Monday, August 31, 2015

பாண்டம் - பிசாசு

 உண்மை சம்பவத்திற்கு பழிவாங்குதல் ஒன்று நடப்பதுபோல கதை சித்தரிப்பது ஒருவகை கதைகூறல் முறை. சம்பவம் மட்டுமே உண்மை, பழிவாங்குவது நடந்ததுபோல‌ கதைசொல்வது. கதைவிடுவது என்று சொல்லலாம். ஆனால் உண்மைக்கு சமமாக இதுவும் நடந்துள்ளது என்று சொல்வது அத்தனை எளிதானது அல்ல. சம்பவங்களும் சொல்லும்முறையும் மிக அழகாக உண்மையோடு ஒத்துபோகவேண்டும். 26/11/08 அன்று மும்பையில் தாக்குதல் நடந்தது. அதற்கு முக்கிய தீவிரவாதிகள் 3 பேர் இந்தியாவர சிலர் பாகிஸ்தானிலிருந்து அவர்களுக்கு சாடலைட் போனில் கட்டளைகளை பிறப்பித்து 166 பேர்களை சுட்டுக்கொன்றார்கள். 300க்கு மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
இந்த சம்பவம் நடந்து அதன் குற்றவாளியான கசாப் தூக்கிலிடப்பட்டான். அதன் பின்னனியில் உள்ளவர்கள் இன்றும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அந்த குற்றவாளிகள் தகுந்த பாதுகாப்போடுதான் இருக்கிறார்கள். ஹெட்லி எனப்படுபவன் அமெரிக்காவிலும், ஹபீஸ் போன்றவர்கள் பாக்.கிலும் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.
கதைப்படி அந்த இருவரும் அவர்களோடு சேர்ந்த மற்ற இருவரையும் கொல்கிறார்கள். அதாவது பழிக்கு பழி வாங்குகிறார்கள். இந்தியாவில் இருக்கும் ரா அமைப்பு, அதன் மேலிட உத்தரவின்றி அதிலிருக்கும் முக்கியமான நான்கு பேர்கள் சேர்ந்து இந்த பழிவாங்குதலை அரங்கேற்றுகிறார்கள். மேலிட உத்தரவு என்பது உள்துறையின் ஒப்புதல் இல்லாமல். ஆகவேதான் நமக்கு சென்சார் போர்ட் ஒப்புதல் கிடைக்கும். இந்த மாதிரியான படங்கள் டாக்குடிராமா என வகைப்படுத்தபடுகின்றன. ராம் கோபால் வர்மாவின் கிட்டத்தட்ட எல்லா படங்களும் இப்படிதான் இருக்கும். சில படங்கள் சுவாரஸ்யமாக அமைந்துவிடுவது உண்டு. சில அப்படி அமையாது. இந்த படம் நடந்தது நடக்காததும் கலந்து உள்ளன.


இந்திய ராணுவத்திலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட ஒருவரை கொண்டு இதை அரங்கேற்றுகிறார்கள். அவர் லண்டன் சென்று ஒருவரை கொலை செய்கிறார் பின் அமெரிக்கா சென்று அங்கு சின்ன குற்றம் செய்து சிறையில் இருக்கும் ஹெட்லியை கொலை செய்கிறார். பின் பெய்ரூட் வழியாக சிரியா வந்து அங்கு ஒருவரை கொலை செய்கிறார். அங்கிருந்து பாகிஸ்தான் வந்து ஹபீஸை கொலை செய்கிறார். கடலில் கப்பலில் வரும்போது பாக். ராணுவ தாக்குதலில் காயம்பட்டு இறந்துவிடுகிறார். அவருடன் கூடவே லண்டனில் ஒட்டிக்கொண்ட பெண் இந்திய ராணுவத்தால் காப்பாற்றப்படுகிறார்.
காட்டப்படும் ஒவ்வொரு இடமும் மிக துல்லியமாக இருக்கிறது. அங்கேயே சென்று பிடித்தார்களா அல்லது செட் அமைத்து செய்தார்களா என்று தெரியவேயில்லை. சமீபகாலமாக இந்தி திரைப்படங்கள் மிக அருமையாக எந்தவித ஐட்டம் சாங்க் போன்ற கவன சிதறல்கள் இல்லாமல் எடுக்கிறார்கள்.
உலகம் முழுவதும் பார்க்கபடுகிறது என்கிற ப்ரஞ்சையோடு அந்த புரிதலோடு எடுக்கிறார்கள் என தோன்றுகிறது. உதாரணம் சிரியாவில் சென்று அங்கிருந்து அந்த கூட்டதில் உள்ள ஒரு தலைவனை கொலை செய்ய செல்லுமிடத்தில் காட்டப்படும் இடங்களும் பாகிஸ்தானில் கராச்சியில் ஒரு கடையில் வேலை செய்யும் மக்களை அவர்கள் பேசும் மொழிகளும் அதன் துல்லியமும் அருமை. காரில் தப்பித்து சேஸ் செய்யும் இடத்தில் சந்துகளாக நுழைந்து வரும் இடத்தில் எப்படி அவர்கள் படமாக்கியிருக்கிறார்கள் என்று புரியவில்லை.
கபீர் கான் இதற்கு முன்பே பஞ்ரங்கி பைஜான், ஏக் தா டைகர் போன்ற படங்களை எடுத்திருக்கிறார். பிகே எடுத்த ராஜ்குமார் ஹிரானி மாதிரியான புதிய விஷயங்களை இன்றைய காலத்தை மிக பக்கத்திலிருந்து எடுத்தது போலிருப்பவைகளை தான் கபீர் கானும் எடுக்கிறார் என்று தோன்றுகிறது.
இந்த உழைப்பிற்காகவும் துல்லியத்திற்காகவும் அவரை பாராட்டலாம். தமிழ் படங்களை இவர்களின் படங்களோடு ஒப்பிடும்போது புரியும் வேறுபாடு, மிக அழகாக இல்லாததையெல்லாம் காட்டவேண்டும் என்கிற முனைப்பு தமிழ் இயக்குனர்களுக்கு இருப்பதாக் தோன்றுகிறது. ஆனால் இந்தி இயக்குனர்களிடம் அது இல்லை எது அந்த கதைக்கு தேவையோ அதை மிக அப்பட்டமாக நேரடியாக அதை காட்சிகளாகவே விவரிக்கிறார்கள்.

விஸ்வரூபமும் பாண்டமும் ஒரே கருத்துடைய படங்கள் தான். விஸ்வரூபம் கமலை மட்டுமே அதுவும் இல்லாதவைகளை மெனக்கெட்டு சொல்வதுபோலிருக்கிறது. ஆனால் பாண்டம் செயீப்பை மட்டுமே சுற்றுவதில்லை. அத்தோடு முன்பு சொன்னதுபோல் அப்பட்டமாக சொல்கிறார்கள். அந்த வகையில் நாம் நிச்சயம் பார்த்து தெரிந்துக் கொள்ளவேண்டிய படம்.

No comments: