Thursday, July 9, 2020

நீங்களும் உங்க சாதியும்

ஒரு விஷயம் பற்றி எழுதிவிட்டால், அதன் எதிர்வினைகள், அதற்கான பதில்கள், அதன் விவாதங்கள் செல்லும் திசையறிந்து அவற்றை பற்றி இறுதியாக, முடிவாக என்று பல கட்டுரைகளை எழுதி நிறைவு செய்கிறார் ஜெயமோகன். சமீபத்தில் ராஜன்குறை, ஜெயரஞ்சன், ஆனந்தி (எம்எஸ்எஸ் பாண்டியன்) 20 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை குறித்து எழுதியிருந்தார். இதற்கு முன்பே பலர் சுட்டியிருந்தாலும் கவனம் பெறவில்லை. இப்போது அவரே அந்த கட்டுரையின் அறவியல் குறித்து கவனம் பெறவைக்க பல வழிகளில் முயற்சிக்கிறார். அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து இவ்வளவு விவரங்கள் செய்திகளை கொட்டிய பின்னும் பெரிய மாற்றத்தை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

கட்டுரை
குறித்து பல எதிர்வினைகள் வந்தாலும் யாரும் அதன் உள்ளடக்கத்தைப் பற்றி பேசாமல் தவிப்பதை பார்க்க வேடிக்கையாகதான் இருக்கிறது. சாதி எதிர்ப்பாளர், சாதிமறுப்பாளர் என்று அடைமொழி வைத்தவர்கள் ஒரு வார்த்தை பேசவில்லை அல்லது அதன் உள்ளடக்கம் குறித்து பேசாமல் இதற்கு சம்பந்தமற்ற வேறுஒன்றை பேசுகிறார்கள். ஏன், தலித் ஆளுமைகள், எழுத்தாளர்கள் கூட சப்பைகட்டு கட்டினார்கள். அழகிய பெரியவன் அப்படிதான் செய்தார்.

ஜெயமோகனை எதிர்கிறோம் என்று மட்டுமே சொல்ல எல்லோராலும் முடிந்தது, எனக்கு தெரிந்து டி.தர்மராஜ், .பி.ராஜசேகர் தவிர மற்றவர்கள் எதையும் பேசவில்லை. ஸ்டாலின் ராஜாங்கம், சுரேஷ் பிரதீப் போன்றவர்கள் கூட இதைப் பற்றி எதையும் பேசாதது அல்லது சிறு எதிர்வினையாற்றாதது என்பது சற்று அயர்ச்சியாகதான். இருக்கிறது. இதெல்லாம் எதற்காக என புரியவில்லை. அணி திரள்வதுதான் வெற்றியா? இந்த போக்கை முன்பே அறிந்துதான் இருக்கிறார்களா? சரி சில அரசியல் மேல்நிலை ஆதிக்க வாதிகள் இப்படி செய்யலாம். கீழே இருக்கும் ஆரம்பநிலையாளர்கள் எல்லாம் எப்படி தங்களை பயிற்றுவித்துக் கொள்கிறார்கள்.
திராவிட, கம்யூனிச கொள்கைகள் எல்லாம் சாதியஅபிமானங்களுக்கு மேலானவை என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். அவை போலியானவை என்று இந்த கட்டுரையின் எதிர்வினையை வைத்தே அறிந்துக் கொள்ள முடிகிறது. பிறகு வேறென்ன வேண்டியிருக்கிறது.

போங்கையா நீங்களும் உங்க சாதிய கொள்கையும்.

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஓஹோ? இப்படியும் உள்ளதோ?

கரந்தை ஜெயக்குமார் said...

சாதிய உணர்வுகள் இன்று அதிகரித்துத்தான் போய்விட்டன