Thursday, May 21, 2015

இலங்கையின் இளங்குயில்

இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைப்பாடுதோ என்று ஒரு பாடல் 80லில் பிரபல்யமாக இருந்தது. அந்த படத்தில் நடித்தவரும் ஒரு சிங்களப் பெண். படப்பிடிப்பு இலங்கையில் நடந்துள்ளது. எழுபதுகளிலும்கூட‌ பல படங்களில் ஒருவரை காட்டி இவர் இலங்கையில் (சிலோனில்) இருந்தவர், அங்கு வியாபாரம் செய்கிறார் என்று ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி இப்படி சொல்வதாக இருக்கும். பாடல்களில் கொழும்பு, மட்டகளப்பு, இளநீர் என்ற வார்தையெல்லாம் இருக்கும். கமல் நடித்த புன்னகை மன்னனில் சிங்கள நண்பர்கள் வருவார்கள். யுத்தம் வந்தபின் இலங்கை சம்பந்தமான எந்த விஷயமும் இடம்பெறுவதில்லை. கவனமாக தவிர்க்கப்படுகிறது. அல்லது அரசியல் நிர்பந்தம் எதுவும் ஏற்படும் என்கிற பயமும் இருக்கலாம்.
ஆனால் ஒரு மலையாளப் படம் இலங்கை மண்ணின் பின்ன‌னியில் எடுக்கப்பட்டிருந்ததை டிவியில் ஒளிப்பரப்பும்போது காணமுடிந்தது. மலையாள மக்கள் இலங்கையில் இணக்கமாக இருப்பதாக தெரிகிறது. இலங்கை தமிழர்களில் 50% மலையாளிகள்தான். என்பதுகளின் ஆரம்பம் முதல் 2000 வரை எந்த தமிழ் படத்திலும் இலங்கையின் பின்னனியும் அல்லது இலங்கை சம்பந்தமாக எதுவும் இல்லை என்பதை காணலாம். தெனாலி, கண்ணத்தில் முத்தமிட்டாள் போன்றவைகள் கொஞ்சம் சொல்லலாம் அதன்பின்னும் அதிகம் இல்லை. சிங்கம் படத்தில் ஒரு சிங்களர் வருவதை தவிர பெரியதாக எதுவும் இல்லை.

Tuesday, May 19, 2015

அரசு அதிகாரி

ஒரு அரசு அதிகாரியை எப்போதாவது ஒருமுறையாவது சந்திக்காமல் ஒருவரால் இருக்கமுடியாது. எந்த சூழலில் நாம் சந்திப்போம் என்று தெரியாது, யதேச்சைசயாகவோ அல்லது திடீரென நடக்கும் சந்திப்புகளும் நம்மை அதிர்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் அளிக்ககூடியவைகள்படுத்தக்கூடியது. நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றபோது அங்கு ஒரு அப்படி ஒருவரை சந்திக்க நேரலாம், அல்லது வண்டியில் ஹெல்மெட் இல்லாமல், அல்லது ராங் சைடில் வந்து மாட்டிக்கொள்ளும்போது டிராபிக் போலீஸ்காரரிடம் சிக்கி கொள்ளலாம். இதெல்லாம் தெரியாமல் நடப்பது. ஈபி பில் கட்ட செல்லும்போது, பஸ்டிக்கெட் பதிவு செய்யும்போது, கெசடட் ஆபீசரிடம் கையெழுத்து வாங்க செல்லும்போது, அல்ல‌து அரசு அலுவலகவேலையாக செல்லும்போது என்று பல சமயங்களில் நாம் அரசு அதிகாரிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.
நிஜமாகச் சொல்லுங்கள் எல்லோருக்கும் அச்சந்திப்புகள் இயல்பாக, நட்பாக அல்லது நல்ல மனநிலையோடு வெளியே வந்திருக்கிறீர்களா? நான் கல்லூரியில் படித்தபோது ஒரு கெசட்டட் ஆபீசரிடம் கையெழுத்து வாங்க செல்ல வேண்டியிருந்தது. ஒரு அரசு தேர்வுக்கு விண்ணப்பம் அனுப்ப நாளை கடைசிநாள் இன்றுதான் அனுப்பவேண்டியிருந்தது இரவு யாரிடமாவது கையெழுத்து வாங்கி ரெயில்வே தபால் அலுவலகம் மூலம் அனுப்ப முடியும் என என் ந‌ண்பர்தான் வற்புறுத்தினார். ஆகவே அருக்கு தெரிந்த ஒரு அரசு அதிகாரி வீட்டிற்கு 7 மணிவாக்கில் கையில் அனைத்து பேப்பர்களுடன் சென்றோம்

Sunday, May 17, 2015

குடும்பப் பெண் எழுத்தாளர்கள்


குடும்ப பெண்கள் என்பது தான் மாதிரி குடும்பபெண் எழுத்தாளார்களும். அவர்களின் எழுத்துக்களில் குடும்பமும் குடும்ப பிர்ச்சனைகளும் குறிப்பாக குடும்பத்தை தாண்டி இருக்கும் மற்றயவைகளெல்லாம் தீயவை என்ற பொருளிலும் இருக்கும். குடும்ப பிர்ச்சனைகளை எவ்வளவுதான் சொல்லிவிடமுடியும். 20வயது பெண்ணின் ரொமாஸ்சிலிருந்து 60 பெண்களின் மாமியார் மருமகள், நாத்தனார், கொழுந்தியாள் என்று பிர்ச்சனைகளும் அதன் ரூபங்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

முன்பு லக்ஷ்மி, இந்துமதி, சிவசங்கிரிக்கு பின் நடுவில் ரமணி சந்திரன் வந்து அதற்குப்பின் இப்போது பெரியளவில் பெண் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மார்க்கெட் இருப்பதும் தொடர்ந்து இன்றைய டிவி உலகத்திலும் அவர்கள் எழுத்துக்கள் வாசிக்கப்படுகின்றன.

