சில நாட்களுக்கு முன்பே அப்துல் கலாம் அவர்களின் தலையலங்காரம்
பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன் முகநூலில். அவருடைய தலையலங்காரம் அவரின் சிறுவயதிலிருந்து
தொடர்ந்து வருவதை பல புகைப்படங்களில் காணமுடிகிறது. ஒரு படம்கூட அந்த ஸ்டைல் இல்லாமல்
இல்லை. காதுகள் சற்று படர்ந்திருக்கலாம் அதை மறைக்க அப்படி செய்திருக்கலாம் என நினைக்கிறேன்.
ஆனால் அவர் தன் வாழ்வில் எதையும் மறைக்காமல் ஒளிவுமறைவு இன்றி இருப்பதாக தெரிகிறது.
அவரது ஆசிரியர்கள், நண்பர்கள், அவரது தனிப்பட்ட கொள்கை,
அவரது பேச்சுகள்
என்று எல்லாமே வெளியே தெரியும்படி இருக்கிறது. ஒரு முஸ்லீமாக இருந்து இந்து ஆசிரியரின்
சீடராக தான் பெற்ற கல்வி அறிவைப் பற்றியும் அதன் பின்னால் தன் வாழ்வில் நடந்த பல்வேறு
விஷயங்களை சொல்லியிருகிறார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போது கீதையின் வரிகளை மீடியாவில்
சொன்னபோது சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.
Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts
Tuesday, July 28, 2015
Tuesday, July 14, 2015
அஞ்சலி: எம்எஸ்வி
எந்த விருதுகளும் இல்லாமல் மக்கள் மனதை கொள்ளைக் கொண்ட எம்எஸ்வி, ஏஆர்ரகுமான், இளையராஜாவைவிட மிக இளம்வயதில்
(25) இசையமைக்க வந்துவிட்டார். ஐம்பதுகளில்
ஆரம்பத்திலிருந்து 80கள் இறுதிவரை தொடர்ந்து நல்ல பாடல்களை
கிட்டதட்ட 30 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியுள்ளார். 90களிலும் 2000க்கு பின்னும் சில படங்களில் பாடியும், மெட்டமைத்தும் உள்ளார். அதாவது கிட்டதட்ட 65 ஆண்டுகள் தொடர்ந்து
சினிமாவில் இசைத்துறையில் இருந்துள்ளார். எந்த சலிப்பும் இல்லாமல் அவர் உழைத்ததாக சொல்வார்கள்.
அதேபோல் எந்த சலிப்பும் இல்லாமல் அவர் பாடல்களைக் இன்றும் கேட்க முடிகிறது. 77ல் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தின் சம்மோசிவ சம்போ பாடல்
அவர் இசையமைத்தவைகளிலும் பாடியவைகளிலும் சிறந்ததாக நினைக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)

