சில நாட்களுக்கு முன்பே அப்துல் கலாம் அவர்களின் தலையலங்காரம்
பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன் முகநூலில். அவருடைய தலையலங்காரம் அவரின் சிறுவயதிலிருந்து
தொடர்ந்து வருவதை பல புகைப்படங்களில் காணமுடிகிறது. ஒரு படம்கூட அந்த ஸ்டைல் இல்லாமல்
இல்லை. காதுகள் சற்று படர்ந்திருக்கலாம் அதை மறைக்க அப்படி செய்திருக்கலாம் என நினைக்கிறேன்.
ஆனால் அவர் தன் வாழ்வில் எதையும் மறைக்காமல் ஒளிவுமறைவு இன்றி இருப்பதாக தெரிகிறது.
அவரது ஆசிரியர்கள், நண்பர்கள், அவரது தனிப்பட்ட கொள்கை,
அவரது பேச்சுகள்
என்று எல்லாமே வெளியே தெரியும்படி இருக்கிறது. ஒரு முஸ்லீமாக இருந்து இந்து ஆசிரியரின்
சீடராக தான் பெற்ற கல்வி அறிவைப் பற்றியும் அதன் பின்னால் தன் வாழ்வில் நடந்த பல்வேறு
விஷயங்களை சொல்லியிருகிறார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போது கீதையின் வரிகளை மீடியாவில்
சொன்னபோது சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.
எந்த புறசக்திகளின் அழுத்ததிற்கு ஆட்படாமல் இருந்ததே தனிமனிதனாக அவர் செய்த சாதனை. அணுவிஞ்ஞானியாக ஆரம்ப நாட்களில் அவர் செய்த சாதனைகளை இன்று யாரும் நினைத்து பார்க்க போவதில்லை. அவர் செய்த சாதனைகள் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பும் இல்லை என்பதுதான். விஞ்ஞானியாக அவர் செய்த முயற்சிகள் சோதனைகள் அனைத்தும் ஒரு எல்லைக்கு உட்பட்டது. முறையான கண்டுபிடிப்புகளுக்கு உரியவை அல்ல என்பதனாலேயே அவர் கண்டுகொள்ளாமல் விடப்படுவார். ஆனால் அவருக்கு எந்தவிதத்திலும் நஷ்டமாக அதை நினைக்கவில்லை.
இந்தியா 2020 என்கிற கனவுகளுடன் அவர் இந்தியாவை
வலப்படுத்த வேண்டும் என நினைத்திருந்தார். சோ மாதிரியான மீடியா ஆட்கள் கிண்டல் அடித்ததை
கவனித்திருக்கலாம். கனவு காண சொல்கிறார், என்ன ஒரு தலைவர் என்று கிண்டல்
அடிக்கப்பட்டார். கலாம் என்றால்
கலகம் என்று முகவும் சொல்லியிருக்கிறார். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அவர் ஒரு பொம்மையாக
தெரிந்தார் என்றே சொல்லலாம். இன்று அவர் இறந்ததும்கூட அவர்களுக்கு ஒன்று பெரிய தாக்கத்தையோ
அதிர்ச்சியையோ ஏற்ப்படுத்தப்போவதில்லை. அவர்களுக்கு வெறும் சொற்களாக அவர் மாறியிருப்பார்.
மீண்டும் அவர் ஜனாதிபதியாக ஆகியிருக்கும் வாய்ப்பு இருந்தது.
நம் அரசியல் தலைவர்கள் முயற்சித்திருந்தால் நடந்திருக்ககூடியதுதான். அந்த நேரத்தில்
திமுகாவால் முடிந்திருக்கும் எப்படி மூப்பனார் பிரதமராக ஆகியிருக்க முடியுமோ அப்படி.
அறிவியல் படிக்கும் ஆர்வமிக்க மாணவர்களுக்கும், அவரது நூல்களை வாசிக்கும் வாசகர்களுக்கும்
அப்துல் கலாம் ஒரு பெரிய ஆளுமையாக தெரிவார். அதுவே அவர் விரும்பிய சாதனையாகவும் இருக்கும்.
அரசு வழங்கிய ஒரு இல்லத்தில் தன் இறப்பிற்குபின் விடுமுறை
வேண்டாம் என்று கூறிக் கொண்டு ஜனாதிபதி மாளிகையிலிருந்து எளிய மனிதராக வெளியேறினார்.
அதுவே அவரது தூய உள்ளத்திற்கு அடையாளம். அவர் இறப்புகூட மிக உன்னதமாக அமைந்தது. மேடையில் பேச்சினூடே மயங்கி
விழுந்தார். அமைதியாக இறந்தார். அவருக்கு நம் சிறிய அஞ்சலிகள்.
அப்துல் கலாம் அவர்களின் முக்கியமான உரைகளுக்கு அவர் ஐநாவில்
பேசிய பேச்சு சிறந்த உதாரணம்.
https://www.youtube.com/watch?v=48KGnG3qOVs
1 comment:
கனவுகளை விதைத்தது அவரின் சொல்வன்மையால் மட்டுமல்ல, சொல்லும் செயலும் ஒன்றாக அமைந்த காரணத்தினால். அனைவரும் அவரின் சிறப்பியல்புகளை நினவு கூர்கிறார்கள். நன்றியுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
Post a Comment