Saturday, May 16, 2015

தமிழ்சினிமாவின் தற்கொலை


தற்கொலைப் பாதையில் தமிழ்சினிமா அதிர்ச்சி ரிப்போர்ட் என்று ஒரு கட்டுரை தினகரம் சினிமா மலரில் படிக்க நேர்ந்தது. அதன் சாராம்சம் இதுதான் சினிமா நாயகர்களின் சம்பளஉயர்வுதான் தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்துக் கொள்வதற்கு காரணம். ஒரு முதலாளி தற்கொலை செய்துகொள்வதற்கு தொழிலாளிகள் காரணமாக இருக்க முடியுமா என்ன? முதலாளிகளின்/மேலதிகாரியின் தொல்லை தாங்கமுடியாமல் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்வது அல்லது அந்த நிறுவனத்திலிருந்து விலகுவது நடக்கும்.

தமிழ் சினிமா மற்ற சினிமாக்களிலிருந்து மாறுபட்டு இருக்கிறது. தெலுகு கன்னட சினிமாக்கள் தயாரிப்பாளர்களின் கையிலும் இந்தி சினிமா பெரிய நிறுவனங்களின் கையிலும் மலையாள சினிமா இயக்குனர்களின் கையிலும் இருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா நடிகர்களின் கையில் இருக்கிறது. இதைத் தீர்மானிப்பது யார்? இதை பார்வையாளர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.
சினிமா பார்க்கும் பார்வையாளன் எதை வெற்றியடைய வைக்கிறானோ அதைப் பொருத்துதான் எதுவும் நடக்கிறது. மாராட்டி சினிமா பார்வையாளர்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் நல்ல கதைகளும் சமூகபிரச்சனைகளை அலசும் படங்கள் வரும்போது அவைகளை விட்டுவிடுவதில்லை. தலித் கூலிதொழிலாளியின் பிரச்சனை பேசிய கோர்ட், மூன்றாம் பாலினபிரச்சனையை பேசிய ஜோத் நல்ல வரவேற்பைதான் பெற்றன. தமிழில் அப்படி படங்கள் வருகின்றனவா? வந்தால் வெற்றிப் பெற்றிருக்கிறா? மாற்று சினிமா என்ற ஒன்று தமிழில் இல்லவே இல்லை.

Friday, May 15, 2015

வயோதிகம்


நானும் என் மனைவியும் ஒருமுறை திருவான்மியூரில் இருந்த வயதானவர்கள் தங்கும் ஹோம்க்கு சென்றிருந்தோம். அவரின் அம்மாவின் நினைவுநாளுக்கு அவர்களுக்கு பண உதவி செய்ய பிரியப்பட்டிருந்தோம். மிகச்சிறிய இடம். இடத்தின் தேவைக்கு அதிகமாக தாத்தாவும் பாட்டியுமாக நிறைய பேர் அங்கு இருந்தார்கள். சிலருக்கு இரும்பு கட்டில் சிலருக்கு மடக்கு கட்டில், சிலருக்கு தரையில் பாய் என்று அங்காங்கே இருந்தார்கள். மிக நெருக்கமாக நடக்க மட்டும் கொஞ்சம் இடம் இருந்தது. சரியான கூரை கூட இல்லை ப்ளாட்பாரம் நடையிலெல்லாம் கட்டில் போட்டு வெய்யிலில் படுத்தும் நடந்தும் கிடந்தார்கள்.

அங்கிருந்த பெண்ணிடம் பணம் கொடுத்து ரசீது பெற்றுக் கொண்டும் கிளம்ப நினைத்தோம். அந்த பெண் உங்களுக்கு பணம் உதவி செய்ய வந்திருக்கிறார்கள் என்று பொருவாக ஒரு அறிமுக செய்து விட்டு அவங்கிட்ட எதாவது பேசிட்டு போகனும்னா போய் பேசுங்க என்றார். சற்று தயக்கமாக இருந்தது. என்ன பேசுவது. எதுபேசினாலும் அவர்களின் வயோதிகத்தைதான் பேச வேண்டியிருக்கும். சிலர் எங்களை கவனித்தார்கள். சிலர் கண்டுகொள்ளவேயில்லை. கொடுக்க எதுவும் கொண்டுவரவில்லை. கையிலிருந்த இனிப்புகளை காட்டி சாப்பிடுவீர்களா என்றேன். ஏன் என்று ஆச்சரியமாக பார்த்தார்கள். சுகர் பிரச்சனை என்று லேசாக இழுத்தேன். சாப்பிடவே எதுவும் இல்லை, எங்கேந்து சுகர் வரப்போகுது என்றார் ஒரு முதியவர். சங்கடமாக போய்விட்டது. இருப்பதை கொடுத்துவிட்டு மீண்டும் இன்னும் கொஞ்சம் இனிப்புகளை வாங்கி அவர்களுக்கு அளித்தோம். அவர்களிடம் இருந்தது மகிழ்ச்சியாக, கோபமா என்பதை கடைசிவரை புரிந்துக் கொள்ளமுடியவில்லை.