Monday, July 9, 2012

அதாங்க கருத்து சொல்றேன்...

சமீபத்ய முகநூலில் எழுதிய கருத்துக்கள்.

1. மலையாளிகள் மோசமானவர்கள் என்ற நினைப்பிலிருந்து எதிராகவே இதுவரை இருந்திருக்கிறேன். இந்த சம்பவம் அதை மாற்றிவிட்டதாக நினைக்கிறேன். கொஞ்ச நாள் முன்பு ஆலைகழிவுகள் தமிழக எல்லையில் உள்ள நிலங்களில் கொட்டிவருகிறார்கள் என்ற செய்தி பரவியபோது அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நேற்றைய நாளிதழில் கழிவு அமிலங்களை கேரள வாகனக்கள் ரோட்டோரத்தில் கொண்டிவிட்டு சென்றுள்ளதாக படத்துடன் செய்தியை படித்ததும் நிஜமாகவே அதிர்ந்தேன். இத்தனை கேவலமானவர்களா? சினிமா, பால், காய்கறி, அரிசி, போன்றவகளை இங்கிருந்து கொடுக்கும் நமக்கு இப்படி ஒரு மோசடியா? அத்தனை அப்பாவிகளா நாம்.


இதில் நம் அரசியல்வாதிகள் இதுவரை வாயை திறக்காதது மேலும் ஆச்சரியமாக இருக்கிறது. கருனாநிதி, வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் கம்யூனிஸ்ட்கள் எதுவும் பேசாதது மேலும் ஆச்சரியமே. கார்டூன் பிரச்சனை, இலங்கை பிரச்சனைக‌ளுக்கு குதிகுதியென்று குதிக்கும் இவர்களுக்கு உள்ளூர் பிரச்சனைகள் பெரிதாக தெரியாதது ஏனோ? இதனால் சர்வதேச்/வெளிநாட்டு மக்களின் கவனத்தை பெறமுடியாது என்பதால் தானே? தில்லை கவனம் அல்லது வெளிநாட்டு தமிழ் மக்களின் கவனம் இல்லாமல் ஒரு விசயம் வந்தால் அதை கண்டு கொள்ளாததிலிருந்து இவர்களின் 'அரசியலை' புரிந்து கொள்ளலாம்.


2. சமூக தளங்களில் இருப்பவருக்கு பொதுவாக ஒரு கோல் தேவைப்படுக்கிறது. தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அந்த கோலைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதற்கு இப்போதைக்கு பிரபலமாக இருக்கும் எந்த கொள்கையையும், எந்த அறசீற்றத்தையும் பெயராக வைக்கலாம். அதற்காக அவர்களுக்கு என்ன பணமுடிப்பு கிடைக்கிறதோ தெரியாது ஆனால் 'ரொம்ப நல்லவரு' என்ற பெயர் மட்டும் கிடைத்துவிடுகிறது.

3. நாய் ஆரம்ப நாட்களில் வேட்டையாடும் காலங்களில் மனிதன் கொன்று தின்ற எச்சங்களை தின்று பழக ஆரம்பித்தது. கொஞ்ச நாளில் இவன் பின்னால் போனால் நமக்கு தின்ன ஏதாவது கிடைக்கும் என அவன் பின்னாலேயே செல்ல ஆரம்பித்தது. அவனை பகைத்துக்கொள்ளாமல் நட்போடும் அன்போடும் பழக ஆரம்பித்தது. பிறகு வேட்டைகளுக்கு நாய்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என மனிதன் உணரஆரம்பித்தான். வேலாலும், அம்பாலும் வீழ்த்தபட்ட விலங்குகளை தப்பித்துவிடாமல் தூக்கிவந்தன நாய்கள். இப்படி ஆரம்ப நாட்களிலிருந்தே நாய்கள் மனிதனின் நன்பனாக மாறிவிட்டன‌. அதற்கு பின்னால்தான் பசு, ஆடு, கோழி போன்றவைகள் நட்பாயின.

4. ஆமாம் என்று சொல்ல நெடுக்காக தலையாட்டியும் இல்லை என்று சொல்ல குறுக்காக தலையசைத்தும் சைகை செய்வோம். நாம் குழந்தையாக இருப்பதிலிருந்து இப்படிதான் பழக்கமாகியிருக்கிறது அல்லது பழக்கப் பட்டிருக்கிறது. இது யுனிவர்சல் சைன், எல்லா நாடுகளிலும் இப்படிதான் செய்கிறார்கள். ஆனால் ஆர்டிக் பகுதியில் வாழும் இன்னுட் (எஸ்கிமோ) இன மக்கள் ஆமாம் என்பதற்கு குறுக்காகவும், இல்லை என்பத‌ற்கு நெடுக்காகவும் தலையசைத்து சைகை செய்கிறார்கள்.

