Showing posts with label புத்தகக் கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தகக் கண்காட்சி. Show all posts

Saturday, January 14, 2017

வாசிப்புசூழலும் தேவையும்



வாசிப்பு தனிநபர்களின் அடையாளம் என்று உணர கொஞ்சகாலம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மிககுறைவான சதவிகிதத்தினர் என்றாலும் இன்று வாசிப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். புத்தகத்தை பரிசளிப்பது இன்று ஒவ்வொருவரிடையே தொடங்கியிருக்கிறது. புத்தகம் குறித்து பேசும் பேச்சரங்கங்கள், கூடல்கள் எல்லா ஊர்களிலும் ஆரம்பமாகியிருக்கின்றன. வயதானவர்கள் பழந்தமிழ், பக்தி இலக்கியங்களை கூடி பேசுவது எல்லா ஊர்களிலும் இருப்பதைபோல நவீன தமிழ் இலக்கியத்திற்கும் கவிதை, சிறுகதை, நாவல்கள் குறித்து பேசுபவர்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது முகநூல், வாட்ஸப் மூலமாக அறியமுடிகிறது. அதேபோல இந்திய/தமிழக வரலாறு குறித்த பார்வைகள் விரிவடைந்திருக்கின்றன. கோயில் கல்வெட்டுகள், குகைப்பயணங்கள் போன்றவைகளை எல்லா தரப்பினருமே முன்னெடுத்து செல்கிறார்கள்.

Friday, January 10, 2014

நான் விரும்பும் பதிப்பகங்கள்








தமிழில் பதிப்பகங்களுக்கு குறைவேயில்லை. பதிப்பக பட்டியலை மேலோட்டமாக நோக்கினாலே அதன் எண்ணிக்கை ஐநூறுக்கு மேலாக‌ இருக்கும் என தெரிந்துவிடும். ஒரு 100க்கு மேற்பட்ட பதிப்பகங்கள் தீவிரமாக செயல்படுபவைகளாக இருக்கும். சில தொடர்ந்து செயல்படுவைகளும், சில தன் பழைய புத்தகங்களையே திரும்ப திரும்ப அச்சிட்டு வெளியிடுபவைளும் உள்ளன. பல பதிப்பகங்கள் எதாவது ஒரு கட்டத்திலாவது தீவிரமாக செயல்படுபவையாக இருக்கின்றன.