த அவசரத்தில் பாதியாவது வீணாயிருக்கும். சாப்பிட்டுவிட்டு அந்த தட்டுகளை கண்ட இடத்தில் எறிந்துவிட்டு சென்றார்கள். அவர்கள் படித்தவர்கள்தான். ஆனால் சாதாரண எளிய மக்கள். அவர்கள் நினைத்திருந்தால் 15 நிமிடங்களில் எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படி செய்திருக்க முடியும்.
Showing posts with label வெள்ளம். Show all posts

Tuesday, December 8, 2015
நிஜ நிவாரணம்

Thursday, December 3, 2015
வெள்ளமும் வெறுப்பும்
திருவல்லிக்கேணியில் இருந்த காலத்தில் ஒருமுறை பெரிய மழைவந்தது.
பேச்சலர்களாக சில நாட்கள் சரியான உணவு கிடைக்காமல் அழைந்திருக்கிறோம். ஒரு முறை பெல்ஸ்
ரோடு திருப்பத்தில் வரும்போது மழை பிடித்துவிட்டது. மூடிய கடையின் ஓரத்தில் ஒதுங்கிய பலரில்
நானும் ஒருவன். அங்கு ஏற்கனவே சிலர் இருந்தனர். ஒரு பக்கத்தில் ஒரு கல்லின் மேல் தன்
10 மாத இருக்கும் குழந்தையை ஒரு
சுருட்டியதுணியில் வைத்தபடி அமர்ந்திருந்தார். பார்த்ததும் லேசாக மனது பதறியது. இந்த
அடைமழையில் எப்படி நனையாமல் போகபோகிறார் என்று. அவர் ரொம்ப நேரம் அங்கு இருப்பதாக தோன்றியது.
அவரின் உடை ஸ்டைலில் அங்கு பக்கதில் இருக்கும் சேரியில் இருக்கும் மனிதர் என தெரிந்தது.
கசங்கிய லுங்கியும் சட்டையும் அணிந்து கலைந்த தலையுமாக இருந்தார். அவரின் மேலேயும் தூங்கும் குழந்தையின்
மேலேயும் இருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை.
Subscribe to:
Posts (Atom)