5. ஐரோப்பியர்கள் முதன்முதலில் ஆஸ்திரேலியாவிற்கு வந்த போது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை அப்படி ஒரு விலங்கை அவர்கள் பார்த்ததில்லை. கைகளை மடித்து இரண்டு கால்களாலும் தாவிதாவி செல்லும் அவ்விலங்கை பார்த்து அங்கிருந்த ஒரு பூர்வகுடி மனிதனிடம் 'இது என்ன' என்று வினவினார்கள் அதற்கு 'கங்கரு' என்று மதிலளித்தார் அவர். ஒரு புதிய விலங்கை கண்டுபிடித்து பெயர் தெரிந்து கொண்ட சந்தோசத்தில் இருந்தார்கள் அவர்கள். ஆனால் பூர்வகுடி மனிதன் அவர் மொழியில் 'கங்கரு' என்று கூறியதற்கான அர்த்தம் 'தெரியாது' என்பதாகும்.

6. செய்திகள் என்ற வார்த்தைக்கு NEWS என்று ஆங்கிலத்தில் சொல்வோம். அது நான்கு திசைகளான north, south, east, west போன்றவற்றின் முதல் எழுத்தை இணைத்து உருவாக்கப்பட்டதாக கூறுவார்கள். உலகப் போர் சமயங்களில் ஒருவர் மற்றொருவரிடம் யுத்த செய்திகளை அதாவது யார் யாரை தாக்கினார்கள், இன்று எத்தனை பேர் இறந்தார்கல் போன்றவைகளைப் பற்றி பேசும்போது 'இன்றைய NEWS என்ன?' என்று கேட்க ஆரம்பித்தார்கள். அதாவது New என்பதின் பன்மை அதுவே காலப்போக்கில் செய்திகள் என்ற அர்த்ததில் உலாவ ஆரம்பித்தது. பின்னாளில் செய்தியை வரையறுக்கும் போது அந்த வார்த்தையில் உள்ள எழுத்துகள் போல எல்லாம் கொண்டிருக்க வேண்டும் என கூறப்பட்டது. நாளடைவில் அதுவே விளக்கமாக 'தவறாக' கூறப்பட்டுவிட்டது. 'புதியவைகள்' என்பதே செய்திகள்.

7. WACC, ஃபொர்டு பவுன்டேசன் இவங்கல்லாம் யாரும் என்னய இதுவர தொடர்ப்பு கொள்ளலையே? அவிங்க போன் நம்பர் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பூ...

8. அவதூறுகளின் வழியாக தமிழ் இலக்கியம் வளர்கிறதா என்ன? அவதூறுக்கு ஒரு அவதூறு அதற்கு ஒரு அவதூறு என்று வளர்ந்து சென்று சிக்கலானாலும் தெளிவு பிறப்பது என்னவோ உண்மைதான்.

9. வீட்டுப்பெண்களை இழிவுபடுத்துவதாக என் பார்வைக்கு தெரியவில்லை. சும்மா இருந்த பிரதிபா பாட்டிலை கிண்டலடிக்கவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது என நினைக்கிறேன். பிரதீபா குழைகும்பிடு போடும் சமயங்களில் சோனியா திரும்பிகூட பார்க்காமல் இருக்கும் புகைப்படங்கள் நெட்டில் கிடைக்கின்றன.

4 comments:

சித்திரவீதிக்காரன் said...

எல்லாத்தகவல்களும் சுவாரசியாக இருந்தன. பகிர்விற்கு நன்றி.

கே.ஜே.அசோக்குமார் said...

நன்றி, சித்திரவீதிகாரரே, கவனிக்கிறீர்களா இதெல்லாம். ஆச்சரியம்தான்.

Anonymous said...

All malayalis,including Jeymohan.

Tamilan
Qatar

கே.ஜே.அசோக்குமார் said...

அனானிமஸ் தமிழன் உங்கள் பெயரோடு வெளிவந்து சொல்லுங்கள் நிச்சயம் பதிலளிக்கிறேன்.